articles

கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட சேர்க்கை அமல்படுத்த வேண்டும் எஸ்எப்ஐ முற்றுகைப் போராட்டம்; கைது!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் சென்னையில் எஸ்எப்ஐ முற்றுகைப் போராட்டம்; கைது!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்; ஆர்டிஇ சட்டப்படியான மாணவர் சேர்க்கையை வழக்கம்போல மாநில அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) போராட்டம் நடத்தினர். இதனொரு பகுதியாக, சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட முயன்ற சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்த்சாமி, அகில இந்திய துணைத் தலைவர் மிருதுளா உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.