கேள்விக்குறியாகும் பெண் சுதந்திரம்
இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டு கள் நிறைவடைந்தும், பெண் களுக்கு எதிரான பாலியல் வன் முறைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நம் தேசத்தின் மிகப்பெரிய அவமானமாகவே உள்ளது. “ஒரு பெண் நிறைய நகைகளை அணிந்து கொண்டு இரவு 12 மணியளவில் ஓரிடத்திற்குச் சென்று பத்திரமாக எப்போது வீடு திரும்புகிறாளோ, அன்றுதான் உண்மை யான சுதந்திரம்” என்ற காந்தியின் கூற்று, இன்றும் பெண்களின் பாதுகாப்பு ஒரு கேள்விக் குறி என்பதையே உறுதிப்படுத்துகிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று நாம் மண்ணுக்குத்தான் சுதந்திரம் வாங்கினோம், பெண்ணுக்கு அல்ல என்ற எண்ணத்தை இன்றைய சூழல் வலுப்படுத்துகிறது.
வானவெளியில் பல சாதனைகள் படைத் தாலும், பாலியல் தொல்லைகள் நம் சகோதரி களை பாடாய்ப்படுத்துகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றாலும், பண்டைய சமூகத்தின் பழமைவாதக் கேடுகள் இன்னமும் ஆண்களின் மனதிலிருந்து நீங்கவில்லை. நெருப்பிலிருந்து செயற்கை நுண்ணறிவு வரை எந்தக் கண்டுபிடிப்புகள் வந்தாலும், பெண்களை அடிமைப்படுத்தும் எண்ணங்கள் மாறவில்லை.
வரலாற்றுப் பின்னணியும் சுரண்டலும்
மனித நாகரிகத்தின் ஆரம்பமான புராதன பொதுவுடமைச் சமூகத்தில் பெண்கள் மதிக்கப் பட்டனர். ஆனால் அடிமை, நிலப்பிரபுத்துவ, மற்றும் முதலாளித்துவச் சமூகங்களின் பரி ணாம வளர்ச்சியில், அவர்கள் வெறும் உபயோகப் பொருளாகவும், இனவிருத்திக் கான கருவியாகவும் மாற்றப்பட்டனர். உடல் ரீதியாக ஆண்கள் வலிமையுடன் இருப்பதும், பேறுகாலங்களால் பெண்கள் மென்மையாக மாறுவதும், ஆண்களின் ஆதிக்கத்திற்கு ஒரு பலமாகிவிட்டது. இருப்பினும், மனித எண்ண ஓட்டங்களில் சமத்துவமும் ஜனநாயகமும் இருந்தால் மட்டுமே அடிமைத்தன எண்ணங்கள் மறையும்.
அபாயகரமான புள்ளிவிவரங்கள்
சமத்துவச் சமூகம் இந்தியாவில் உரு வாகாததால்தான், தேசிய குற்றப்பதிவு ஆவணத்தின்படி, 2019 முதல் 2021 வரை 13.13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ள னர். சராசரியாக ஒரு நாளைக்கு 294 பெண்கள் கடத்தப்படுவதும், 86 பாலியல் பலாத்காரங்கள் நடப்பதும் நமது நெஞ்சில் ஈட்டியைச் செருகு கிறது. காணாமல் போன இந்தப் பெண்கள் பாலியல் வணிகம், உறுப்புத் திருட்டு அல்லது பிச்சையெடுத்தல் போன்ற சட்டவிரோத கும்பல்களால் பயன்படுத்தப்படலாம். இத்தகைய கும்பல்கள் உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் கூட்டணி வைத்திருப்பதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன.
வரதட்சணை, ஆணவக் கொலைகள் போன்ற சமூகச் சீர்கேடுகளும் பெண்களைத் தொடர்ந்து தற்கொலைக்குத் தள்ளுகின்றன அல்லது அச்சுறுத்துகின்றன. ஆளும் வர்க்கம் இத்தகைய சமூகச் சீரழிவுகளைத் தடுக்காமல், மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்காமல் இருக்க, மக்க ளைப் பரபரப்புடன் பிரச்சனைகளில் சிக்க வைக்கும் நோக்கத்துடன் இதைப் பயன் படுத்திக் கொள்கிறது.
தீர்வும் சமூக மாற்றமும்
தண்டனைகளைத் தீவிரப்படுத்துவது (அரபு நாடுகளில் உள்ள மரண தண்டனை போல) தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கும்; அது பாலியல் வன்முறைகளை முற்றிலு மாகத் தடுக்கவில்லை. இந்த விஷம் கலந்த சமூக அமைப்பை முழுவதுமாகக் களைய வேண்டு மானால், சமூகமே மாற்றப்பட வேண்டும்.
அதற்கு, ஆரம்ப நிலையிலேயே குடும்பங் களிலிருந்து சமத்துவம், ஜனநாயகம் குறித்த போதனைகள் வழங்கப்பட வேண்டும். பாட சாலைகளில் ஆசிரியர்கள் ஆண்-பெண் உறவு கள், கலாசாரம் குறித்துப் போதிக்க வேண்டும். சமூக நல அமைப்புகள், சம வேலைக்குச் சம ஊதியம், ஆணும் பெண்ணும் இணைந்து இவ்வுலகை ஆள்கிறோம் என்ற உயர்ந்த சிந்தனையை மக்களிடையே தொடர்ந்து விதைக்க வேண்டும்.
வக்கிரப் புத்திகளைக் கட்டுப்படுத்த, ஒட்டு மொத்த சமூகப் பாதுகாப்பையும் உறுதிப் படுத்தும் “சோசலிசமே மாற்று” என்பதை இந்திய மக்கள் உணரும் வரை, பெண்ணு ரிமைக்காக ஆண்கள்தான் பிரதானமாக இயங்க வேண்டும். இணைந்த கைகளால் தான் ஓசை எழுப்ப முடியும்; கோடிக் கைகள் உயர்ந்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும்.
