tamilnadu

img

‘தமிழக ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது’

‘தமிழக ஒப்புதல் இல்லாமல்  மேகதாது அணை கட்ட முடியாது’

வேலூர், நவ. 16-  தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  வேலூர் மாவட்டம், காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாது அணை விவகாரத்தில் திமுக  அரசு தளர்வாக நடந்து கொள்கிறது என எழும் விமர்சனங்களை கடுமையாக எதிர்த்தார். காவிரியின் குறுக்கே மேகதாது வில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திட்ட அறிக்கை தயாரிப்பு மட்டுமே நடை பெறுவதால் தமிழ்நாட்டின் மனு முன் கூட்டியானது என தெரிவித்து, நீதிமன்றம் வழக்குகளை முடித்து வைத்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்ததை அடுத்து, அமைச்சர் துரைமுரு கன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.