articles

பேரூராட்சியாகும் கந்தர்வகோட்டை? பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு!

பேரூராட்சியாகும் கந்தர்வகோட்டை? பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு!

சென்னை, ஜன. 9- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை, சட்டமன்றத்தில் தொடர் கோரிக்கை விடுத்து வந்தார். அண்மையில் புதுக்கோட் டைக்கான திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சின்னத்துரை எம்எல்ஏ-வின் கோரிக்கையை ஏற்று, கந்தர்வகோட்டை பேரூராட்சியாக தரம் உயர்த் தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, பேரூராட்சி யாக தரம் உயர்த்துவதற்கான முதற்கட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர் பான ஆட்சேபனை மற்றும் கருத்துக்களை பொது மக்கள் 6 வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என்று கூறி யுள்ளது.