articles

img

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்! நாட்டிற்கு உண்மையைச் சொல்லுங்கள்! - டி.கே.ரங்கராஜன்

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்! நாட்டிற்கு உண்மையைச் சொல்லுங்கள்!

ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் சுற்றுலா மையத் தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மோடி அரசு இந்த ராணுவ நடவ டிக்கைக்கு ‘ஆபரேசன் சிந்தூர்’ என்று பெயர் வைத்தது, அரசின் ஆழமான மதவாத நோக்கத்தை வெளிப்படுத்தியது. இந்து பெண்கள் நெற்றியில் இடும் குங்கு மத்தை குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டது ஆர்எஸ்எஸ்- பாஜகவின் மதவாத மற்றும் ஆணாதிக்க கருத்துக்களின் நேரடி வெளிப்பாடாகும். ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையும் ஏதேனும் ஒரு பெயரைத் தாங்கி வருகிறது என்பது உண்மைதான், ஆனால் அந்த பெயரில் மதச்சாயம் பூசுவது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை சிதைக்கும் ஆபத்தான போக்காகும். அனைத்து தரப்பிலும் மத அரசியலை கலந்து வெறியேற்றுவதில் ஆர்எஸ்எஸ் - பாஜக தீவிரமாக உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

பஞ்சாபின் பொருளாதார வீழ்ச்சி: கணக்கெடுப்பும் பகுப்பாய்வும்

எல்லை மாநிலமான பஞ்சாப் இந்த மோதலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது, தேசிய ஊடகங்களில் பெரிதாக வராத செய்தி. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், பஞ்சாப் பொருளாதாரம் மீளமுடியாத சேதத்தை சந்தித்துள்ளது. ஏற்கனவே கடன் சுமையில் தவிக்கும் பஞ்சாப், இப்போது உடனடி வருவாய் இழப்பையும் தொழில் வளர்ச்சி முடங்குவதையும் சந்திக்கிறது. மாநில அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அதி காரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி: H ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூலில் மட்டும் ரூ.525 கோடி குறைவு H ஏப்ரல் மாதத்தில் கலால் வரி வசூலில் ரூ.228 கோடி குறைவு H மக்கள் மே 7ஆம் தேதி பதற்றம் அதிகரித்த பின்னர் வங்கிகளில் பணத்தை அதிகம் டெபாசிட் செய்யும் அதே நேரத்தில் குறைவாக எடுத்தார்கள்; திடீர் பணப்புழக்க வீழ்ச்சிக்கு இது இட்டுச் சென்றது. H மாநிலத்தின் ‘சொந்த வரி வருவாய்’ ரூ.557 கோடி குறைந்துள்ளது; இது 12% எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

தொழிலாளர் இடம்பெயர்வு:  ஒரு மனிதாபிமான நெருக்கடி

பஞ்சாப் தொழில்துறையின் முதுகெலும்பான புலம்பெயர் தொழிலாளர்கள் போர்ப் பதற்றப் பின்ன ணியில், பாதுகாப்பு கவலையால் கணிசமான எண் ணிக்கையில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் பஞ்சாப் தொழில்துறையின் பெரும் பகுதியை இயக்கிக் கொண்டிருந்தனர். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இலக்கான அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் பகுதிகளில் தொழில்கள், கடந்த சில வாரங்களாக கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சந்திக்கின்றன. தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மந்த நிலை மாநிலத்தின் ஜிஎஸ்டி வசூலை மேலும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லூதியானா ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக ரயில்க ளில் ஏறுவதற்கு காத்திருந்த காட்சிகள், பஞ்சாபின் தொழில்துறை எதிர்கொள்ளும் நெருக்கடியின் அளவை பிரதிபலிக்கின்றன.

மோடி அரசின் ‘நிரந்தரப் போர்’ அறிவிப்பு: ஜனநாயகத்திற்கு அபாயம்

மே 12ஆம் தேதி இறுதியாக நாட்டு மக்களிடம் பேசிய மோடி, அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, நாடு இனி நிரந்தர போர் நிலையில் இருக்கும் என்று எச்சரித்தார்.  இந்த அறிவிப்பு தேசிய நலனை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தானடித்த மூப்பாக அறிவித்த போர்நிறுத்தத்தால் குழம்பிப் போன மற்றும் ஏமாற்றமடைந்த மோடியின் தேசிய வாத ஆதரவு தளத்தை திருப்திப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டது. இந்த புதிய ‘இராணுவமயமாக் கப்பட்ட சாதாரண நிலை’ இந்திய ஜனநாயகத்தின் மீது ஏற்படுத்தும் தீங்கு, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நீண்டகால நோக்கங்களை செயல்படுத்தும் ஒரு புதிய வடிவம் ஆகும்.

அமெரிக்கத் தலையீடும்  பாஜக ஆதரவாளர்களின் குழப்பமும்

பாஜகவின் ஆதரவு தளத்தை ‘போர்க் காய்ச்சல்’ பீடித்திருந்த சமயத்தில், அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் போர்நிறுத்த அறிவிப்பு அவர்களை ஆச்சரி யத்தில் ஆழ்த்தியது. இந்த ‘சமாதானம்’ பின்வாங்க லாகவும் பலவீனத்தை ஒப்புக்கொள்வதாகவும் பார்க்கப்பட்டது. இதன்மூலம் டிரம்ப் தனது நண்பர் நரேந்திர மோடிக்கு இரண்டு தலைவலிகளைக் கொடுத்துள் ளார். கடுமையான ஒற்றைத் தலைவலி வெளியுறவுக் கொள்கை தொடர்பானது. இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்க மத்தியஸ்தத்தின் மூலம் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்க நேர்ந்ததன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி இந்திய பிரதமரை உள்நாட்டில் விமர்சனத்திற்கு ஆளாக்கி யுள்ளார்; காஷ்மீர் மோதலில் வாஷிங்டனை நுட்பமாக நுழைய வைத்துள்ளார். இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அதன் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று பதிலளித்துள்ளது, இருப்பினும் அதை எதிர்கால மோதல்களில் மட்டுமே சோதிக்க முடியும்.

வர்த்தக அழுத்தமும்  பொருளாதார நெருக்கடியும்

மோடியின் இரண்டாவது அசௌகரியம் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பானது. புதுதில்லியும் இஸ்லாமாபாத்தும் முழு அளவிலான போரின் விளிம்பி லிருந்து பின்வாங்கியதற்கான அனைத்து காரணங்களி லும், முதன்மையானது வர்த்தகம்தான் என்று கூறு வதன் மூலம் டிரம்ப் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுடனான வர்த்த கத்திற்கும், இந்தியா - பாகிஸ்தான் சமாதானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளனர்; இருப்பினும்  அமெரிக்க ஜனாதிபதி இந்த கூற்றை திரும்பத் திரும்ப சொல்வதை அவர்களால் தடுக்க இயலவில்லை. டிரம்ப் தமது சவூதி அரேபிய பய ணத்தில், போர்நிறுத்தத்தை எப்படி மத்தியஸ்தம் செய்தார் என்பது குறித்து மேலும் விவரங்களை சேர்த்தார்: “நான் வர்த்தகத்தை பெரிய அளவில் பயன் படுத்தினேன். நான் சொன்னேன், ‘நண்பர்களே, வாருங்கள், ஒரு ஒப்பந்தம் செய்யலாம். அணு ஏவு கணைகளை வர்த்தகம் செய்யாமல், நீங்கள் மிக அழகாக தயாரிக்கும் பொருட்களை வர்த்தகம் செய்ய லாம்” என்று. ஆக டிரம்ப், இந்தியாவின் பொருளாதார பிரதே சத்தில் நுட்பமாக நுழைகிறார்.  மோதல் நிறுத்தம் வரவேற்புக்குரியது என்ற போதிலும், மோடி அரசு டிரம்ப் நிர்வாகத்திடம் தோல்வி யடைந்து, சரணாகதி அடைந்துள்ளது என்பதே இந்த நிகழ்வுகளின் பொருள்.

நாடாளுமன்றத்தை கூட்ட மறுப்பு: ஜனநாயகத்தின் அவமானம்

இப்படிப்பட்ட பின்னணியில், உடனே நாடாளு மன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். நாடாளு மன்றத்தை கூட்டுவது என்பது மிகமிக முக்கிய மானது. இரண்டாவது உலக யுத்தம் நடந்த பயங்கரமான சூழலிலும் கூட பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நடந்து கொண்டுதான் இருந்தது. இன்னும் சொல்லப்போ னால் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியில் குண்டு விழுந்த போதிலும் கூட நாடாளுமன்றம் நடந்தது. போரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது  குறித்து அன்றைக்கு பிரதமராக இருந்த வின்ஸ்டன்  சர்ச்சிலிடம் மக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்க ளும் கேள்வி எழுப்பினார்கள். நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. எதற்கும் சளைக்காமல் அவர் பதிலளித்துக் கொண்டே இருந்தார். எல்லையில் என்ன நடக்கிறது, போர் முனையில் என்ன நடக்கிறது என்பது பற்றி பிரதமர் சர்ச்சில்  பிரிட்டன் மக்களுக்கு தினந்தோறும் நாடாளுமன் றத்தில் விபரங்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். பிரிட்டன் ஒரு ஏகாதிபத்திய நாடு; ஆனால் அது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவாகப் பின் பற்றியது. காந்தியே அதைப் பாராட்டினார். ஆக மக்க ளுக்காகத்தான் அரசாங்கம், மக்களுக்காகத்தான் நாடாளுமன்றம், மக்களுக்காகத்தான் ராணுவம். ஆனால் இங்கே, மக்களைப் பாதுகாக்காமல், நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லாமல், எப்படி இந்திய மக்களுடன் உரையாட முடியும்? பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாடாளுமன்றத்தில் பேசாமல், இந்திய மக்களுடன் உரையாடாமல் அமெரிக்க எஜமானர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டி ருக்கிறார். நாடாளுமன்றத்தைக் கூட்டியிருந்தால், இப்போது எல்லையில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்குவ தற்கு வெளிநாடுகளுக்கு தூதுவர்களை அனுப்ப வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. நாடாளு மன்றத்தின் வாயிலாக நாட்டு மக்களுக்கு மட்டு மல்ல, உலக மக்களுக்கே விளக்கியிருக்க முடியும். இந்திய மக்களின் கண்களை மறைத்து தான் விரும்பிய நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் செய்கிறது. இது முற்றிலும் தவறானது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை

சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (Associa tion for Protection of Civil Rights) வெளியிட்ட அறிக் கையின்படி, ஏப்ரல் 22 முதல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக 184 வெறுப்பு குற்றங்கள் - கொலை, தாக்குதல், நாச வேலை, வெறுப்பு பேச்சு, மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்டவை - அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் மோடி அரசின் மதவாத அரசியலின் நேரடி விளைவாகும். பஹல்காம் தாக்கு தலுக்குப் பிறகு, அரசு உடனடியாக இதை ‘இந்து வெறுப்பு’ மற்றும் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று சித்தரித்து, நாடு முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான வன்முறையை ஊக்குவித்தது.

காஷ்மீரி மக்களின் நிலை

காஷ்மீரில் ‘பயங்கரவாதிகளுடன் தொடர்பு’ என்ற சந்தேகத்தின் பேரில் 9 வீடுகள் வெடித்து தகர்க்கப்பட்டன. இது சர்வதேச சட்டத்தின்படி கூட்டு தண்டனையாகும்; இது போர்க்குற்றமாக கருதப்படு கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கைது செய் யப்பட்டனர், அவர்களில் பலர் வெறுமனே காஷ்மீரி என்ற காரணத்திற்காக மட்டும். மோடி அரசின் இத்தகைய அணுகுமுறை ஆபத்தா னது.

நாடாளுமன்றத்தை உடனே கூட்டுக!

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்:

H நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுதல்

: நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார நிலை மற்றும் வெளி யுறவுக் கொள்கை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்.

H மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு திரும்புதல்:

‘ஆப ரேசன் சிந்தூர்’ போன்ற மதவாத பெயரிடல்களை கைவிட்டு, அனைத்து சமுதாயங்களையும் உள்ள டக்கிய கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

H எதிர்க்குரல்களை மதித்தல்:

ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமை களை மீட்டெடுக்க வேண்டும். பொருளாதார மீட்சி 1.    எல்லை மாநிலங்களுக்கு சிறப்பு உதவி: பஞ்சாப் போன்ற பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உடனடி நிதி உதவி மற்றும் தொழில் மீட்சி திட்டங்கள். 2.    தொழிலாளர் பாதுகாப்பு: புலம்பெயர் தொழிலா ளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப் படுத்துதல். 3.    வர்த்தகக் கொள்கை மீளாய்வு: அமெரிக்க அழுத்தத் திற்கு ஆளாகாமல் சுதந்திரமான வர்த்தகக் கொள்கை.

சமுதாய நல்லிணக்கம்

1.    பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி:

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழு நிவாரணம் மற்றும் உரிய மரியாதை.

2.    வெறுப்பு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை:

முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதி ரான வன்முறையை தடுக்க கடுமையான நட வடிக்கை.

3.    காஷ்மீர் மக்களின் உரிமைகள்:

காஷ்மீரி மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்தல்.

இந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது: மக்களுக்கா கத்தான் அரசாங்கம், மக்களுக்காகத்தான் நாடாளு மன்றம், மக்களுக்காகத்தான் ராணுவம். மக்களி டம் பொறுப்புக்கூற மறுக்கும் எந்த அரசும் ஜனநாய கத்திற்கு அந்நியமானது.