articles

img

ஒவ்வொரு வேலை நிறுத்தமும் வர்க்கப் புரட்சியின் வித்து - சுதீப் தத்தா

ஒவ்வொரு வேலை நிறுத்தமும் வர்க்கப் புரட்சியின் வித்து

இந்தியா தனது 22ஆவது பொதுவேலை நிறுத்தத்தை இன்று (ஜூலை9) சந்திக் கிறது. பெரும்பாலான மக்கள் இந்த வேலை நிறுத்தங்களை வெறும் சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு போன்ற இன்றைய பொருளாதார பிரச்ச னைகளுக்கான போராட்டங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இப்படி மட்டுமே பார்ப்ப தால், பொதுவேலைநிறுத்தத்தின் உண்மையான அரசியல் சக்தியை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இதனால் வேலைநிறுத்தங்களை முதலா ளித்துவ அரசுக்கும் இந்த ஒட்டுமொத்த அமைப்பு க்கும் எதிரான ஆயுதமாக மாற்ற முடியாமல் போகிறது.

எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்தை எண்ணிக் கையிலும் தரத்திலும் ஆய்வு செய்வது மிக அவசி யம். முதலாளித்துவம் எந்த நிலையில் இருக்கிறது, எப்படி வளர்ந்துகொண்டிருக்கிறது, அதன் மிகவும் மதிப்புமிக்க படைப்பான நவீன தொழிலாளர் வர்க்கம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, எல்லா தொழிலாளர் வர்க்க கட்சிகளுக்கும் இது மிக முக்கியமான பணி.

பெரும் பணக்காரர்களும் அவர்களுடைய ஊடகங்களும் எப்போதும் பொதுவேலை நிறுத் தங்களின் பலத்தை குறைத்துக் காட்ட முயற்சி செய்கி றார்கள். “வேலைநிறுத்தம் பயனில்லை” என்று சந்தே கம் விதைக்கிறார்கள். அவர்களில் பாதி பேர் “வேலை நிறுத்தம் வெற்றி பெறாது” என்று சொல்கிறார்கள்; மீதி பேர் “வேலைநிறுத்தத்தால் ஏழை மக்களுக்கு சிரமம்” என்று புலம்புகிறார்கள். வேடிக்கை என்னவென்றால்,  எப்போதும் மக்களை கொள்ளையடிக்கும் இந்த எஜமா னர்கள் இந்த ஒரு நாளுக்காக, திடீரென்று மக்கள் நல்வாழ்வுக்காக கவலைப்படும் துறவிகளாக மாறி விடுகிறார்கள்!

அவர்களுடைய இந்த பாசாங்குத்தனத்திற்கும் கோபத்திற்கும் ஒரே பதில், தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க உணர்வை உருவாக்குவதும் வளர்ப்பதும், வேலைநிறுத்த நடவடிக்கைகளின் மூலம் நம்முடைய வர்க்கத்தின் பலத்தை காட்டுவதும்தான்.

 

வேலைநிறுத்தத்தின் உண்மையான பலம் இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், வேலை நிறுத்த நடவடிக்கை என்பது நமது சக்தியை நாமே அளந்து பார்க்கும் பயிற்சி. அதாவது நம்முடைய வேலைநிறுத்த சக்தி எவ்வளவு, நம்முடைய அமைப்பு திறன் என்ன, பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்ப வர்களின் உறுதிப்பாட்டின் அளவு ஆகியவற்றை அறிந்துகொள்வது. அதே நேரத்தில், பொதுவேலை நிறுத்த நடவடிக்கை நம்முடைய அரசியல் உணர்வின் அளவையும் சரியாக அளவிட உதவுகிறது. அதாவது உழைப்பாளி மக்கள் மத்தியில் வேலைநிறுத்தத்தின் அரசியல் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளது என் பதை அறிய முடியும். சந்தேகமே இல்லை, பொது வேலைநிறுத்தம் ஒரு பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் புழக்கத்தில் பாதிப்பை உருவாக்குகிறது என்பதல்ல; மாறாக பல்வேறு பரந்து விரிந்த பொருள் களது மதிப்புச் சங்கிலியிலும்,  மதிப்பு குவிப்பின் பல்வேறு நிலைகளிலும் பெரிய தாக்கத்தை உரு வாக்குகிறது. பொதுவேலைநிறுத்தம் நான்கு வர்க்க செயல்முறைகளில் விரிசல்களை உருவாக்குகிறது -  உற்பத்தி, மூலப்பொருட்களை கையகப்படுத்தல், விநியோகம் மற்றும் உபரி மதிப்புகளைப் பெறுதல். இந்த நான்கு செயல்முறைகளின் மீதும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும்போது, இரத்தம் சொட்டும் வர்க்க எதிர்ப்பு வெளிப்படுகிறது. அரசின் வர்க்கத் தன்மை முழுமையாக திறந்து காட்டப்படு கிறது; தாண்டவமாடுகிறது. ஆனால் பொதுவாக, இது தானாக நடக்கும் செயல்முறை அல்ல. மாறாக, தொழிலாளர்கள் தங்கள் போராட்டம் மற்றும் அனுபவத்தின் மூலம் அரசின் உண்மையான தன்மையை அடையாளம் காண முடிந்தால் மட்டுமே பொதுவேலைநிறுத்தம் ஒரு அரசியல் வேலைநிறுத்தமாக உயர்கிறது.

இந்தியாவில் ஒரு புதிய நிகழ்வு

ஆனால் தற்போதைய இந்திய வேலைநிறுத்த போராட்ட அனுபவத்தில் ஒரு கவனிக்கத்தக்க அம்சம் தோன்றுகிறது. ஒன்றிய அரசாங்கம் ஆண்டுதோறும் வெளியிடும் “இந்தியாவில் தொழில்துறை மோதல் கள், மூடல்கள், வேலை குறைப்புகள் மற்றும் பணி நீக்கங்கள் குறித்த புள்ளிவிவரங்கள்” என்ற அறிக்கை யின் ஆய்வு ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப் படுத்துகிறது. தொழில்துறை வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை, அதில் ஈடுபடும் தொழிலாளர் எண் ணிக்கை, மனித-நாட்களின் இழப்பு ஆகியவை கணிச மாக குறைந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில், பொதுவேலைநிறுத்தங்கள் மிகவும் நிலையானதாக மாறியுள்ளன, பங்கேற்பு அதிகரித்துள்ளது, போராட்ட உணர்வு வலுவாகியுள்ளது.

1912 இல் “பொருளாதார மற்றும் அரசியல் வேலை நிறுத்தங்கள்” என்ற கட்டுரையில் தோழர் லெனின் எழுதினார்: “தொழிலாளர் வர்க்க இயக்கம் அதன் உச்சத்தில் இருந்தபோது (1905),(ரஷ்யாவில்) போராட் டத்தின் பொருளாதார அடித்தளம் மிகவும் விரிவான தாக இருந்தது. அந்த ஆண்டில் அரசியல் வேலை நிறுத்தம் பொருளாதார வேலைநிறுத்தங்களின் உறு தியான மற்றும் திடமான அடித்தளத்தின் மீது நின்றது.”  ஆனால், தற்போதைய இந்திய சூழ்நிலையில், உண்மை நிலை நிச்சயமாக வேறுபட்டதாக தோன்றுகிறது.

நவீன முதலாளித்துவத்தின் மாற்றம்

இந்த மாற்றத்திற்கான காரணம் உற்பத்தி செயல்முறையில் மாற்றம், வேலைவாய்ப்பு உறவில் மாற்றம், முழு சமூக உற்பத்தி-மறு உற்பத்தி அமைப் பின் கட்டமைப்பு ஆகியவற்றில் பொதிந்துள்ளது. போக்குவரத்து, தொடர்பு மற்றும் தொலைநிலை செயல்பாட்டின் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி யுடன், முதலாளித்துவத்தின் நவீன நிலையானது, தொழில்துறை உற்பத்திச் செயல்முறையை எண்ணற்ற துண்டுகளாக சிதறடித்துள்ளது. ஒரு கார் உற்பத்தி நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனத்திற்கு இஞ்சின்கள், கியர் பாக்ஸ், பிரேக்குகள், மின்சார அமைப்புகள் போன்ற முக்கிய பாகங்களை வழங்கும் 200-300 முதல் நிலை வழங்குநர்கள் இருக்கிறார்கள். துணை-பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை வழங்கும் 1,500-2,000 இரண்டாம்நிலை வழங்குநர்கள் இருக்கி றார்கள். மூலப்பொருட்கள், அடிப்படை பொருட்கள்,  அடிப்படை பாகங்களை வழங்கும் ஆயிரக்கணக் கான மூன்றாம்நிலை வழங்குநர்கள் இருக்கிறார் கள். எல்லா நிலைகளிலும் மொத்த வழங்குநர்கள் 5,000க்கும் அதிகம். இந்த வேலை-செயல்முறையின் பிரிவு பழைய ஃபோர்டு கார் கம்பெனியின் முறை யான “பெரிய, ஒரே கூரையின் கீழ் எல்லா தொழி லாளர்கள்” என்ற கொள்கையை முழுவதுமாக அழித்து விட்டது.

பொருட்களை சப்ளை செய்கிற சங்கிலித் தொடர் நிறுவனங்களின் தொழிலாளர்கள், தங்கள் முதலாளிக ளுக்கு எதிராக ஒரு ஒன்றுபட்ட வலுவான தீர்மானகர மான தொழில்துறை போரை நடத்த மிகக் குறைவான  வாய்ப்பே உள்ளது. ஏனென்றால் ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவு, மதிப்பு-சங்கிலியின் கீழே உள்ள முதலாளி களின் ஒப்பீட்டளவில் குறைந்த லாப விகிதம், வேலைவாய்ப்பின் நிலையற்ற தன்மை மற்றும் தற்காலிகத்தன்மை, அமைப்பைக் கட்டுவதில் வரம்பு போன்ற காரணங்கள்,அவர்களைத் தடுக்கின்றன. இரண்டாவது அம்சம் வேலைவாய்ப்பு செயல் முறையில் மிகப்பெரிய ஒழுங்கற்ற தன்மை. அரசுத் துறையிலேயே முதன்மையான பொதுத்துறைகளில் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை மொத்த பலத்தில் 70% அல்லது அதற்கும் அதிகம். தனியார் துறையில் நிலைமை இன்னும் மோசம். ஒப்பந்த அல்லது குறிப்பிட்ட கால தொழிலாளி, தொழிற்பழகு நர் அல்லது பயிற்சியாளர் மாதம் 10,000 ரூபாய் சம்ப ளம் அல்லது உதவித்தொகைக்கு வேலை செய்கிறார். அவர் இயல்பாகவே தனது வேலையின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து பதற்றமாக இருப்பார்.

மிக முக்கியமாக, நவீன முதலாளித்துவம் இந்திய சமுதாயத்தின் மிக தொலைதூர மற்றும் ஆழமான புள்ளிகள் வரையிலும் உழைக்கும் மக்களின் அனை த்து அடுக்குகளிலும் தனது பிடியை விரிவுபடுத்தி யுள்ளது. அது சந்தை, நிதி மற்றும் அரசின் ஊடுருவல் மூலம் ஒரு கண்ணுக்கு தெரியாத உபரி பிரித்தெடுப்பு முறையை நிறுவி உழைப்பின் உபரியை சுரண்டிக் கொழுக்கிறது. இந்திய மக்களின் அடித்தட்டு 50% பேர் மனிதாபிமானமற்ற நிலையில் உயிர்வாழ்ந்து, தற்போதைய சமூக-அரசியல் அமைப்பின் மீது கோபமும் விரக்தியும் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு பொதுவேலைநிறுத்தமானது, அதில் “கூட்டுச் சேர்ந்துள்ள தொழிலாளர்களின்” பல் வேறு பிரிவுகளுக்கு அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. இது அவர்களின் வேதனையான இருப்பு மற்றும் கடுமை யான யதார்த்தத்தின் பின்னணியில், வலிமையான அடையாளமாகும். இதுதான் நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தத்திற்கான வலுவான ஆதரவின்  காரணம் ஆகும்.

புரட்சிகர மாற்றத்தின் நோக்கில்

இது, பொதுவேலைநிறுத்தங்களை அரசியல் வேலைநிறுத்தமாக மாற்றுவதற்கான அடித்தளம் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் வேலைநிறுத்தத்தின் தன்மை இன்னும் தற்காப்பு நிலையில் உள்ளது. அதாவது தொழிலாளர்கள், முத லாளிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களை எதிர்க்க முயற்சிக்கிறார்கள். ஆனால், முதலாளித்து வம் நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது. நமது காலத்தின் வேலைநிறுத்த நடவ டிக்கைகள் வெறும் தற்பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, தற்போதைய யதார்த்தத்தை மாற்றுவதற்காகவும் மிகவும் வலிமை வாய்ந்த பதிலடித் தாக்குதல் ஆகும்.  பொதுவேலைநிறுத்தத்திற்கு உண்மையான அரசியல் தன்மையை வழங்கத் தேவையானது மாற்றுக் கோரிக்கைகளை முன்னெடுத்து பிரபலப்படுத்துவது. இந்த கோரிக்கைகள் ஆளும் அரசு மற்றும் அமைப்பை அம்பலப்படுத்தும் கோரிக்கைகள் மட்டுமல்ல,  எதிர்கால சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்ற பார்வையை உருவாக்கும் கோரிக்கைகளாகவும் இருக்க வேண்டும்.

இப்போதைய தற்காப்பு கோரிக்கைகள் “தொழிலா ளர் சட்டத்தை மாற்ற வேண்டாம்”, “விலையேற்றத்தை நிறுத்துங்கள்”, “தனியார்மயமாக்கல் வேண்டாம்” என்பதாக இருக்கின்றன. ஆனால் எதிர்கால பதிலடி கோரிக்கைகள் “எல்லா தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலை”, “அனைவருக்கும் குறைந்தபட்ச வருமான உத்தரவாதம்”, “இலவச கல்வி-சுகாதா ரம்”, “தொழிலாளர் கட்டுப்பாட்டில் உற்பத்தி” என்ப தாக இருக்க வேண்டும். தொழிற்சாலை தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள், கல்வி-சுகாதார தொழிலாளர்கள், படித்த வேலையற்றோர், பெண் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்த வேண்டும்.

அனைவரும் ஒரே எதிரிக்கு எதிராக - முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக - போராட வேண்டும். எதிரிகளே சொல்கிறார்கள் - “ஒவ்வொரு வேலைநி றுத்தத்தின் பின்னாலும் புரட்சியின் பெரும் சக்தி பதுங்கியிருக்கிறது.” என்று. அந்த எதிரிகளின் கோட்டையை அசைப்பது நமது பணி. இந்த வேலை நிறுத்தம் வெறும் ஒரு நாள் ஆர்ப்பாட்டம் அல்ல. இது  நமது சக்தியை உணரும் நாள், நமது எதிர்காலத்தை திட்டமிடும் நாள், நமது வெற்றியின் முதல் அடி, முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான நமது பிரகடனம், நமது ஒற்றுமையின் வெளிப்பாடு, நமது மாற்று சமுதாயக் கனவின் ஆரம்பம்.