ஈரானிய திரைப்படம் கோல்செஹ்ரே - மலர்முகம்
கோல்செஹ்ரே என்பது 2011 ஆம் ஆண்டு வாஹித் மௌசையன் இயக்கிய ஈரானிய நாடகத் திரைப்படமாகும் . ஒரு நாடு மத அடிப்படை வாதிகள், பழமைவாதிகள், கையில் சிக்கினால், எப்படி சீரழிந்து, நாசமாகிவிடும் என்பதற்கு அருமையான உதாரணம் ஆப்கானிஸ்தானம் தான். பழமைவாதிகள் எப்போதும் வரலாற்றை பின்னோக்கித் திருப்பத்தான் பார்ப்பார்கள், விஞ்ஞான முன்னேற்றம், நவீனம் சாதாரண மக்களுக்கு சென்றடையாமல் தடுக்க முயற்சிகள் செய்வார்கள் என்பதனை இத்திரைப்படம் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறது. கோல்செஹ்ரே என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் பற்றிய உண்மைக் கதையை உருவாக்கி யது. மேலும் அவர்களின் தேசிய திரைப்படம் காப்ப கத்தை அழிக்கவும் திரையரங்குகளை மூடவும் முயன்ற னர். அஷ்ரஃப் கான் மூன்று தலைமுறையாக மலர்முகம் என பொருள்படும் கோல்செஹ்ரே என்ற திரை யரங்குனை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். திரைப்படங்கள் மீது உள்ள காதலால் திருமணம் செய்து கொள்ளாமல் திரையரங்குகள் கலை என்று காலத்தை கழித்துக் கொண்டிருப்பவர். ஆப்கானிஸ்தா னில் அரசியல் களம் மாறிய சூழலில் எல்லாமே தலை கீழாய்ப் போனது.. கம்யூனிச பூதத்தை காரணம் காட்டி அங்குள்ள நஜிப் அப்துல்லாவின் அரசை தூக்கி எறிந்தனர் இஸ்லா மிய மதஅடிப்படைவாதிகள். அமெரிக்கா தூண்டி விட்ட பல்வேறு முஸ்லிம் குழுக்கள் ஆளுக்கு ஒரு பகுதி யாய் பிடித்துக் கொண்டு ஆட்சி செய்து கொண்டி ருந்தனர். மதவாதிகளின் கை மேலோங்கி மக்கள் உரி மைகள், பெண்கள் உரிமைகள், கல்வி, கலை எல்லாமே கடுமையாக பாதிப்புக்குள்ளாகி போனது. கல்விக்கூடங் கள், திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதல்களால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு போனதில், அஷ்ரப்கானு டைய திரையரங்கமும் தாக்குதலுக்குள்ளாகி மூடப் பட்டது. அஷ்ரஃப் கான் கடும் முயற்சி செய்து மீண்டும் அத்திரையரங்கை துவங்குவதற்கு ஏற்பாடு செய்கி றார். அங்குள்ள ஆளுநரின் அனுமதி பெற்று அவரது நண்பர் சலர் மூலமாக ஈரானில் உள்ள மர்ஷத் நகரில் இருந்து திரைப்படத்துறையில் அனுபவம் மிகுந்த கௌடார்ஷை அழைத்து வருகிறார். கௌடார்ஷ் அஷ்ரஃப்கானின் பணியாளர் ஷிமோராத்தின் உதவி யுடன் திரைப்படக்கருவியை புனரமைத்து திரை யரங்கினை திறக்கும் நிலைக்கு கொண்டு வருகிறார். ஆனால் அந்த ஊர் மத அடிப்படைவாதியான மொலாகாதர் திரையரங்கை திறக்காமல் இருக்க கடு மையாக முயற்சி செய்கிறார். திரையரங்கு தயா ராகும் சூழலில் மொலாகாதர் குண்டு வைக்க முயற்சி செய்யும்போது அதை தடுக்கும் கண்டகா என்ற ஊன முற்ற வாலிபன் சுடப்பட்டு இறந்து விடுகிறான். அவனது காதலி ரானா தாயாருடன் வெளியூர் செல்கிறாள். திரை யரங்கு மீண்டும் துவக்கப்பட்ட நாளில் திரையி டப்பட்டு பட்ட சிறிது நேரத்திலேயே குண்டு வெடிப்பில் அஷ்ரஃப் கானின் நம்பிக்கையான உதவியாளர் ஷிமோ ராத் உட்பட பலர் கொல்லப்பட்டு விடுகிறார்கள். தலிஃபான்கள் நகரை கைப்பற்றி கடுமையான உத்தரவுகளை வெளியிடுகிறார்கள். திரைப்படங்கள் தடை செய்யப்படுகின்றன. பெண்கள் நெருங்கிய உற வினர் ஆண்கள் இல்லாமல், பர்தா ஆடை அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்க அனுமதி கிடையாது என்று கடுமையான மனித உரிமையற்ற சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவர் களுக்கு உதவி செய்ய வந்த ஈரானிய நண்பர் கௌடாரஷ் நாடு திரும்ப முடியாமல் தடுமாறுகிறார். அஷ்ரஃப் கானையும், கௌடாரஷையும் கொல்வ தற்கு மதஅடிப்படைவாதிகள் வலை வீசி தேடு கிறார்கள். தூதரகம் மூலமாக தப்பிச் செல்லலாம் என முயற்சி செய்யும்போது மஷார் இ ஷெரிஃப் நகரில் ஈரானிய தூதரகத்திற்குள் தாலிபான்கள் புகுந்து அங்குள்ளோரை எல்லாம் சுட்டுக்கொன்ற செய்தி வருகிறது. இந்தச் சூழலில் அஷ்ரஃப் கானை மத அடிப்படைவாதிகள் சுட்டுக்கொன்று விடுகிறார்கள். அஷ்ரஃப் கானுடைய தோழி மருத்துவர் ரோக்ஷ ரேவை கடத்தி சென்று மெளகாதர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்கிறார். சலர் சேர்த்து வைத்தி ருந்த 2000க்கும் மேற்பட்ட திரைப்பட பிலிம் சுருள்களை மத அடிப்படைவாதிகள் நடுத்தெருவில் தீயிட்டுக் கொளுத்திவிடுகிறார்கள். மிக முக்கிய மான படங்களை மட்டும் ரகசியமாக ஒரு அறையை வைத்து சுவர் எழுப்பி காப்பாற்றி விடுகிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் கூட விட்டு வைக்கப் படவில்லை. எல்லாம் உடைத்தெறியப்படுகின்றன. மத அடிப்படை பழமைவாதிகளின் கையில் நாடு சென்றால் என்ன ஆகும் இத்திரைப்படம் அருமையாக விளக்குகிறது. மதநல்லிணக்கம் விரும்பும் ஒவ்வொரு மனித நேயம் உள்ளவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் கோல்செஹ்ரே. தயாரித்து எழுதி, இயக்கியவர்:வாஹித் மௌசையன் ஒளிப்பதிவு-ஹூமன் பெஹ்மானேஷ் எடிட்டிங் -நசானின் மொபகம் இசையமைத்தவர்-ஃபெரிடுன் ஷபாஜியன் வெளியீடு -2011 இயக்க நேரம்- 105 நிமிடங்கள் அஷ்ரஃப் கானாக மசூத் ராயேகன், ரோக்சரேவாக லடன் மாஸ்டோஃபி, சலராக அஃப்ஷின் ஹஷேமி, கௌடாரஷாக ஹேதயத் ஹஷேமி, ஹொசைன் மொஹெப் அஹாரி என படத்தில் அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளார்கள்.
