articles

img

ஏழையின் குடிசையை எட்டுமா சூரிய ஒளி மின்சாரம்? - வெ.மன்னார்

ஏழையின் குடிசையை எட்டுமா சூரிய ஒளி மின்சாரம்?

கூரைகளில் அமைக்கும் சூரிய ஒளி தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரப் பயன்பாடு இன்று அதிகரித்து வருகிறது. அதி லும் ‘பிரதம மந்திரி சூரிய ஒளி தகடுகள் கூரை மின்சாரத் திட்டம்’ அமுலான பிப்ரவரி 2024-க்குப் பிறகு இது தீவிரமடைந்தது. மார்ச் 2027-க்குள் ஒரு கோடி வீடுகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த ரூ.75,201 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. ஒருமுறை மானியமாக ரூ.78,000 வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இத்திட்டம் சூடுபிடித்து வளர்ந்து வருகிறது.

மாநிலங்களின் பங்களிப்பும் சவால்களும் ஒன்றிய அரசு தரும் தகவல்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 25,28,933 வீடுகளில் 9,249 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி  தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.17,886 கோடி மானியம் வழங்கப் பட்டுள்ளது. இதனால் சுமார் 12.5 லட்சம் நுகர் வோர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது அவர்களின் மின்கட்டண பட்டியல் பூஜ்யம் என்ற நிலையில் வந்துள்ளது. 3 கி.வாட் திறன் கொண்ட சூரிய ஒளி தகடுகள் 300 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. பெரும் பாலான நடுத்தர குடும்பங்களின் தேவையை இந்த அளவு ஈடுகட்டி விடுகிறது. இன்று குஜராத் 5.8 லட்சம் சூரிய மின் இணைப்புகளுடன் முதன்மை மாநில மாக உள்ளது. மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாறாக, வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சல், சிக்கிம், மேகாலயாவில் வெறும் 4,500 இணைப்புகளே பெறப்பட்டுள்ளன.

தட்ப வெப்ப நிலை, குறைந்த வருமானம் மற்றும் மின்வடங்களை அமைப்பதில் உள்ள சிக்கல்களே இதற்குப் பின்னால் உள்ளன. தமிழ்நாடு, பஞ்சாப், தில்லி போன்ற சலு கை விலை மின்சாரம் வழங்கும் மாநிலங் களில் நுகர்வோருக்கு இதில் பெரிதும் ஆர்வ மில்லை. ‘நெட் மீட்டரிங்’ வசதி ஏற்படுத்தப் பட்டால் கூடுதல் மின்சாரத்தை விற்கவும், தேவைக்கேற்ப பெறவும் முடியும். ஆனால் அந்த வசதியை ஏற்படுத்துவதில் உள்ள மந்த  நிலை திட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்து கிறது.

பராமரிப்பும் தொழில்நுட்பச் சிக்கல்களும் சூரிய ஒளி தகடுகள் அமைக்க போட்டோவோல்டிக் மோடுல்ஸ், பானல்கள், இன்வெர்ட்டர், கேபிள்கள் மற்றும்  மின்னல் தடுப்புக் கருவிகள் எனப் பல உப கரணங்கள் தேவை. உற்பத்தித் திறன் குறை யாமல் இருக்கத் தகடுகளை நீரால் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பறவைகளின் எச்சம் மற்றும் கறைகள் படி யாமல் பார்ப்பதன் மூலமே சூரிய ஒளியைத் தகடுகள் முழுமையாக உள்வாங்கும். தவறான விற்பனையாளரைத் தேர்வு செய்வ தன் மூலம் தரங்குறைந்த மின்சாதனங்கள் அமைய வாய்ப்புண்டு. அவர்கள் முதலில் விலையைக் குறைத்துக் காட்டிவிட்டு பின்னர் செலவுகளைக் கூட்டி விடுவார்கள்.

தொழில்நுட்ப ரீதியாக, பகலில் உற்பத்தி யாகும் அபரிமிதமான மின்சாரத்தை மின்வ டங்கள் முழுவதுமாக இழுக்க வேண்டும். இது மின்னோட்டத்தில் ஏற்ற இறக்கங்களை (Overloading) ஏற்படு த்துகிறது. இதைத் தடுக்க உயர்தொழில் நுட்ப பேட்டரிகள் தேவைப்படும் என்கின்ற னர் நிபுணர்கள். இதற்காக நுகர்வோர் மேலும் ரூ.50,000 செலவு செய்ய வேண்டி வரும். மின்கலன்கள் தயாரிப்பில் அரசு  தனியாரை ஊக்குவிக்கிறது. ஒரு மெகாவாட் மற்றும் அதற்கு மேலும் சேமிக்கும் மின்கலன் கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

வங்கிக் கடனும் விழிப்புணர்வு இல்லாமையும் அரசு மானியம் வழங்கினாலும், மீதமுள்ள சுமார் ரூ.2.25 லட்சத்தை நுகர்வோரே ஏற்க வேண்டியுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வழங்கினாலும், அதன் நிபந்த னைகளை நிறைவேற்றுவது நுகர்வோருக்கு அலைச்சலையும் செலவையும் ஏற்படுத்து கிறது. விண்ணப்பித்த பின் கடன் பெற இரண்டு மாதங்கள் ஆகிறது! கடன் வேண்டு வோர் சுமார் 75 சதமாக உள்ளனர்.

இந்தியா வில் தற்போது நிறுவப்பட்டுள்ள திறனை விட 118 கிகாவாட் அளவு மேலும் நிறுவ முடி யும். அரசு வங்கிகளுக்குத் தகுந்த வழிகாட்டல் வழங்குவதோடு, நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தன்னார்வ அமைப்புகளையும் பயன்படுத்த முயன்று வருகிறது. அதானியின் நிலக்கரி ஆதிக்கமும் அரசின் போக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் 24 மணி  நேரமும் மின் உற்பத்தி செய்ய வாய்ப்பில்லை அதனால் அனல் மின்சக்தியைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. நிலக்கரி எரிப்பதால் வெளி யேறும் கார்பன் சுற்றுச்சூழல் மாசுபாட்டை அதி கரித்தாலும், அதன் பயன்பாட்டை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.

2070-க்குள் நிலக்கரி பயன்பாட்டை பூஜ்யமாக்குவோம் என்று ஐ.நா மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்தாலும், நடைமுறையில் நிலக்கரி பயன்பாடு குறையவில்லை. காரணம், மோடியின் அருமை நண்பர் அதானி அனைத்து நிலக்கரி சுரங்கங்களையும் ஏலம் எடுத்திருக்கிறார். நிலக்கரி இருப்பு தீரும் வரை அதன் பயன்பாடு நிற்காது. மாநில அனல்மின் நிலையங்கள் அதானியின் நிறுவனத்திடமிருந்தே நிலக்கரியை வாங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன. தனியார்மயமும் ஏழைகளின் நிலையும் மின்சார சட்டத் திருத்தம் 2026 மசோதா, “காசுள்ளவருக்கே மின்சாரம்” என்ற நிலை யை உருவாக்குகிறது.

நட்டத்தைக் குறைக்க மின்சார விநியோகத்தைத் தனியார்மயமாக்க அரசு துடிக்கிறது. தனியார் முதலாளிகள் லாபம் தரும் இணைப்புகளை மட்டுமே ஏற்பார்கள்; நட்டத்தை ஏற்படுத்தும் விவ சாய மற்றும் ஏழை வீட்டு இணைப்புகளை ஏற்க மாட்டார்கள். அவர்களுக்காகத் தனியான மின்பாதையை அமைக்க அரசு நிதி ஒதுக்கி யுள்ளது. இதனால் ஏழைகளுக்குத் தடையற்ற மின்சாரம் என்பது கேள்விக்குறியாகும்.

தங்களுக்குத் தொடர்ந்து மின்சாரம் வேண்டும் என்று கருதுவோர் வேறு வழி யின்றி கூரைகளில் சூரிய ஒளி தகடுகள் அமைக்க வேண்டியிருக்கும். ஆனால், ஏழைகளுக்குச் சில லட்சங்கள் செலவு செய்ய வசதியிருக்காது; குடிசைக் கூரைகளில் தகடு பொருத்துவதும் சிரமம். நேரு - அம்பேத்கரின்  கனவு சமாதியா? அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நேருவும் அம்பேத்கரும் 1952-ல் மின்சாரத் துறையைப் பொதுத்துறையாக்கினார்கள். இன்றோ மோடி அரசு அதைத் தனியாருக்குத் தாரை வார்க்கிறது. சூரிய ஒளி, காற்றாலை என  அனைத்தும் அம்பானி, அதானி, டாட்டா போன்ற பெருமுதலாளிகள் வசம் சென்று விட்டது.

முதலாளிகளிடமிருந்து சலுகை விலையில் மின்சாரம் கிடைக்குமா? நேரு, அம்பேத்கரின் கனவு சமாதியாகிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமான மின்துறை அரசின் பொறுப்பில் இருந்தால் மட்டுமே தேசப் பாதுகாப்பு உறுதிப்படும். லெனின் சொன்னது போல, மின்சாரமும் தொழிலாளி வர்க்கமும் இணைந்தால்தான் சோசலிச சமூகத்தை நிர்மாணிக்க முடியும். மின்துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மோடியின் மின்சார சட்ட மசோதா வைச் சட்டமாக்காமல் தடுக்க வேண்டும். கட்டுரையாளர்: மாநில துணைத்தலைவர், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு