ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தைக் கிழித்தெறிய வேண்டிய நேரம் இது. மக்கள் திரண்டு வீதிக்கு வரும்போதுதான் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மீது ஒரு அழுத்தம் ஏற்படும். பாலஸ்தீன விவகாரத்தில் மக்கள் போராட்டம்தான் பல நாடுகளைத் தனது நிலைபாட்டை சற்றே மாற்றத் தூண்டியது. அதேபோன்ற ஒரு எழுச்சி வெனிசுலா விவகாரத்திலும் தேவை. சுதந்திரம், இறையாண்மை மற்றும் சோசலிசத்தின் மீதான தாக்குதலை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
வெனிசுலா மீதான அமெரிக்க அராஜகம் சீரழிந்த புதிய உலக ஒழுங்கிற்கான ஏகாதிபத்திய சதி!
ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது, சர்வதேச விதிமுறைகள் இருக்கின்றன, ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், இவை யெல்லாம் யாருக்காக? “ஊருக்குத்தான் உபதேசம், அமெரிக்காவிற்கு அல்ல” என்பதுதான் இன்றைய கசப்பான உண்மை. எந்த நாட்டின் மீதும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம், எந்தச் சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்கிற ஏகாதிபத்திய ஆணவத் தோடு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இன்றைய உலக ஒழுங்கு (World Order) என்பது அனைத்து நாடு களுக்கும் பொதுவானதாக இல்லை; மாறாக, ஏகாதி பத்தியத்தின் வல்லடி மற்றும் வம்படிகளுக்குச் சாதக மான ஒரு களமாகவே மாற்றப்பட்டிருக்கிறது. 2026- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டிருப்பது, இந்த அராஜகத்தின் உச்சகட்டமாகும்.
நள்ளிரவில் அரங்கேறிய சர்வதேசக் கிரிமினல் குற்றம்
ஒரு சுதந்திரமான நாட்டிற்குள், தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு ஜனாதிபதியின் வீட்டின் அறைக்குள் அந்நியப் படைகள் புகுந்து தாக்குதல் நடத்துவது என்பது சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது இணையர் சீலியா புளோரஸ் ஆகிய இருவரையும் கடத்தி, கண்களைக் கட்டி, கைகளில் விலங்கிட்டு அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றிருப்பது அநாகரிகமான செயலாகும். ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்காமல், ஒரு தேசத்தின் தலைவரையே தூக்கிச் சென்றிருப்பது சர்வதேச சமூகத்திற்கே விடப்பட்ட சவாலாகும்.
எண்ணெய் வளமா? அரசியலா? – டிரம்பின் அகங்காரக் கூப்பாடு
வெனிசுலா மீதான தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சொல்லும் காரணம் மிகவும் விசித்தி ரமானது. “எங்களுடைய எண்ணெய் வளத்தை மீட்டெடுக்கவே இந்தத் தாக்குதல்” என்கிறார் அவர். இன்னொரு இறையாண்மை பொருந்திய நாட்டின் மண்ணையும் வளத்தையும் “எங்களுடையது” என்று சொல்வதுதான் ஏகாதிபத்தியத்தின் அடையாளம். “பூமிக்கடியில் இருப்பதெல்லாம் எங்களுடைய வளம்” என்கிற அந்தத் தடித்த அகங்காரக் கூப்பாடு வெனிசுலா மீதான அமெரிக்காவின் கார்ப்பரேட் வேட்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடாக வெனிசுலா இருக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் ஒரு காலத்தில் அங்கு புகுந்து எண்ணெ ய்யை அள்ளிக்கொண்டு போயின. 1999-இல் ஹியூ கோ சாவேஸ் கொண்டு வந்த புதிய அரசியல் சட்டமும், அதன் அடிப்படையிலான ஹைட்ரோகார் பன் சட்டமும் இந்தச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. “வெனிசுலா மண்ணின் வளம் மக்களுக்கே சொந்தம்” என்று அவர் பிரகடனம் செய்தார். அமெரிக் காவின் மோபில் (Mobil), செவ்ரான் (Chevron) போன்ற எண்ணெய் நிறுவனங்கள் தனித்து இயங்க முடியாது, வெனிசுலாவின் உள்நாட்டு நிறுவனங் களோடு இணைந்தே செயல்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடுதான் அமெரிக்காவின் ஆத்திரத்திற்கு அடிப்படை; ஓராண்டுக்குள் சாவேஸைப் பதவி கவிழ்ப்பு செய்ய சதி; பிறகு துவங்கியது ஏகாதிபத்தி யத்தின் நூதன தாக்குதல் (hybrid war). தன்னார்வ அமைப்புகள், கார்ப்பரேட் ஊடகங்கள், வெனிசுலா வில் இருந்த வலதுசாரி பிற்போக்கு சக்திகளைப் பயன்படுத்துதல், பொருளாதார நெருக்குதல் மற்றும் தடைகள், முதலீடோ கடனோ கிடைக்க விடாமல் செய்தல் எனப் பல வழிகளில் சுற்றி வளைத்தது. சாவேஸ் ஆட்சியைக் கீழே இறக்க கருத்துக்கணிப்பு நடத்தி, ‘ஜனநாயக பாதுகாவலாளி’என்று மேற்கத்திய ஊடகங்களால் புகழப்படும் மரியா கொரினா மச்சாடா, இவ்வாறு அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்டவர் தான். சாவேஸ் ஆட்சிக்கு முன்னர், மச்சாடாவின் தந்தை, அங்கு உருக்கு தொழிலில் சக்கை போடு போட்டு லாபம் அள்ளியவர். முற்போக்கு சக்திகள் ஆட்சியைப் பிடித்தது இவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மச்சாடாவுக்குப் பரிசு வழங்கும் போது நோபல் பரிசு கமிட்டியின் தலை வர், மதுரோ பதவி விலக வேண்டும் என்று பேசினார். நோபல் பரிசுக்கு பின்னால் இருக்கும் இந்த அரசி யலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சாவேஸின் இடதுசாரிப் பார்வையும் மக்கள் நலனும்
சாவேஸ் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைத்த பணத்தை மூன்று முக்கியமான தளங்களில் பயன் படுத்தினார். இதுதான் அமெரிக்காவிற்குப் பெரும் கவலையைத் தந்தது.
தலாவதாக, அந்தப் பணத்தைக் கொண்டு கல்வி, சுகாதாரம், குடியிருப்பு என அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். குறிப்பாக, பெண்கள் செய்யும் வீடுசார் வேலைகளுக்கு ஒரு மதிப்பு வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு ‘உரிமைத் தொகை’ வழங்கும் சட்டத்தை (குறைந்த பட்சக் கூலியில் 75%) முதன்முதலில் அமல்படுத்தி னார். தீவிர வறுமை ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினார். எழுத்தறிவின்மையை 100% ஒழித்தார். 42 புதிய பல்கலைக்கழகங்களைத் துவங்கி உயர்கல்விக்கு வழி வகுத்தார். நில சீர்திருத்தம், நிலவினியோகம் ஆகியவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். அரசு சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் மலிவு விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். உள்ளாட்சி அமைப்புகள் போன்ற ஏற்பாட்டை உருவாக்கி அடிமட்ட ஜனநாயகத்தைப் பரவலாக்கினார். இவை மக்களிடையே பெரும் ஆதரவை உருவாக்கியது.
இரண்டாவதாக, ஒரு துருவ உலகிற்கு (Unipolar World) மாற்றாகப் பிராந்திய அளவிலான ஒத்து ழைப்பு மேடைகளை உருவாக்கினார். அண்டை நாடு களுக்கு மலிவான விலையில் எண்ணெய் வழங்கி, அமெரிக்காவின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க முயன்றார்.
மூன்றாவதாக, ‘பெட்ரோ டாலர்’ (petro dollar) அரசியலுக்கு அவர் மரண அடி கொடுத்தார். எண் ணெய் வர்த்தகம் டாலரிலேயே நடக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் டாலர் மேலாதிக்கத்துக்கு சவால் விட்டு, மாற்று நாணய முறைகளை முன்னெடுத் தார். ஐநாவில் உரையாற்ற கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆயுதங்களாக மாற்றி னார். இந்த “இடதுசாரிப் பார்வை” (Left Vision) லத்தீன் அமெரிக்க நாடுகள் எங்கும் பரவிவிடுமோ என்கிற அச்சத்தின் தொடர்ச்சியே வெனிசுலாவைத் தாக்க அமெரிக்காவைத் தூண்டியுள்ளது. கச்சா எண் ணெய் வேண்டும் என்பதோ, அமெரிக்க நிறு வனங்கள் கொள்ளை லாபம் அடித்து கொழிக்க வேண்டும் என்பதோ காரணங்கள் தான். ஆனால் எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்காவுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்பதை விட, வெனி சுலாவுக்கு கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதே பிரதானம். மேலும் சோசலிச கியூபாவின் உற்ற தோழ ராக வெனிசுலா இருப்பதும், (இரு நாடுகள் ஓர் இதயம் என்று வெனிசுலா - கியூபா நட்பை சாவேஸ் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது) அமெரிக்க தாக்கு தலுக்கு ஒரு காரணம்.
மன்றோ கோட்பாடும் ஆக்கிரமிப்பு குணாம்சமும்
அமெரிக்கா 1823-இல் அன்றைய ஜனாதிபதி ஜேம்ஸ் மன்றோ உருவாக்கிய “மன்றோ கோட் பாட்டை” (Monroe Doctrine) இப்போதும் கையில் எடுக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்து விடுதலையாகி சுதந்திர நாடுகளாக லத்தீன் அமெரிக்க பிரதேசம் மாறியபோது, லத்தீன் அமெரிக்காவைத் தனது கொல்லைப்புறமாகக் கருதி, அங்கு ஐரோப்பிய நாடுகள் தலையிடக் கூடாது, அமெரிக்கக் கட்டுப்பாடு மட்டுமே செல்லுபடி ஆகும் என்று சொல்லும் இந்தக் கோட்பாடு ஒரு நூற்றாண்டு க்கு முன்பே காலாவதியாகிவிட்டது. ஐநா சபை உரு வான பிறகும், சர்வதேசச் சட்டங்கள் வந்த பிறகும் இப்போதும் மன்றோ கோட்பாடு பற்றிப்பேசுவது ஒரு சாம்ராஜ்யத்தை (Empire) உருவாக்கும் வெறியாகும்.
ஆக்கிரமிப்பு என்பது ஏகாதிபத்தியத்தின் பிறவிக்குணம். பனாமாவுக்குள் புகுந்து அதன் ஜனாதி பதியைக் கடத்தியது, இராக், சிரியா, லிபியா, சூடான் எனப் பல நாடுகளைச் சிதைத்தது என அமெரிக்கா வின் பட்டியல் மிக நீளமானது. டிரம்ப் காலத்தில் தான் இது நடக்கிறது எனப் பார்த்து விடக் கூடாது. அமெரிக்கா ஏகாதிபத்தியமாக இருக்கும் வரை இத்த கைய அராஜகங்கள் தொடரும் என்பதே எதார்த்தம்.
தகவல் போரும் மோசடி சித்தரிப்பும் !
அமெரிக்கா ஒரு நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் முன், அந்த நாட்டுத் தலைவரை ஒரு வில்ல னாகச் சித்தரிக்கும் “தகவல் போரை” (Information War) நடத்தும். இராக் போருக்கு முன்பாகச் சதாம் உசேனைப் பற்றி எப்படி மோசமான கதையாடல்களை உருவாக்கினார்களோ, அதேபோல மதுரோவையும் இன்று சித்தரிக்கிறார்கள்.
புகழ்பெற்ற பத்திரிகையாளர் சாய்நாத் ஒருமுறை விளக்கியது போல, ஊடகங்கள் புகைப்படங்களை நுணுக்கமாகச் சிதைப்பதன் (Manipulation) மூலம் மக்களின் மனோபாவத்தை மாற்றுகின்றன. ஒரு தலைவரின் கண்ணை லேசாக இடுக்கினாலோ அல்லது முகவாயைக் கூர்மையாக்கினாலோ அவர் ஒரு கொடூரமான நபர் போன்ற தோற்றத்தை உரு வாக்கிவிட முடியும். இத்தகைய நுட்பமான தந்திரங்கள் உட்பட சகலத்தையும் பயன்படுத்தி, மதுரோவை ஒரு “சர்வாதிகாரி”யாக உலகிற்குச் சித்தரித்து, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை நியா யப்படுத்துகிறார்கள். இந்த டிரெண்டின் சமீபத்திய உதாரணம், பிபிசி(BBC) தமது செய்தியாளர் களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், அமெரிக்கா மது ரோவைக் கடத்தியது என்கிற வார்த்தையைப் பயன் படுத்தக் கூடாது, மாறாக மதுரோ பிடிபட்டார் (captured) என்று தான் கூற வேண்டும் எனத் தகவல் அனுப்பியுள்ளது. மிகவும் திட்டமிட்ட வகையில், நுட்ப மாக ஏகாதிபத்திய சதிகள் கட்டமைக்கப்படுகின்றன.
பொருளாதாரத் தடைகளும் போலிப் புகார்களும்
வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடி இருக் கிறது, இளைஞர்கள் வெளியேறுகிறார்கள் (Youth Migration) என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இதற்குக் காரணம் மதுரோவின் நிர்வாகக் குறை பாடு எனக் குற்றம் சாட்டுவது நியாயம் அல்ல; அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளா தாரத் தடைகளே இந்நெருக்கடிகளைத் தோற்றுவிக் கிறது. எண்ணெய் வளமிருந்தும் அதைச் சுத்திகரிக்கவோ, விற்கவோ முடியாதபடி சர்வதேசத் தடைகளை உருவாக்கிவிட்டு, அதன் விளைவாக ஏற்படும் வறுமைக்கு மதுரோவைச் சாடுவது எவ்வளவு பெரிய அராஜகம்? ஐஎம்எஃப் (IMF), உலக வங்கி போன்ற அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா, வெனிசுலாவிற்கு எந்த நிதியுதவியும் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறது.
மதுரோ மீது சுமத்தப்பட்டிருக்கும் “போதைப் பொருள் கடத்தல்” (Narco-terrorism) புகார் ஒரு பச்சைப் பொய். அமெரிக்காவின் சொந்தப் போதைப் பொருள் தடுப்புத் துறை அறிக்கைகளே, அந்நாட்டி ற்கு வரும் 85% கொக்கெய்ன் கொலம்பியாவிலிருந்து வருவதாகக் கூறுகின்றன. கொலம்பியாவில் செயல்படும் வலதுசாரி வர்த்தக கூட்டமைப்புகள் (cartels) மூலமே இது நடக்கிறது. மதுரோ மீது அபாண்டமாகப் பழி சுமத்துவது வெனிசுலாவிற்குள் நுழைய அவர்கள் ஜோடித்த கதையாகும்.
இந்திய அரசின் கோழைத்தனமான மௌனம்
இந்த விவகாரத்தில் மோடி அரசாங்கம் காட்டும் மெத்தனமும், அமெரிக்காவிற்குப் பணிந்து போகும் போக்கும் கண்டிக்கத்தக்கது. “56 இன்ச் மார்பளவு” பற்றிப் பேசுபவர்கள், அமெரிக்கா என்று வரும்போது கப்சிப் என்று ஆகிவிடுகிறார்கள். அமெரிக்காவின் பெயரையோ, டிரம்ப்பின் பெயரையோ குறிப்பிடா மல் “சம்பவம் கவலை அளிக்கிறது” என்று அறிக்கை விடுவது ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கைக்கு அழ கல்ல. நேட்டோ அமைப்பில் இருக்கும் டென்மார்க் பிரதமர் கூட, கிரீன்லாந்தை அபகரிக்க எத்த னிக்கும் அமெரிக்காவின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கும்போது, இந்தியா மௌனம் காப்பது வேத னைக்குரியது. இவ்வளவு பணிந்தாலும் வளைந்தா லும் டிரம்ப் தன்னுடைய சமீபத்திய மிரட்டலில் இந்தியாவையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
மக்கள் குரலே தீர்வு
ஏகாதிபத்தியம் எப்போதுமே தன்னை உலக போலீஸ்காரனாக நினைத்துக் கொண்டு எங்கும் கை வைக்கும். அது ஏகாதிபத்தியத்தின் இயல்பான பண்பு. இதைத் தடுக்க வேண்டுமானால், சர்வதேச அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுப்பெற வேண்டும். இன்று அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் “Hands off Venezuela” (வெனிசுலா மீது கை வைக்காதே) என்று முழக்கமிட்டு வீதியில் இறங்கியுள்ளனர். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல.
ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தைக் கிழித்தெறிய வேண்டிய நேரம் இது. மக்கள் திரண்டு வீதிக்கு வரும்போதுதான் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மீது ஒரு அழுத்தம் ஏற்படும். பாலஸ்தீன விவகாரத்தில் மக்கள் போராட்டம்தான் பல நாடுகளைத் தனது நிலைபாட்டை சற்றே மாற்றத் தூண்டியது. அதே போன்ற ஒரு எழுச்சி வெனிசுலா விவகாரத்திலும் தேவை. சுதந்திரம், இறையாண்மை மற்றும் சோசலி சத்தின் மீதான தாக்குதலை முறியடிக்க நாம் அனை வரும் ஒன்றிணைய வேண்டும். திட்டமிட்ட முறையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்டமைக்கப்பட வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஏகாதிபத்திய அபாயம் குறித்துப் பேசும் போதெல்லாம் எள்ளி நகையாடுபவர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
ஜனாதிபதி மதுரோ உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!
அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகம் ஒழியட்டும்!
