சென்னை,மே.23- இன்றும், நாளையும் சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
முகூர்த்த நாட்களுடன் கூடிய வார இறுதி நாட்கள் என்பதால் இன்று மற்றும் நாளை(மே 24) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 605 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து இன்று 100, நாளை 90 பேருந்துகள் மற்றும் மாதவரத்திலிருந்து இன்று 24 பேருந்துகளும், நாளை 100 பேருந்துகளும்; பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்து இயக்க திட்டம்.