articles

img

ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீட்க தொடர்ந்து வலுவாகப் போராடுவோம்! - கே.பாலபாரதி

ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீட்க தொடர்ந்து வலுவாகப் போராடுவோம்!

இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களின் பசிப்பிணியைப் போக்கக் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA), ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுச் சிதைத்துள்ளது. சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் வாயிலாக இந்தச் சட்டத்தையே ரத்து செய்து, புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை நசுக்கும் செயலாகும். போராட்டத்தினால் விளைந்த  உரிமைச் சட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, இடதுசாரிக் கட்சிகள் கொடுத்த கடும் அழுத்தத்தின் விளைவாகவே 100 நாள் வேலைத் திட்டம் சட்ட மாக்கப்பட்டது. அன்றைய சூழலில் பட்டினிச் சாவுகள் மலிந்திருந்த இந்தியக் கிராமங்களில், நிலமற்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஒரு கௌரவமான வாழ்வையும், உணவுக்கான உத்தரவாதத்தையும் இச்சட்டம் வழங்கியது.

இது வெறும் அரசுத் திட்டம் மட்டுமல்ல; கிராமப்புற மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை உயிரோடு வைத்திருப்பதற்கான ஒரு அடிப்படை உரிமை. இச்சட்டத்தைப் பயன் படுத்தித் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை லட்சக் கணக்கான மக்கள் ஆண்டுக்குச் சில நாட்களாவது ஊதியம் பெற்றுத் தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொண்டனர். அன்றைய ஆட்சியாளர்கள் மனமுவந்து இத்திட்டத்தைக் கொண்டு வரவில்லை. இடதுசாரிக ளின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சி நீடிக்கும் என்ற அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, இந்திய நாடு முழுவதும் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்கள் இரண்டு நேர உணவிற்காக அல்லாடிய சூழலை மாற்றவே இந்தச் சட்டம் இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டது. அன்று இடதுசாரிகள் ஏழை மக்களின் குரலாக ஒலித்ததால் விளைந்த அந்தச் சட்டம், இன்று பாஜகவின் கார்ப்பரேட் அரசியல் வேட்கைக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. பெயருக்குப் பின்னால்  ஒளிந்திருக்கும் அரசியல் சூழ்ச்சி தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு ‘விபி ஜி ராம் ஜி’ (VB G RAM G) போன்ற பெயர்கள் சூட்டப்படுவது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உலகமே போற்றும் இந்திய விடு தலைப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தியின் பெயரை நீக்க வேண்டிய அவசியம் என்ன? இது ஏதோ அம்பானி அல்லது அதானியின் தனியார் நிறு வனப் பெயரைப் போல ஒலிக்கிறது. இதில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்டகாலக் காழ்ப்புணர்ச்சியே வெளிப்படுகிறது.

காந்தியைச் சுட்டுக் கொன்ற தத்துவப் பின்னணி கொண்டவர்கள், இன்று அரசின் ஒவ்வொரு திட்டத்திலிருந்தும் காந்தி யின் அடையாளத்தை அழித்து, நாட்டை ஒரு குறிப்பிட்ட மதவாதத் தத்துவத்திற்குள் கொண்டு செல்ல முனைகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த வேளையில், மகாத்மா காந்தி என்ற பெயரே அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்து கிறது. நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவரின் பெயரை ஒரு திட்டத்திலிருந்து அகற்றுவது என்பது இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதும் ஆபத்தான வேலையாகும். இது வெறும் பெயர் மாற்றம் மட்டு மல்ல, காந்தி முன்னிறுத்திய மதச்சார்பற்ற இந்திய அடையாளத்தின் மீதான நேரடித் தாக்குதல். 125 நாள் வேலை: ஒரு மாயத் திரை புதிய சட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்கப் படும் என்று கூறப்படுவது அப்பட்டமான பொய். ஏற்கெனவே இருந்த சட்டத்திலேயே வேலை நாட்க ளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு முதலே இத்திட்டத் திற்கான நிதியை ஆண்டுதோறும் குறைப்பதும், ஆறு மாதக் கணக்கில் ஊதிய நிலுவை வைப்பதும் பாஜக அரசின் வாடிக்கையாகிவிட்டது. வேலை நாட்களை உயர்த்துவதாகச் சொல்லும் இந்த அரசு, மறுபுறம் பல முட்டுக்கட்டைகளைப் போடுகிறது.

விவசாய வேலைகள் இருக்கும் காலங்க ளில் 60 நாட்களுக்கு வேலை தரக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகள், நிலமற்ற ஏழைத் தொழிலா ளியின் வாழ்வாதாரத்தைச் சுருக்குகின்றன. 125 நாள் வேலை என்பது மக்களை ஏமாற்றுவதற்காக வீசப்படும் வெற்று முழக்கம் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை. தொழிலாளர்கள் மீதான  தொழில்நுட்ப ஒடுக்குமுறை கிராமப்புற உடல் உழைப்புத் தொழிலாளர்க ளை ஐ.டி நிறுவன ஊழியர்களைப் போல அதி காலை 6:30 மணிக்கே பயோமெட்ரிக் (கைரேகை) வைக்கச் சொல்லி வற்புறுத்துவது, அவர்கள் வேலை யை விட்டு ஓட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இணைய வசதி இல்லாத இடங்களில் மொபைல் ஆப் மூலம் வருகைப் பதிவு எடுப்பது போன்ற நடைமுறைகள், படிப்பறிவில்லாத எளிய மக்களைத் திட்டத்தை விட்டு வெளியேற்றும் ஒரு மறைமுக சூழ்ச்சி. எட்டு மணி நேரத்திற்கு மேலாக வெயிலிலும் மழையிலும் உடல் உழைப்பைத் தரும் தொழிலாளர்களின் உரிமையை இத்தகைய தொழில் நுட்ப நெருக்கடிகள் மூலம் ஒன்றிய அரசு பறித்து வருகிறது. மாநில உரிமைகளும்  நிதி நெருக்கடியும் புதிய சட்டத்தின்படி, மாநில அரசுகள் 40 சதவீத நிதியை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே மாநிலங்களின் நிதி உரி மைகளைப் பறித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது ஏழைகளுக்கான திட்டத்திலும் கைவைக்கிறது. இது மாநில அரசுகளின் நிதிச் சுமையை அதி கரிப்பதோடு, இறுதியில் இத்திட்டத்தையே கைவிடச் செய்யும் ஒரு தந்திரமாகும். குளம், கண்மாய் பராமரிப்பு போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் திட்ட மிடப்பட்ட வேலைகளைப் பறித்து, அதிகாரத்தைப் பரவலாக்காமல் ஒற்றை மைய ஆட்சிக்குக் கீழ் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரானது. தொடர்ந்து போராடுவோம்! உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை மீட்டெ டுக்கவும், காந்தியின் பெயரையும் ஏழைகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டா யத்தில் நாம் இருக்கிறோம்.

100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், தினக் கூலியை 600 ரூபாயாக வழங்க வேண்டும்; மற்றும் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க இடது சாரி இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடரும்.  டிசம்பர் 24-ஆம் தேதி தமிழ்நாடு முழு வதும் நடைபெற்றுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் என்பது ஒரு ஆரம்பம்தான். பழைய சட்டத்தை மீண்டும்  அமல்படுத்தும் வரை, உழைக்கும் மக்களின் உரிமைக்குரல் ஓயாது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இப்போ ராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும். ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த கார்ப்பரேட் சார்பு மதவாத அரசியலை வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.