மாநில சுயாட்சிக் கொள்கைக்கு துரோகம் இழைத்தது யார்?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தர்மபுரி தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் ஆவேசத்துடன் பேசி னார்: “இபிஎஸ் பாஜக வுக்கு அடிமையாம், எங்கள் கூட்டணியில் உள்ள கட்சி கூட அடிமை கிடையாது. நாங்கள் நியாயத்துக்குப் போராடுவோம்; தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக இருந்தால் எதிர்ப்போம். உங்களைப் போல கூஜா தூக்கும் கட்சி இல்லை.” - அரசின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டுக்கு எதிராக இருந்தால் எதிர்ப்போம் என்றும் வீரம் கொப்பளிக்க எடப்பாடி பேசியது அப்பட்ட மான கட்டுக்கதை.
தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டபோது அவர் எப்போது குரல் கொடுத்துள்ளார்? கல்விக்கான நிதி, மாநி லத்திற்கு வரவேண்டிய வரிப்பகிர்வு ஆகி யவற்றில் பாஜக அரசு அநீதி இழைத்தபோது அவர் போராட்டம் ஏதேனும் நடத்தினாரா? மாநில உரிமைகளைப் பறித்துக் கூட்டாட்சிக் கோட்பாட்டைச் சிதைத்து வருகிற பாஜகவுடன் அதிமுக கூட்டுச் சேர்ந்தது மிகப்பெரிய கொள்கைத் துரோகம்! திராவிட இயக்க அடிப்படைக் கொள்கையையே அதிமுக கை விட்டு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளது. நிதிப் பகிர்வு பற்றி ஜெயலலிதா கூட்டாட்சியின் அடிப்படைக் கோட்பாடு களில் ஒன்று ஜனநாயகப்பூர்வமான நிதிப் பகிர்வு; தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வு க்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வலுவாகக் குரல் கொடுத்தார்
. 14-ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருத்துகளைத் தெரிவிப்ப தற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டி.கே. ரங்கராஜன் அவர்களும் நானும் கலந்து கொண்டோம். அன்று நிதிக்குழு உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்ட நிறைவுக் கூட்டத்தில் ஜெயலலிதா மிக ஆவேசமாகப் பேசினார். ஒன்றிய அரசு நிதிப் பகிர்வு விஷயத்தில் தமிழ்நாட்டை வஞ்சிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். எடப்பாடி பழனிசாமிக்கு இந்தப் பேச்சு நினைவில் இருக்கிறதா அல்லது நினைவில் இருந்தும், தற்போதைய கூடா நட்பு காரணமாக மறந்துவிட்டாரா? ஜெயலலிதா ஆங்கிலத்தில் பேசுகிற போது குறிப்பிட்டார்: “மத்திய அரசு மாநிலங்களி டம் step motherly treatment (பாரபட்ச மான, மாற்றாந்தாய் அணுகுமுறை) காட்டு கிறது.
மாநிலங்களை equal partners (சமமான பங்காளர்கள்) அல்லாமல் mere supplicants (கெஞ்சுபவர்கள்) போல் நடத்துகிறது” என்று அவர் கடுமையாக விமர்சித்தார். மொத்த நிதி ஒதுக்கீட்டில் 54% மட்டுமே நிதி ஆணையம் வழி யாக வருவதாகவும், மீதி 46% ஒன்றிய அரசின் விருப்பத்துக்கு ஏற்பப் பாரபட்சமாகச் செல விடப்படுகிற ஜனநாயக விரோதச் செயலைக் கண்டித்தார். 15-ஆவது நிதி கமிஷன் தமிழ்நாட்டுக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழ்நாட்டின் தேவைகளை முறையாக நிதி ஆணையத்திடம் எடுத்துரைக்கவில்லை. அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே ஜெயலலிதா பேசிய பேச்சைக் ‘கட் அண்ட் பேஸ்ட்’ (cut & paste) செய்த குறிப்பு ஒன்றைக் கொடுத்துவிட்டார்கள்.
அதைத் தொடர்ந்து மாநில உரிமைகளை வலி யுறுத்துகிற எந்த முயற்சியும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் நீண்டகால நிதி உரிமைகள், மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடுகளை பாஜக ஒன்றிய அரசு தொட ர்ந்து சிதைத்து வருகிற நடவடிக்கைகளை எதிர்த்துச் சட்டமன்றத்தில்கூட எடப்பாடி பழனி சாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வலு வாக எதையும் பேசவில்லை. மூச்சுக்கு முன் னூறு முறை “இதய தெய்வம் அம்மா” என்று உச்சரிக்கிற எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அணுகுமுறையை ஏன் விமர்சிக்கவில்லை? பொத்தாம் பொதுவாகத் தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்பட்டால் எதிர்ப்போம் என்று வாய்ச்சவ டால் விடுவதைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
“மறுசிந்தனை தேவை”- அண்ணா கூட்டாட்சி கோட்பாடு பற்றி அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசி வந்தார். அந்தப் பேச்சுக்களை உள்வாங்கி இருந்தால் அதிமுக பாஜகவை உதறித் தள்ளி இருக்கும். 1967-68 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை யின் மீது சட்டமன்றத்தில் அண்ணா பேசுகிற போது குறிப்பிட்டார்: “ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநி லங்களின் நிதித் தேவைகளைப் பற்றி நிதி குழுக் களின் வாயிலாக நடுநிலையில் நின்று ஆராய வேண்டும் என்ற ஏற்பாடும் குழுக்களின் ஆய்வு வரம்பு குறித்து விதிக்கப்படும் பல்வேறு வரை யறைகள் காரணமாக மாநிலங்கள் ஒன்றிய அரசினை அண்டி நிற்கும் நிலை பெருமளவில் குறைந்தபாடு இல்லை…” இதை விவரித்த அண்ணா, “மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள தொடர்புகள் பற்றி மறுசிந்தனை தேவை” என்று அழுத்தமாக குறிப்பிடுகிறார். அண்ணா எதிர்பார்த்த அந்த நிலைக்கு மாறாகப் பின்னோ க்கிய பாதையில் இன்று இந்தியா சென்று கொண்டிருக்கிறது.
மாநிலங்களின் உரிமை களை பாஜக காலில் போட்டு மிதித்து வரு கிறது. இதைக் கண்டிக்காத எடப்பாடி, அண்ணா பெயரை உச்சரிப்பதற்கு அருகதை உள்ளவரா என்கிற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் நலன்களை ஒன்றிய பாஜக விற்கு அடகு வைத்துவிடுவார்கள் என்பதை அவர்களது கடந்தகால நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. மாநிலங்களைச் சிதைக்க பாஜக உறுதி அதிமுக திராவிட அடிப்படைக் கொள்கை யான கூட்டாட்சித் தத்துவத்திற்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிற நிலையில், பாஜக தனது கொள்கையில் உறுதியாக உள்ளது! அவர்கள் மாநிலம் என்கிற ஏற்பாட்டை அங்கீ கரிக்கவில்லை.
மொழி அடிப்படையிலான மாநிலங்கள் என்கிற கருத்தை எந்நாளும் அவர்கள் ஏற்கவில்லை. மாறாக, அதிகாரம் மையப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் கீழ் மாவட்ட, வட்டாட்சியர் அலுவலகம் போன்று மாநிலங்கள் நிர்வாகக் கிளைகளாக இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. மாநிலங்களை அழித்தொழிக் கும் முடிவோடு அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோக்கத் தோடுதான் டபுள் இன்ஜின் அரசாங்கம் வேண்டும் என்கின்றனர்.
எடப்பாடி வார்த்தை களில் சொல்வதென்றால், பாஜகவின் இந்தப் பார்வை, மாநிலங்கள் தில்லிக்கு “கூஜா தூக்கும் நிலைதான்” ஏற்படும். நிதிக்காக தில்லியிடம் பிச்சை எடுக்கும் நிலையை பாஜக ஏற்படுத்தி வருகிறது. இடதுசாரிகளின் தனித்தன்மை கூட்டாட்சிக் கோட்பாடு பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் நிலைப்பாடு அடித்தட்டு உழைக்கும் வர்க்க நலன் சார்ந்தது. மேலிருந்து கீழ் மட்டம் வரை, ஒன்றியத்திலிருந்து உள்ளாட்சி வரை அதி காரப்பரவல் இருக்க வேண்டும் என்று இடது சாரிகள் வலியுறுத்தி வந்துள்ளனர். ஜனநாயக அடிப்படையிலான அதிகாரப் பரவலுக்கு இலக்கணமாகக் கேரளத்தின் இடது ஜன நாயக முன்னணி அரசு திகழ்கிறது.
கடந்த காலத்தில் மேற்கு வங்கத்திலும், கேரளம், திரி புராவிலும் இப்படிப்பட்ட மிக உயர்ந்த கூட்டா ட்சிக் கோட்பாடு அமலாக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிப் பார்வையில் உண்மையான கூட்டாட்சி என்பது பல்வேறு தேசிய இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், வாழ்வியல் நெறி கள் கொண்டுள்ள பன்முக இந்தியாவிற்குத் தேவையான ஒரு கோட்பாடு என்ற பார்வை யுடன் விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே இடதுசாரிகள் செயல்பட்டு வந்துள்ளனர். ஒற்றை நோக்கிலான இந்துத்துவா பார்வை இந்தியா என்கிற மகத்தான அமைப்பையே சிதைத்துவிடும் என்பதால் இடதுசாரிகள் பாஜகவிற்கு எதிராக இடையறாத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு எதிராக அடுக்கடுக்காகப் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நடவடிக்கைகளை எடுத்து வரும்போதும், தமிழ்நாட்டை முற்றாகப் புறக்கணிக்கிற போதும் பல சந்தர்ப்பங்களில் எடப்பாடி பழனி சாமி மௌனமாக இருந்தார். அவர்களோடு அணி சேர்ந்திருப்பதால் இன்னும் எதிர்காலத் திலும் அவர் தமிழக நலன் மீது பாஜக அரசு தொடுக்கிற எந்தத் தாக்குதலையும் கண்டு கொள்ளமாட்டார் என்பதும் உறுதியாகத் தெரி கிறது. இதைத் தமிழக மக்கள் உணராமல் இல்லை. தமிழக நலன்களைப் புறக்கணிக்கிற அதிமுக-பாஜக கூட்டணிக்குத் தக்க பாடம் புகட்டும் வகையில் பெரும் தோல்வியை அவர்களுக்குப் பரிசாக அளிக்க உள்ளனர்!
