articles

img

மோடி அரசாங்கத்துடன் உடன்படவில்லை; அரசின் வெளிநாட்டு பிரதிநிதிகளாக ஒத்துழைப்போம்! - எம்.சதீஸ்குமார்

மோடி அரசாங்கத்துடன் உடன்படவில்லை;  அரசின் வெளிநாட்டு பிரதிநிதிகளாக ஒத்துழைப்போம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க ஒன்றிய மோடி அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவைக்குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ், ஐக்கிய ஜனதா தள எம்.பி., சஞ்சய் குமார் ஜா தலைமையிலான  3ஆவது குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்த குழு ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறது. இந்நிலையில், ஜான் பிரிட்டாஸ் எம்.பி.,யிடம் “தி வயர்” செய்தி நிறுவனம் நேர்காணல் நடத்தியுள்ளது. இந்த நேர்காணலில்,”மோடி அரசாங்கத்துடன் உடன்படவில்லை, அரசின் வெளிநாட்டு பிரதிநிதிகளாக ஒத்துழைப்போம்” என ஜான் பிரிட்டாஸ் கூறியுள்ளார்.

    “தி வயர்” செய்தியாளர் கேள்வி : பஹல் காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சர்வதேச ராஜதந்திர தொடர்புக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களை இணைத்துக் கொண்டிருப்பது மோடி அரசாங்கம் தனது  தவறுகளை மறைக்கும் நோக்கம்கொண்டதா? கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்திற்கு  எந்த  பதிலும் அளிக்க அரசாங்கம் மறுத்துவிட்டதா?

ஜான் பிரிட்டாஸ் : ஆம், அரசாங்கம் ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். மேலும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கடந்த இரண்டு அனைத்துக் கட்சி கூட்டங்களில் பிரதமர் கலந்து கொள்ளாததால், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் பிரதமர் தலைமை தாங்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். அதே போல அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வர்த்தகம் மூலம் மத்தியஸ்தம் செய்ததாக பெருமையாக கூறியது; உளவுத்துறையின் தோல்வி; பாதுகாப்புப் படையினரின் தாமதமான பதிலடி;  ஊடகங்களின் வெறுப்பு செய்திகள், தேசபக்தி என்ற பெயரில்  போர் வெறி தூண்டுதல்; வெளியுறவுத்துறைச் செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறு மற்றும் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் மனைவி மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் வரை பல கேள்விகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக மேலும் விளக்கங்களும் தேவைப்படுகின்றன. சைபர் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் கூட எழுதினேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. இதனால் மோடி அரசாங்கத்தின் மீது எங்களுக்கு கடுமையான சந்தேகங்கள் உள்ளன. ஆனால் சர்வதேச அளவில் ராஜ தந்திரம் மூலம் பொதுமக்களை சென்றடை வதற்கான திட்டம் இருக்கும் போது, ​​நாம் ஒத்துழைக்க வேண்டும். ஏனென்றால் உலக அரங்கில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை உருவாக்குவது அவசியம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கின்றன; அவர்கள் இரு நாடுகளையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள், இதை மாற்றவே முடியவில்லை. மேலும், நமது ஜனநாயகத்தில் கட்சிப் பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது அசாதாரணமானது அல்ல. மன்மோகன் சிங் காலத்தில், மும்பையில் 26/11 தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத வலையமைப்பை அம்பலப்படுத்த பிரதிநிதிகள் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நாம் எந்த ஜனநாயகத்தையும் அனுபவிக்கவில்லை. அதே போல மோடி அரசாங்கத்திடமிருந்து இவ்வளவு ‘முதிர்ந்த’ அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்பதால் எங்கள் புருவங்கள் இப்போது உயர்ந்துள்ளன. இந்த நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் எதிர்க்கட்சி ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்பதை உலகிற்கு நிரூபிப்பதே எங்கள் பங்கேற்பு ஆகும்.

l கேள்வி: நீங்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நிரல்  குறித்து அரசாங்கம் உங்களுக்கு விளக்கி யுள்ளதா?

பிரிட்டாஸ் : நாம் ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடு ஆகும். அதனால் மற்ற நாடுகளுக்கு தெளிவுபடுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்தத் திட்டம் குறித்து  வெளியுறவுச் செய லாளரிடம்,”நமது வளமான பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நாம் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். மதத்தின் அடிப்படையில் பிறந்த பாகிஸ்தானைப் போலல்லாமல், நாம் ஒரு துடிப்பான ஜனநாய கம் என்ற செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று நான் கூறினேன். பாகிஸ்தானுடன் தொடர்ந்து மோதல்களில் ஈடுபடுவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதில்லை. பாகிஸ்தான் அதன் தொடக்கத்திலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதையும் நாம் நமது சர்வதேச அளவிலான நிகழ்ச்சி நிரலில் வலியுறுத்த வேண்டும். அதே போன்று நாம் பாகிஸ்தானைப்  போல மாறப் போவதில்லை, மாறாக நமக்கு ஒரு அரசியலமைப்பு உள்ளது. மேலும் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமையை ஒழிப்பதில் நாம் தீவிரமாக இருக்கி றோம் என்பதை உலகிற்குச் சொல்ல வேண்டும்.

கேள்வி: பிரதமர் மோடி தனது உலகளா
விய தொடர்புகளில் தோல்வியடைந்து விட்டாரா? 11 ஆண்டுகளில் 72 நாடுகளுக்கு 129 முறை பயணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் வழக்கமான
பிரசங்கங்களைத் தவிர வேறு எந்த உலகத்
தலைவரிடமிருந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லையா?

 l     கேள்வி: சர்வதேசத் தலைவர்களும் நீங்கள் தொடர்பு கொள்ளும் மற்றவர் களும், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான கொலைவெறித் தாக்குதல்கள் அல்லது சமீபத்தில் பேரா.அலி கான்  மஹ்முதாபாத் தேசத்துரோகக் குற்றச் சாட்டில் ஒரு சட்டப்பூர்வமான சமூக ஊடகப் பதிவிற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கேள்விகளை எழுப்பினால் என்ன செய்வது?

பிரிட்டாஸ் : இந்தப் பிரச்சனைகள் நிச்சய மாக எங்களை கவலையடையச் செய்கின்றன. சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் ஒருவரை போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்வது முற்றிலும் அபத்த மானது. நான் இந்தப் பிரச்சனையை பலமுறை எழுப்பியுள்ளேன். அரசியலமைப்புக்கு முரணான கைதுகள் குறித்து நாடாளு மன்றத்தில் கூடப் பேசியுள்ளேன். நிச்சயமாக வெளிநாட்டுப் பயணத்தின் போது இதுபோன்ற கேள்விகள் எங்களிடம் கேட்கப்படும். ஆனால் எங்கள் பிரதிநிதிகள் குழு அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்துள்ளது. இராஜதந்திர தொடர்பு தொடர்பான சர்வதேச பிரதிநிதிகளுக்கு பெரிய நிகழ்ச்சி நிரல் முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் பணி மற்றும் நோக்கமாகும்; உள்நாட்டுப் பிரச்சனைகளைப் பொறுத்தவரை, நாங்கள் அதை நாட்டிற்குள் கையாள்வோம். l    

கேள்வி: பிரதமர் மோடி தனது உலகளா விய தொடர்புகளில் தோல்வியடைந்து விட்டாரா? 11 ஆண்டுகளில் 72 நாடுகளுக்கு 129 முறை பயணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் வழக்கமான பிரசங்கங்களைத் தவிர வேறு எந்த உலகத் தலைவரிடமிருந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லையா?

பிரிட்டாஸ் : இஸ்ரேலின் ஆதரவைத் தவிர, வேறு எந்த நாட்டிலிருந்தும் இதுபோன்ற  ஆதரவு வருவதைக் கண்டு நான் உண்மையி லேயே ஆச்சரியப்படுகிறேன். அமெரிக்கா எவ்வாறு நடந்துகொண்டது, நம்மைத் தாழ்த்திய விதம் ஆகியவற்றில் மோடி அரசின் பிரதிபலிப்பு என்ன என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குழு வினரால் பரப்பப்படும் முட்டாள்தனங்களுள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை  டிரம்ப் சித்தரித்த விதம், ஒப்பந்தத்தை அவர் எவ்வாறு  மத்தியஸ்தம் செய்தார் என பல கேள்விக்குரிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றுக் கெல்லாம் ஆரம்பத்திலேயே நேரடியான பதிலடி  கொடுக்க இந்தியா தகுதியானது என்றாலும், டிரம்ப்பின் வார்த்தைகள் நமக்கு எதிராகச் சென்றுவிட்டன. மோடி அரசாங்கத்தின் வெறும் மறுப்புக்கு அப்பால், அரசியல் நிர்வாகி யிடமிருந்து நேரடியான மறுப்பு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது நடக்கவே இல்லை. டிரம்ப்பின் ‘வர்த்தகம் சார்ந்த’ ராஜதந்திர மும் நமக்கு எந்தப் பலனும் தராது. மேலும் மோடி அரசாங்கம் துருக்கி மற்றும் வங்கதேசத்து டனான வர்த்தகத்தை புறக்கணிப்பதாகக் கூறி னாலும், டிரம்ப் ஜூனியர் சென்று அதே நாடு களில் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள் ளார். மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அடியாக பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன் வழங்கியதை கருதுகிறேன் . கடன்களை அனுமதிப்பதில் சர்வதேச நாணய நிதிய வாரியத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதால், இது அமெரிக்காவின் ஒரு சூழ்ச்சியாகும். - தமிழில் : எம்.சதீஸ்குமார்