4ஜி சேவை பற்றி வாய்திறக்காத ஒன்றிய அமைச்சர்
பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 17 ஆண்டு களுக்கு பின் தற்போது அதிக லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் தற்போது மொபைல் இணைப்பு, வீடு களுக்கு பைபர் சேவை ஆகியவற்றில் 18% வளர்ச்சி கண்டுள்ளது. சில செல்போன் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு காரணமாக பிஎஸ் என்எல்க்கு வாடிக்கையாளர்கள் கணிசமாக மாறினர். இதனால் பிஎஸ் என்எல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 9 கோடியாக அதிகரித்துள்ளது.
2007ஆம் ஆண்டுக்கு பிறகு நடப்பு நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் பிஎஸ்என்எல் நிறு வனம் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும் நிதிச் செலவு உள்ளிட்ட மொத்த செலவினங்களை கழித்தாலும் ரூ.1,800 கோடி மிச்சமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா கூறுகையில், “கடைசியாக 2007ஆம் ஆண்டு பிஎஸ் என்எல் காலாண்டு லாபத்தை ஈட்டியி ருந்தது. அதன்பிறகு 2024-25ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் ஈட்டி உள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 8.4 கோடி யாக இருந்த சந்தாதாரர் எண்ணிக்கை, டிசம்பர் மாதத்தில் 9 கோடியாக உயர்ந் துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையின் பயணத்தில் இது ஒரு முக்கி யமான நாள்” என அவர் கூறினார்.