articles

சர்வதேச சட்டங்களை காலில் போட்டு மிதிக்கும் அமெரிக்கா

சர்வதேச சட்டங்களை காலில் போட்டு மிதிக்கும் அமெரிக்கா

ஐ.நா., நிபுணர்கள்  கடும் கண்டனம்!

ஜெனிவா, ஜன. 9- வெனிசுலா நாட்டின் இறையாண்மையைப் பறிக்கும் வகையில், அந்நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்திய துடன், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்றதற்கு ஐ.நா அவையின் நிபுணர்கள் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக அமைதிக்கு ஆபத்தான முன்னுதாரணம் ஐ.நா நிபுணர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அமெரிக்காவின் இந்த நட வடிக்கை சர்வதேச சட்டங்களின் மிக அடிப்ப டையான கொள்கைகளை மீறும் செயல் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐநா சாச னத்தின்படி, ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது எனவும், இது உலக அமைதி க்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். மனிதநேயமற்ற செயல்கள் இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகவே வெனிசுலா கடல் எல்லையில் அமெரிக்கா நடத்திய முற்றுகை மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறி 115 பொதுமக்களைக் கொன்றது உள்ளிட்டவை மனிதநேயமற்ற செயல்கள் என  அந்த அறிக்கையில் அமெரிக்கா கடுமையா கச் சாடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் ஜனாதி பதியாகப் பதவியில் இருப்பவரை மற்றொரு நாட்டின் நீதிமன்றம் தண்டிப்பதற்கோ அல்லது கைது செய்வதற்கோ சர்வதேச சட்டப்படி அதிகாரம் கிடையாது என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எண்ணெய் வளத்தைக் குறிவைக்கும் ஏகாதிபத்தியம் வெனிசுலாவிடம் உள்ள உலகின் மிகப் பெரிய எண்ணெய் இருப்பைக் கைப்பற்றும் நோக்கில், “அந்நாட்டை நாங்களே நிர்வ கிப்போம், அங்கிருக்கும் வளங்களை எடுப் போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறி யிருப்பது, ஒரு நாட்டின் சுயநிர்ணய உரிமை யைப் பறிக்கும் ஏகாதிபத்தியச் செயல் என ஐ.நா நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு வெனிசுலாவின் எதிர்காலத்தை அந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். வெளி நாட்டு ராணுவத் தலையீடோ அல்லது பொ ருளாதார நெருக்கடியோ இன்றி, ஜனநாயக முறையில் அங்கு மாற்றங்கள் நிகழ வேண்டும். அமெரிக்காவின் இந்த அத்துமீறலை உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும் என அந்த அறிக்கை யில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விதி களுக்குக் கட்டுப்படாமல் அமெரிக்கா எடுக் கும் இத்தகைய தன்னிச்சையான முடிவுகள், உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் சட்ட மற்ற நிலையை உருவாக்கிவிடும் என நிபு ணர்கள் எச்சரித்துள்ளனர்.