articles

img

மக்கள் ஹன்னா..!

மக்கள் ஹன்னா..!

நியூயார்க் நகர மேயராக ஜோரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இடதுசாரிக் கருத்துக்களை அவர் முன்வைத்துப் பிரச்சாரம் செய்கிறார். இவர் தேர்வு செய்யப்பட்ட வேளையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. மைனே என்ற வடகிழக்குக் கோடியில் உள்ள அமெரிக்க மாகாணத்தில் டேனியல் கார்சன், நியூயார்க்கில் ஹன்னா ஸ்வெட்ஸ், மாசாசூசெஸ்ட்ஸ்சில் லூய்சா டி பாவ்லா சான்டோஸ் ஆகியோர் அவரவர் போட்டியிட்ட வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்கக் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்களாவர். ஹன்னாவை, மக்கள் ஹன்னா என்று வார்டில் உள்ளவர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.  தீவிர வலதுசாரி ஜோ பைடனையே கம்யூனிஸ்டு என்று சொல்லும் டிரம்ப், இவர்களை எப்படி அழைக்கப் போகிறார் என்று விவாதம் நடக்கிறது.