articles

img

8 வகையான அசாதாரணப் போக்குகளுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

8 வகையான அசாதாரணப் போக்குகளுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

நேற்றைய செய்திக் கட்டுரையில் தமிழக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில் வெளிப்பட்ட ஐந்து அசாதாரண போக்குகளை ஆராய்ந்தோம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் விரிவான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில்,  மேலும் மூன்று முக்கியமான முறைகேடு வாய்ப்பு களையும், மாவட்ட மற்றும் தொகுதி  அடிப்படையி லான எண்ணிக்கை முரண்பாடுகளையும் ஆராய லாம். இந்த முரண்பாடுகள் வெறும் புள்ளி விவர தவறுகள் அல்ல; அவை திட்டமிட்ட வாக்காளர் நீக்கத்தின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றன.  வாக்காளர் இல்லாத வாக்குச்சாவடிகள்  3,904 வாக்குச்சாவடிகள் அதிக மரண விகிதங்களை பதிவு செய்துள்ளன. இயல்பான மக்கள்தொகையியல் மாற்றங்களை விட  இது, இரு மடங்கு அதிகம். 8,613 வாக்குச் சாவடிகளில் மரணம் காரணமாக நீக்கப்பட் டோரின் எண்ணிக்கை மிகையானது. இந்த  எண்கள் சாதாரணமானவை அல்ல. தமிழ கத்தின் சராசரி மரண விகிதம் ஆயிரம் பேருக்கு 7-8 பேர். இந்த விகிதப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு 1,000 வாக்காளர் கொண்ட சாவடியில் 14-16 மரணங்கள் மட்டுமே நடந்திருக்க வேண்டும். கோவிட்-19 தொற்றை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், 25-30 மர ணங்களுக்கு மேல் செல்லக்கூடாது. ஆனால் சில சாவடிகளில் 100-200 மரணங்கள் பதிவாகியுள்ளன.  திருச்செந்தூர் தொகுதி  அரசு துவக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் 110 மரணங்கள். மானங்குடி  ஒ.ஒ. மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் 74 மரணங்கள். சென்னை அண்ணா நகர் தொகுதி ஜெய் கோபால் கரோடியா வித்யாலயா வாக்குச்சாவடியில் 835 மொத்த நீக்கங்களில் 600க்கும் மேல் மரணங்கள் என  கணக்கிடப்படுகிறது. இந்த கணக்குகள் பொருந்தவில்லை. கோவிட் தொற்று மிக அதிக மாக பாதித்த சென்னை, சேலம், மதுரை, திருச்சி நகரங்களில் கூட, ஒரு வாக்குச்சாவடியில் 100 மரணங்கள் என்பதற்கு பொருத்தமான விளக்கங்கள் இல்லை. இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கும் விஷ யம், இந்த அதிக மரண விகிதம் காட்டப்பட்டுள்ள சாவடிகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட மாவட்டங்களில் குவிந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 260க்கும் மேற்பட்ட சாவடிகளில் அசாதாரண மரண விகிதங்கள். சென்னை மாவட்டத்தில் 89 சாவடிகள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 42. இந்த மாவட்டங் களில் என்ன சிறப்பு? இவை அனைத்தும் நகர்ப்புற அல்லது அரை நகர்ப்புற பகுதிகள். வாக்காளர் இடப்பெயர்வு அதிகம் உள்ள இடங்கள். இங்கு மரணம் என்ற காரணத்தை சொல்லி வாக்காளர்களை நீக்குவது எளிது. ஏனெனில் உறவினர்கள் வேறு இடங்களில் இருக்கலாம், உண்மை தெரியாமல் இருக்கலாம்.  தரவுகள் எழுப்பும் சந்தேகம்  எஸ்ஐஆர் செயல்முறையின் போது, வாக்குச் சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக் கும் சென்று வாக்காளர்களை சரிபார்க்கிறார் கள். இவர்கள் பூர்த்தி செய்யும் படிவங்களின் அடிப்படையில் தான் வாக்காளர்கள் நீக்கப் படுகிறார்கள் அல்லது தக்க வைக்கப்படுகிறா ர்கள். இந்த செயல்முறையில் மனித தவறுகள், தரவு உள்ளீட்டு பிழைகள் சாதாரணமானவை. ஆனால் ஒரே சாவடியில் 500-600 பேரை ‘மரணம்’ அல்லது ‘குடியிருப்பில் இல்லை’ என வகைப்படுத்துவது வெறுமனே தவறு அல்ல, வேண்டுமென்றே செய்யப்படுவது.  குறிப்பிட்ட சாவடிகளில் குறிப்பிட்ட சமூகங் களின் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படு கிறார்களா? குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் பகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியா? இந்தக் கேள்விகள் இதில் ஏதோ சதி நடந்திருக்கலாம் என்ற சந்தே கத்தில் எழுப்பப்படுவது போல் தோன்றலாம். ஆனால் புள்ளிவிவரங்கள் இதற்கான முகாந்தி ரத்தை அளிக்கின்றன. சில தொகுதிகளில் எஸ்ஐஆர்-க்குப் பிறகு வாக்காளர் எண்ணி க்கை 2021 தேர்தலில் பதிவான வாக்குகளை விட குறைவு. இது எப்படி சாத்தியம்? வாக்குப் பதிவு  80 சதவீதம் என்றால், வாக்காளர் எண்ணிக் கை பதிவான வாக்குகளை விட 20 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் சில தொகுதிகளில் இது தலைகீழாக உள்ளது.  மாவட்ட அடிப்படையிலான அசமத்துவம்  சென்னை மாவட்டத்தில் 35.58 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். செங்கல் பட்டு மாவட்டத்தில் 25.18 சதவீதம். திருப்பூர் மாவட்டத்தில் 23.06 சதவீதம். ஆனால் தர்ம புரி மாவட்டத்தில் மொத்தம் 6.34 சதவீதம் மட்டுமே. அரியலூர் மாவட்டத்தில் 4.59 சத வீதம். கள்ளக்குறிச்சியில் 7.27 சதவீதம். இந்த மாவட்டங்களுக்கிடையே ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு? நகர்ப்புற மாவட்டங்களில் இடப் பெயர்வு அதிகம் என்ற வாதம் ஓரளவு ஏற்கத் தக்கது. ஆனால் சென்னையில் 35 சதவீதம், தர்மபுரியில் 6 சதவீதம் என்பது ஐந்து மடங்கு வேறுபாடு. இது வெறும் இடப்பெயர்வு வேறு பாட்டை விட அதிகம்.  கோவை மாவட்டம் தமிழகத்தின் இரண்டா வது பெரிய நகரம். ஆனால் இங்கு 20.17 சத வீதம் மட்டுமே நீக்கம். சென்னையை விட 15 சதவீத புள்ளிகள் குறைவு. இந்த இரண்டு நகரங்களும் தொழில் மற்றும் வணிக மையங் கள். இடப்பெயர்வு முறைகள் ஒத்திருக்க வேண்டும். ஆனால் நீக்க விகிதத்தில் இவ்வளவு பெரிய வேறுபாடு ஏன்? திருப்பூர் மாவட்டம் நெசவுத் தொழில் மையம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிற மாநிலங்களிலிருந்து வரு கிறார்கள். அவர்கள் தற்காலிகமாக வாக்காளர் பதிவு செய்திருந்தால், அவர்களை நீக்குவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் 23 சதவீதம் நீக்கம் என்பது மொத்த வாக்காளர் தளத்தில்  கிட்டத்தட்ட கால்பங்கை குறிக்கிறது. இது இயல்பானதா?  தொகுதி வகை அடிப்படையிலான முரண்பாடு  பட்டியலின (எஸ்சி) ஒதுக்கீட்டுத் தொகுதி களில் சராசரியாக 12.63 சதவீதம் நீக்கம். பழங்குடியினர் (எஸ்டி) தொகுதிகளில் 9.73 சதவீதம். பொதுத் தொகுதிகளில் 15.5 சதவீதம். இந்த வேறுபாடு ஓரளவு ஏற்கத்தக்கது என்ற நிலையில், சில தனிப்பட்ட எஸ்சி தொகுதிகளில் அசாதாரண நீக்கங்கள் உள்ளன. சென்னை மாவட்டம் சென்னை எஸ்சி தொகுதியில் 38 சத வீதம் நீக்கம். இது மாநில சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். சென்னை மாவட்டம் பூந்த மல்லி எஸ்சி தொகுதியில் 46,865 வாக்குகள் நீக்கம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி எஸ்சி தொகுதியில் 41,809 வாக்குகள் நீக்கம். இவை அனைத்தும் எஸ்சி தொகுதிகள் என்ப தால், இங்கு வசிக்கும் எஸ்சி சமூக வாக்கா ளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எஸ்சி/எஸ்டி சமூகங்கள் பாரம்பரியமாக முற்போக்கு, இடதுசாரி, சமூக நீதி கட்சிகளுக்கு வாக்களிக்கின்றன. இந்த தொகுதிகளில் அதிக நீக்கங்கள் என்பது இந்த வாக்குவங்கியை பலவீனப்படுத்தும் முயற்சியா? ஏன் சென்னை எஸ்சி தொகுதி மட்டும் 38 சதவீதம் நீக்கம், மற்ற எஸ்சி தொகுதிகள் 10-15 சதவீதம் மட்டுமே? இந்த தொகுதியில் குறிப்பிட்ட அரசியல் கணக் கீடு உள்ளதா? 2021 தேர்தலில் இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. அப்போது 40 சதவீத வாக்குகள் மூலம் வெற்றி. இப்போது 38 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர்கள் யார்? எந்த கட்சிக்கு வாக்களித்த வர்கள்? இந்த கேள்விகளுக்கு பதில் தெரியா விட்டால், மேற்கண்ட நீக்கத்தின் அரசியல் நோக்கம் தெரியாது.  வாக்குப்பதிவு புள்ளி விவரங்களின் முரண்பாடு  தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் பகுப்பாய்வின்  படி, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டத் தொகுதிகளில் எஸ்ஐஆர்-க்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை 2021, 2024 தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட அதிகமாக உள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட தொகுதிகளில் இது தலைகீழ். சென்னை மாவட்டம் வில்லிவாக்கம், ஆர்.கே.நகர், பெரம்பூர், அண்ணா நகர் ஆகிய நான்கு தொகுதிகளில் 2021இல் பதிவான வாக்குகள் திருத்தப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட அதிகம். ஆர்.கே.நகர் தொகுதியில் இந்த வித்தியாசம் 8,671 வாக்குகள்.  இது எப்படி சாத்தியம்? 2021இல் 1 லட்சம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு 70 சத வீதம் என்றால், வாக்காளர் எண்ணிக்கை 1.42  லட்சமாக  இருந்திருக்க வேண்டும். ஆனால் எஸ்ஐஆர்-க்குப் பிறகு வாக்காளர் எண்ணிக் கை 1.35 லட்சம் மட்டுமே. இடையில் 7,000 வாக்காளர்கள் எங்கே போனார்கள்? இவர்கள் இறந்தவர்களா? இடம்பெயர்ந்தவர்களா? அல் லது 2021இல் போலி வாக்குகள் பதிவாகினவா? இரண்டாவது கேள்விக்கு பதில் ஆம் என்றால், எஸ்ஐஆர் நல்ல வேலை செய்துள்ளது. ஆனால் முதல் கேள்விக்கு பதில் ஆம் என்றால், உண்மை யான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எது உண்மை என்பதை தேர்தல் ஆணையம் மட்டுமே சொல்ல முடியும்.  எண்ணிக்கை  முரண்பாடுகளின் தொகுப்பு  234சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் எஸ்ஐஆர்-க்கு முன்  இருந்தனர். அக்டோபர் 27 அன்று, 2024  வாக் காளர் பட்டியல் புதுப்பிப்புப் படி இது சரியான எண்ணிக்கை. எஸ்ஐஆர்-க்குப் பிறகு இது 5.43 கோடியாக குறைந்துள்ளது. 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 49.9 லட்சம் பெண்கள், 47.3 லட்சம் ஆண் கள். பெண்கள் 2.6 லட்சம் அதிகம் நீக்கப்பட் டுள்ளனர். இது திருமண இடப்பெயர்வை விட அதிகமா என்ற கேள்விக்கு பதில் தேவை.  தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன. இதில் பெண்கள் சராசரியாக 40 சதவீதம் வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்கிறார்கள் என எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு 2 லட்சம் பெண் இடப்பெயர்வு. கடந்த இரண்டு ஆண்டு களில் 4 லட்சம். ஆனால் எஸ்ஐஆர்-ல் 49.9 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் அனைவரும் இடப்பெயர்வு காரணமாக இல்லை. மரணம், நகல், வேறு காரணங்கள் உண்டு. ஆனால் ‘இடப்பெயர்வு’ காரணமாக நீக்கப்பட்ட பெண்கள் 30 லட்சத்திற்கும் மேல்  என தரவு காட்டுகிறது. இந்த கணக்கு பொருந்த வில்லை. கடந்த 10-15 ஆண்டுகளில் வாக்கா ளர் பட்டியலில் பதிவு செய்யப்படாத திருமண இடப்பெயர்வுகள் இப்போது சரி செய்யப்படு கின்றன என்று வாதிடலாம். ஆனால் 30 லட்சம் என்பது மிகையானது.  ஒதுக்கீட்டுத் தொகுதிகளின் அரசியல் கணக்கீடு  44 எஸ்சி தொகுதிகளில் மொத்தம் 14.11 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சரா சரியாக ஒரு எஸ்சி தொகுதியில் 32,080 நீக்கம் மாநில சராசரி 41,615. எஸ்சி தொகுதிகளில் 23  சதவீதம் குறைவான நீக்கம். இது எஸ்சி சமூ கங்களில் இடப்பெயர்வு குறைவு என்பதை காட்டு கிறது. இவர்கள் பெரும்பாலும் பாரம்பரிய குடி யிருப்பில் தொடர்கிறார்கள். இது நல்ல அறிகுறி. ஆனால் சில எஸ்சி தொகுதிகளில் மாநில சராசரியை விட அதிக நீக்கங்கள். சென்னை எஸ்சி தொகுதி, பூந்தமல்லி, பரமக்குடி, மயி லாடுதுறை போன்றவை. இவை அனைத்தும் நகர்ப்புற அல்லது அரை நகர்ப்புற தொகுதி கள். இங்கு எஸ்சி சமூகத்தினரும் வேலை கார ணமாக இடம்பெயர்கிறார்கள். ஆனால் இந்த நீக்கங்கள் உண்மையான இடப்பெயர்வா அல்லது வாக்குவங்கி குறைப்பா என்ற கேள்வி எழுகிறது.   ஏற்காடு மற்றும் சேந்தமங்கலம் ஆகிய 2 எஸ்டி தொகுதிகளில் மொத்தம் 52,244 நீக்கம். சராசரி 26,122. இது மாநில சராசரியை விட 37 சதவீதம் குறைவு. எஸ்டி சமூகங்கள் மலைப்பகு திகளில் நிலையான வாழ்க்கை வாழ்வதால், இடப்பெயர்வு மிகக் குறைவு. முக்கியமாக, எஸ்டி வாக்காளர்களின் சதவீதம் எஸ்ஐஆர்-க்கு முன் 17.43 சதவீதமாக இருந்து, எஸ்ஐஆர்-க்குப் பிறகு 18.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது எஸ்டி சமூகங்களுக்கு சாதகமான விளைவு. ஆனால் மற்ற சமூகங்களுக்கு என்ன நடந்தது? 190 பொதுத் தொகுதிகளில் சராசரியாக 43,500 நீக்கம். இது எஸ்சி/எஸ்டி தொகுதிகளை விட அதி கம். பொதுத் தொகுதிகளில் அனைத்து சமூ கங்களும் உள்ளன.  இவர்களில் யார் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்? இதற்கு தரவு இல்லை.  தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு  இரண்டு நாள் கட்டுரைகளில்  எட்டு வகை யான அசாதாரண போக்குகளையும், பல கணித முரண்பாடுகளையும் ஆராய்ந்துள் ளோம். இவை அனைத்தும் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவு பகுப்பாய்வுகளின் அடிப்படையானவை. இந்த கண்டுபிடிப்புகள் தேர்தல் ஆணையத்திற்கு பல கேள்விகளை எழுப்புகின்றன. குறிப்பாக: w    14 சாவடிகளில் அசாதாரண இளம் வயது மரணங்களை எப்படி விளக்குவீர்கள்? w 35 சாவடிகளில் 75-82 சதவீத பெண் வாக்காளர் நீக்கத்தின் காரணம் என்ன? w 727 சாவடிகளில் 100க்கும் மேற்பட்ட மரண அறிவிப்பு கள் உண்மையா? w 6,139 சாவடிகளில் ‘குடியிருப்பில் இல்லை’ என வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு அனுப்பப் பட்டதா? w சென்னை எஸ்சி தொகுதியில் மட்டும் ஏன் 38 சதவீத நீக்கம்? w    வில்லிவாக்கம், ஆர்.கே.நகர் போன்ற தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 2021 வாக்குகளை விட குறை வாக இருப்பது எப்படி?  தேர்தல் ஆணையம் இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் அளிக்க வேண்டும். குறிப் பாக, அசாதாரண போக்குகள் கொண்ட வாக்குச் சாவடிகளில்  விசாரணை நடத்த வேண்டும். வாக்குச்சாவடி மட்ட விரிவான தரவுகளை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளருக்கும் அறி விப்பு அனுப்பப்பட்டதா என உறுதி செய்ய வேண்டும். நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவதற்கான எளிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.  தமிழகத்தின் அனைத்து வாக்காளர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில், அடுத்த தேர்த லின் முடிவுகள் கேள்விக்குறியாகும். தொகுப்பு : எஸ்.பி.ராஜேந்திரன்