மதுரை புறநகரில் செந்தொண்டர் அணிவகுப்பு
நவம்பர் புரட்சி தினத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் அணிவகுப்பு மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் ஹார்விபட்டியில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., கே.அர்ச்சுணன் ஆகியோர் அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, த.செல்லக்கண்ணு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவி, எஸ்.பி.இளங்கோவன், செ.முத்துராணி, பி.ஜீவானந்தம், வி.சமயன், எஸ்.பாலகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் என். விஜயா, திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
