திமுக கூட்டணி 189 இடங்களை வெல்லும்! லோக்போல் கருத்துக்கணிப்பு தகவல்
சென்னை, ஏப். 1 - தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 181 முதல் 189 இடங்களில் வெற்றி பெறும் என்று லோக்போல் அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பு தெரி விக்கிறது. இந்தக் கூட்டணிக்கு 40.1 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்றும், அந்தக் கூட்டணிக்கு 29 சதவிகித வாக்குகள் கிடைக் கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புதிதாக களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 23 சதவிகித வாக்குகளும், 8 முதல் 10 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுவதாகவும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. நாதக 4.9 சதவிகித வாக்குகளை பெறும்; ஆனால், ஒரு இடமும் அக்கட்சிக்கு கிடைக்காது என்று கூறப்பட்டுள் ்ளது. அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, 41 சதவிகிதம் பேர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கும், 27 சதவிகிதம் பேர் நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 24 சதவிகிதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதில், அதிமுக-வின் கோட்டை எனப்படும் மேற்கு மண்டலத்தில் இந்த முறை திமுக கூட்டணி 44 முதல் 46 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. அதிமுக வெறும் 9 முதல் 10 தொகுதிகளிலும், தவெக 2 - 3 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது.