articles

img

மண்டலக் கட்சியாகச் சுருங்கும் அதிமுக! எடப்பாடியின் ‘மேஜிக்’ எடுபடுமா?

மண்டலக் கட்சியாகச் சுருங்கும் அதிமுக! எடப்பாடியின் ‘மேஜிக்’ எடுபடுமா?

தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ள அதிமுக, தற்போது ஒரு மாநிலக் கட்சி என்ற நிலையிலிருந்து ‘மண்டலக் கட்சி’ (Sub-regional party) என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கோட்டை விட்ட அதிமுக! 1977 முதல் தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமை கொண்ட அதிமுக, தற்போது தனது செல்வாக்கை வேகமாக இழந்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்தலில்  37 இடங்களில் வெறும் ஒரு இடத்தை (மதுராந்தகம்) மட்டுமே வென்றது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே நிலை தான் தொடர்ந்தது. அதிமுகவும் பாஜகவும் இணைந்திருந்தால் கூட, இந்தப் பகுதியில் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை. டெல்டாவிலும் தெற்கிலும் சறுக்கல்! அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட காவிரி டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களி லும் அக்கட்சிக்குச் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. 150 இடங்களை வென்று ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த 2011-ல் கூட, இந்தப் பகுதியில் 26 இடங்களை மட்டுமே அதிமுக வால் பெற முடிந்தது. 2024-ல் அரியலூர், ஜெயங்கொண்டம் தவிர மற்ற இடங்களில் மண்ணைக் கவ்வியுள்ளது. தென் மாவட்டங்களி லும் இதே நிலைதான். அதிமுகவின் பலத்தை விட, பாஜகவின் ‘தாமரை’ அங்கு அதிமுகவைப் பயன்படுத்தி வாக்குகளை அதிகம் காவு வாங்கியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேற்கு மட்டுமே காப்பீடு! அதிமுகவிற்கு எஞ்சியிருக்கும் ஒரே புகலிடம் மேற்கு மண்டலம் மட்டுமே. 2011  மற்றும் 2016 தேர்தல்களில் 39 முதல் 42 இடங்கள் வரை இங்கு அதிமுக வென்றிருந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அதிமுக வின் டெபாசிட் காலியான 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகள் தென் மாவட்டங்களில் உள்ளன என்பது அக்கட்சியின் அடிமட்ட பலவீனம் எவ்வளவு ஆழமானது என்பதைக் காட்டுகிறது. எடப்பாடியின் கடைசி அஸ்திரம்! இந்தச் சரிவைச் சரிசெய்ய, டி.டி.வி. தினகரனின் அமமுக-வுடன் கைகோர்த்தால் தென் மாவட்டங்களில் இழந்த செல்வாக்கை மீட்கலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு  கணக்குப் போடுகிறது. ஏப்ரல் 23-ல் நடை பெறவுள்ள தேர்தலுக்காகப் பல்வேறு கட்சிகளுடன் அவர் போட்டுள்ள ‘கூட்டணிக் கணக்குகள்’ அவரது கட்சிக்குக் கை கொடுக்குமா அல்லது மண்டலக் கட்சி என்ற முத்திரையை உறுதிப்படுத்துமா என்பதை மக்கள் மன்றமே தீர்மானிக்கும்.