articles

ஆர்எஸ்எஸ் எப்படி இந்தியக் கல்வி முறையைக் கைப்பற்றுகிறது? - சவேரோ

ஆர்எஸ்எஸ் எப்படி இந்தியக் கல்வி முறையைக் கைப்பற்றுகிறது? 

2014இல் நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு அமைந்த சில மாதங்களுக் குள்ளேயே, அப்போதைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தலைவர்களு டன் ரகசிய ஆலோசனைகள் நடத்தியதாகக் கூறப்படு கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் 2014 நவம்பர் 23  செய்திப்படி, மோடி அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங் களில் இதுபோன்ற ஆறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்களில் ஆர்எஸ்எஸ்-இன் முக்கியத் தலை வர் சுரேஷ் சோனி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி I (1999-2004) காலத்தில், ‘நிறைய பிரச்சாரம்’ செய் தோம், ஆனால் சிறிய அளவில்தான் வேலைகள் நடந்தன. இந்த முறை நாம் நிறைய வேலைகள் செய்ய  வேண்டியிருக்கிறது. எனவே தயவுசெய்து பிரச்சாரத்தி லிருந்து விலகி இருங்கள்” என்று கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

ஆர்எஸ்எஸ்-இன் கல்விக் கொள்கை ஆர்வம் என்ன, ஏன் என்பதற்கான பதில்கள் கடந்த 11 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் தெளிவாகிவிட்டன. புதிய கல்விக் கொள்கையில் (NEP) பண்டைய நாக ரிகத்தின் விழுமியங்கள், கலாச்சார ஒற்றுமை,  தேசபக்தி போன்ற வார்த்தைகள் படாடோபமாகக் கூறப்பட்டிருந்தாலும், அவற்றின் பின்னே ஆர்எஸ் எஸ்-இன் இந்துத்துவா சித்தாந்தமும் மறைக்கப் பட்டிருக்கிறது. மேலும், இந்தக் கொள்கைகள் கார்ப்ப ரேட் தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து, மக்க ளுக்குக் கல்வி வழங்கும் அரசின் கடமையை நேர்மை யற்ற முறையில் அத்துறைக்கு விட்டுக் கொடுத்தி ருக்கிறது. 

சூழ்ச்சியான நியமனங்களும் பாடத்திட்ட மாற்றங்களும்

ஆர்எஸ்எஸ் மிகவும் சூழ்ச்சியான முறையில், தொடக்கப் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலும், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களி லும் அதன் தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகளை நியமித்துக் கொண்டிருக்கிறது. 

பதவி கைப்பற்றல்: பள்ளி ஆசிரியர்கள் முதல் துணைவேந்தர்கள் வரை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்கள் முதல் தன்னாட்சி அமைப்புகளின் தலைவர்கள் வரை இவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் முழு கல்வி முறையையும் சீர்குலைத்திடும் அபாயம் கொண்டது. 

பாடத்திட்ட மாற்றம்: கல்வி அமைப்பு முறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள் என்பவை, என்சிஇஆர்டி (NCERT), சிபிஎஸ்இ (CBSE) மற்றும் பல்வேறு மாநில வாரியங்களின் பாடத்திட்டங்களைத் திருத்தி அமைத்ததாகும். 

வரலாறு திருத்தம்: இதில் வரலாற்றுத் துறை முதன்மை இலக்காக உள்ளது. முகலாய சகாப்தம் மற்றும் சுதந்திரப் போராட்டம் இரண்டும்  பள்ளிப் பாடப்புத்தகங்கள் மற்றும் உயர்கல்விப் பாடத்திட்டங்களில் மொத்தமாகக் குறைக்கப் பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. இது  ஆர்எஸ்எஸ்-இன் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப் பாட்டிற்கு ஏற்றவாறும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நபர்களை வரலாற்றில் சேர்க்கும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நிதி உதவி விரிவாக்கம்: ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் அளித்திடும் நிதி உதவியை விரிவாக்கு வதற்கான வேலைகளாகும். இவற்றைப் பட்டறை கள், கருத்தரங்குகள் நடத்துவது முதல், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தயாரித்த புத்தகங்களைப் பரிந்து ரைத்திட நடவடிக்கை எடுப்பது வரை மேற்கொள்ளப்  பட்டிருக்கிறது. இது ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு களுக்குப் பணத்தைச் சேர்ப்பது மற்றும் அதன் நச்சு சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு உதவுவது ஆகிய இரு நோக்கங்களைக் கொண்டது. 

கல்வி அமைப்பைக் கைப்பற்றுதல் 

ஆரம்பத்திலிருந்தே, இளைய தலைமுறையின ரின் சிந்தனையை மாற்றுவதற்கு மிக முக்கியமான கருவி கல்வி என்று ஆர்எஸ்எஸ் கருதி வருகிறது. மோடியின் ஆட்சி அமைந்த பிறகு, இந்த அமைப்பு கள் பல்வேறு வழிகளில் பெரிதும் பயனடைந்துள்ளன: 

*    பல்வேறு பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்தல்.

*    கல்வி நிறுவனங்கள், நூலகங்களில் அவர்களின் வெளியீடுகளை ஏற்றுக்கொள்வது.

*    பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகள் போன்ற வற்றுக்கு அரசு நிதியளித்தல்.

*    எதிர்ப்புக் குரல்களை எதிர்க்கும்போதும், தாக்கும்போதும் பாதுகாப்பு அளித்தல்.

*    பாஜகவுடன் நெருக்கமான நிறுவன அர வணைப்பை உற்சாகப்படுத்துதல். 

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தபோதிலும், பல்வேறு மாநில அரசுகளின் கொள்கை அறிவிப்புகள் ஆர்எஸ்எஸ்-இன் கொள்கைகளின் முத்திரையைக் காட்டுகின்றன. இந்த அமைப்புகள் நச்சு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மட்டுமல்லாமல், பாஜக அரசாங்கத்  தின் செயல்பாடுகளையும் விளம்பரப்படுத்துகின்றன. 

இவ்வாறு, ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகள் மற்றும் மோடி அரசாங்கத்தின் ஒருங்கி ணைந்த முயற்சியின் மூலம், இந்தியக் கல்வி முறையின் பெரும்பகுதி ஆர்எஸ்எஸ் மீது விசுவாசம் கொண்டவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை மற்றும் நவீன சிந்தனைக்கு மாபெரும் அச்சுறுத்தலாகும். எதிர்காலத்தில், நாட்டில் கல்வி அமைப்பு முறையைத் தூய்மைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியிருக்கும்.

ஆர்எஸ்எஸ்-ஆல் இயக்கப்படும் முக்கிய அமைப்புகள்

ஆர்எஸ்எஸ்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட 32 அமைப்புகள் உள்ளன. இவற்றின் பிரதிநிதிகள் ஆர்எஸ்எஸ்-இன் அகில பாரதிய பிரதிநிதி சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த 32 அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ், பொருளாதாரம், சேவை, கல்வி, பாதுகாப்பு, மக்கள் மற்றும் சித்தாந்தங்கள் என்ற ஆறு குழுக்களாகப் பிரித்தது. இந்தக் கல்விக் குழு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தி கொள்கைக்கான பரிந்துரைகளை முன்வைத்தனர். சுமார் 10 அல்லது 11 அமைப்புகள் கல்விக் குழுக்களாகச் செயல்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை: 

அமைப்பு  - நோக்கம் / செயல்பாடு 

l அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP)    - ஆர்எஸ்எஸ் மாணவர் முன்னணி. உயர்கல்வி மையங்களில் இயங்குவது. ஜேஎன்யு (JNU) போன்ற வளாகங்களில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்ததற்குப் பொறுப்பு.

 l     வித்யா பாரதி -    15,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 60 கல்லூரிகளை நடத்துகிறது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைப் பள்ளிகள் மூலம் பரப்புவதற்கான முக்கிய வாகனம். “தேசபக்தி ஆர்வத்தால் நிரப்பப்பட்ட இளைய தலைமுறையை உருவாக்குவதே” இதன் நோக்கம். சைனிக் பள்ளிகளை நடத்துவதற்கான ஆணையும் பெற்றுள்ளது.

  l     அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்சிக் மகாசங்கம் - ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு. “கல்வி மற்றும் சமூகத் துறையில் கலாச்சார தேசியவாதத்தின் சித்தாந்தத்தைப் பரப்புவதே” இதன் நோக்கம்.

  l     அகில பாரதிய இதிஹாஸ் சங்கலன் யோஜ்னா -  இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ‘உண்மையான’ வரலாற்றைத் தொகுப்பது, ஆரிய படையெடுப்புக் கோட்பாடு போன்றவற்றைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 l    சிக்சா சமஸ்கிருத உத்தன் நியாஸ்- இந்திய மதிப்புகளை மேம்படுத்துவம், மாணவர்களின் ‘பண்பை’ வளர்ப்பதும், பண்டைய கலாச்சார பாரம்பரியத்தை ஊட்டுவது என்ற பெயரில் 2007-இல் அமைக்கப்பட்டது.

 l    விஞ்ஞான் பாரதி - ‘சுதேசி சிந்தனையைப் புகுத்துவதையும்’, பண்டைய இந்திய அறிவியல் அறிவை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நோக்கங்களைக் கொண்டு ள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 1960-களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சித்தாந்தப் பிரச்சாரக் கருவிகளாகும். மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த அமைப்புகளுக்குச் செயல்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் அகலத் திறந்துவிடப்பட்டன. 

 l சமஸ்கிருத பாரதி - சமஸ்கிருதம் பேசுவதை ஊக்குவிக்கிறது. இதை ‘அனைத்து மொழிகளின் தாய்’ என்று கருதுகிறது.