இடதுசாரிகளின் வளர்ச்சி முழக்கத்தைச் சிதைக்க முயலும் கேரள எதிர்க்கட்சிகள்
யு.டி.எப் வியூகம் ஆட்சிக்கு எதிரான ஒரு மறைமுக அலை வீசுவதாக காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) நம்புகிறது. இதற்கு ஆதாரமாக, கடந்த 2025 டிசம்பரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அந்தத் தேர்தலில் எல்.டி.எப் பெற்ற 33.4% வாக்குகளை விட, யு.டி.எப் 38.8% வாக்குகள் பெற்று பெரும்பா லான உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றியது. தற்போது, இடதுசாரிகளில் இருந்து விலகி வந்த சில முக்கியத் தலைவர்களை காங்கிரஸ் தனது வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. வேட்பாளர் தேர்வின் போது மூத்த தலைவர் கே. சுதாகரனின் அதிருப்தி காங்கிரஸைப் பாதித்தாலும், இடது சாரிகளின் வளர்ச்சி முழக்கங்களை எதிர்கொள்ளப் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் எனத் தங்களின் சொந்த நலத்திட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்வைக்கிறது. பாஜக கூட்டணி வழக்கமான இருமுனைப் போட்டி யைத் தகர்த்து மும்முனைப் போட்டி யாக மாற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முயன்று வருகிறது. கடந்த டிசம்பர் 2025 உள்ளாட்சித் தேர்தலில் நுட்பமான (சூழ்ச்சிகரமான) தேர்தல் வியூகங்கள் மூலம் திருவனந்தபுரம் மாநகராட்சியை இடதுசாரிகளிடம் இருந்து பாஜக கைப்பற்றியது. இருப்பி னும், கடந்த 2024 மக்களவைத் தேர்த லில் 19.2% ஆக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த உள்ளாட்சித் தேர்த லில் 14.7% ஆகக் குறைந்துள்ளது. அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்களைத் தனக்கு சாதக மாக்கிக் கொள்ள, இரு கூட்டணிகளி லும் அதிருப்தியில் இருந்த சில தலைவர்களை பாஜக தன்வசம் இழுத்துள்ளது. மேலும், மத்திய கேரளா வில் செல்வாக்கு செலுத்தும் ‘டுவெ ண்டி20 (Twenty20)’ போன்ற புதிய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து தனது எல்லையை விரிவுபடுத்த பாஜக முயன்றுள்ளது. குறிப்பாக, மத்திய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ சிறுபான்மை யின மக்களிடம் பாஜக தனது செல்வா க்கை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இடதுசாரிகளின் வியூகங்கள் தற்போதைய சட்டமன்ற உறுப்பி னர்களில் பெரும்பாலானவர்களுக்கே மீண்டும் சீட் வழங்கி ஆட்சியில் தொடர்ச்சியை நிலைநிறுத்த எல்.டி.எப் முயல்கிறது. இதன் மூலம் ஆட்சி எதிர்ப்பு அலை இருப்பதாகக் கூறப்படு வதை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகால மக்கள் நல மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து எல்.டி.எப் வாக்கு சேகரிக்கிறது. அதே நேரத்தில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் நிச்சயமற்ற தன்மையையும் இடதுசாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேர்தலைத் தீர்மானிக்கும் பிற காரணிகள் வழக்கமான வளர்ச்சி முழக்கங் களைத் தாண்டி, மக்கள் தொகை அமைப்பும் இந்தத் தேர்தலின் முடிவு களைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும். கேரளாவின் மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 47% இருக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் வாக்குகள் எந்தப் பக்கம் சாய்கின்றன என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்விகள் அமையும். மேலும், மாநிலத்தின் மீதான ஒன்றிய அரசின் அணுகுமுறை, சபரி மலை தங்கத் திருட்டு, நில ஆக்கிர மிப்பு தொடர்பான கவலைகள், விவ சாய நெருக்கடிகள் மற்றும் அரசியல் இஸ்லாம் குறித்த விவாதங்கள் எனப் பல்வேறு பிரச்சினைகள் மக்களின் வாக்கு செலுத்தும் மனநிலையை வடிவமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம், 26.3.26
