வேடசந்தூரில் சிபிஎம் நவம்பர் புரட்சி தின பேரணி
நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை செந்தொண்டர் பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து துவங்கிய இந்த பேரணியை கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், எம்.ராமசாமி, டி. முத்துசாமி, கே.ஆர்.பாலாஜி, வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பாலச்சந்திரபோஸ், குஜிலியம்பாறை ஒன்றியச் செயலாளர் ஜெயபால், வடமதுரை ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி, வேடசந்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
