டிரம்ப்பின் வரி விதிப்பும் உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கமும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் வரி விதிப்புக் கொள்கைகள் ஊடகங்களில் பொத்தாம் பொதுவாக விவாதிக்கப்படுகின்றன. அதன் குறிப்பிடத்தக்க அம்சங்கள் விவாதிக்கப்படுவதில்லை. அமெரிக்க அர சாங்கம், அதிகமான வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை மீண்டும் பொருட்கள் மற்றும் சேவைகள் வாங்குவதற்கு பயன்படுத்தத் தயார் இல்லை என்பதே முக்கியப் பிரச்சனை.
மொத்த கிராக்கி எவ்வாறு குறைந்தது?
இறக்குமதிப் பொருட்களின் மீதான வரிகள் அவற்றின் விலையை உயர்த்துகின்றன. இது இருவித மான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருபுறம், தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தால் இப்பொ ருட்களை வாங்க இயலாதபோது, உள்நாட்டில் அதே போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய அவ சியம் உருவாகிறது. இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. இன்னொரு புறம், வரிகளால் எல்லா இறக்குமதி களும் நிறுத்தப்படப் போவதில்லை. சில பொருட்க ளின் இறக்குமதி தொடரும், குறிப்பாக அத்தியா வசியப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள். அப்பொருட்களின் மீதான வரியால் ஏற்படும் விலை உயர்வை நுகர்வோரே கொடுக்க வேண்டியிருக்கும். இந்த நுகர்வோரில் பெரும்பகுதியினர் உழைப்பாளி மக்களே. இதனால் அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது. உழைக்கும் மக்கள் தங்களது மொத்த வாங்கும் சக்தியையும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பயன்படுத்துவதால், அவர்களிடமிருந்து அரசுக்குச் செல்லும் வருவாயை அரசு மீண்டும் சந்தை நட வடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் மொத்த கிராக்கி (தேவை)யின் அளவு குறையாது. ஆனால் அரசு அவ் வாறு செய்யவில்லையெனில், மொத்த கிராக்கியின் அளவு குறையும். இதுதான் அமெரிக்காவில் நடை பெறுகிறது.
டிரம்ப்பின் நிதிக்கொள்கை
டிரம்ப் அரசு செல்வந்தர்களுக்கு மிகப்பெரிய வரிச்சலுகைகள் கொடுக்கிறது. கார்ப்பரேட் வரி விகிதம் 35 சதவிகிதத்திலிருந்து 21 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வருமான வரியி லும் பணக்காரர்களுக்கு கணிசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு இறக்குமதி வரி வருவாய் பயன்படுத்தப்படுகிறது. வரி வருவாய் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய பயன்படுத்தப்படும்போது, ஒவ்வொரு டாலரும் அமெரிக்காவின் மொத்த கிராக்கியை குறைக்கிறது. இதன் பொருள், வரி மூலம் உழைக்கும் மக்களிடமி ருந்து வசூலிக்கப்படும் பணம் மீண்டும் பொருளாதா ரத்தில் செலவிடப்படாமல் அரசின் கடன்களை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். உலகின் பிற நாடுகளின் அரசுகள் செய்யும் செலவும் அமெரிக்காவின் சுருங்கும் கிராக்கியை ஈடுகட்டப் போவதில்லை என்பதால், ஒட்டுமொத்த உலகள வில் கிராக்கி குறைந்து வருகிறது. இது உலகப் பொ ருளாதாரத்தில் மந்தநிலையைத் தூண்டிவிடுகிறது.
மற்றவர்களைக் கொள்ளையடித்து தன்னைக் காக்கும் கொள்கை
அமெரிக்கா வேலையின்மையை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது மற்றவர்களை கொள்ளை யடித்து தன்னைக் காக்கும் “Beggar-thy-Neigh bour” கொள்கைக்கு ஒப்பானது - அதாவது தன்னு டைய நாட்டை மட்டும் காக்கும், அதே நேரத்தில் தன்னு டன் வர்த்தக உறவு கொண்ட அத்தனை நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் கொள்கை. இந்த கொள் கையை 1776இல் ஆடம் ஸ்மித் முதலில் விவரித்தார். உதாரணத்திற்கு, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி வரிகள் காரணமாக 100 புள்ளிகள் அதிகரித் தால், பிற நாடுகளின் உற்பத்தி 120-150 புள்ளிகள் சுருங்குகிறது. இதற்கு காரணம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி குறைவதால் அந்நாடுகளின் ஏற்றுமதித் தொழில்கள் பாதிப்படைவதும், அதன் விளைவாக அங்கு வேலையின்மை பெருகுவதும் ஆகும். இதன் காரணமாக உலகளவில் உற்பத்தி சுருங்குகிறது. பிற நாடுகள் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிர் வரிகள் விதித்து பதிலடி கொடுத்தாலும் இந்நிலைமை யில் அடிப்படை மாற்றம் ஏற்படாது. வரி வருவாயை நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கோ, செல்வந்தர்க ளுக்கு வரிச்சலுகை தருவதற்கோ பயன்படுத்தினால், அது உலக கிராக்கியில் மேலும் சுருக்கத்தையே ஏற்படுத்தும்.
முதலாளித்துவத்தின் நெருக்கடி
முதலாளித்துவ உலகின் ‘தலைவன்’ என்ற வகை யில், அமெரிக்கா வளர்ந்த முதலாளித்துவ நாடுகளை ஒருங்கிணைத்து நெருக்கடியை வெல்வதற்கான வழிகளை வகுக்க வேண்டும் என்பது உலகின் பொது வான எதிர்பார்ப்பு. 1930களின் பெருமந்தத்தின் (Great Depression) போது ஜே.எம். கீன்ஸ் இதைத்தான் ஆலோசனையாக கூறினார். அன்று அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து நெருக்கடியை எதிர்கொண்டன. ஆனால் இன்று நடைபெறும் முரண்பாடு என்ன வென்றால், அமெரிக்கா தன்னை மட்டும் நெருக்கடி யிலிருந்து விடுவித்துக்கொள்ள முயல்கிறது. பிற முதலாளித்துவ நாடுகள் நெருக்கடியால் நாசமாவ தைப் பற்றி அதற்குக் கவலையில்லை. “அமெரிக்கா வை ஆகச்சிறந்த தேசமாக மீண்டும் ஆக்குங்கள்” என்ற முழக்கத்தை டிரம்ப் வைக்கிறார். நெருக்கடி யிலிருந்து மீள பிற முதலாளித்துவ நாடுகளுக்கு எந்த ஆலோசனையையும் அமெரிக்கா வைக்கவில்லை.
முதலாளித்துவத்தின் கட்டமைப்புச் சிக்கல்
டிரம்ப் ஒரு ‘தீய சக்தி’ அல்லது ‘முட்டாள்’ என்பதால் நெருக்கடியிலிருந்து விடுபட அறிவுப்பூர்வமான வழி யைத் தேடவில்லை என்பதல்ல உண்மை. முதலா ளித்துவ அமைப்பில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி எதைச் செய்வாரோ அதைத்தான் டிரம்ப் செய்துள்ளார். முத லாளித்துவ அறிவாளிகள் கற்பனை செய்ததைப் போல மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரும் சூழலை உரு வாக்க அவரால் இயலாது. முதலாளித்துவம் ஒரு திட்டமிட்ட அமைப்பு கிடை யாது. எழும் சிக்கல்களுக்கு அதனால் நியாயமான தீர்வைத் தர இயலாது. இந்த சிக்கலான சூழலில் அமெரிக்கா தன்னுடைய சொந்த நலனை மட்டுமே பாதுகாத்துக்கொள்கிறது.
தெற்கு நாடுகளுக்கான பாதிப்பு
உலகின் பிற நாடுகளை, குறிப்பாக தெற்கு பகுதி நாடுகளை மேலும் சிக்கலில் தள்ளி, அமெரிக்கா தன்னை மட்டும் பாதுகாத்துக்கொள்ள நினைப்பது, வர்த்தக ஒப்பந்தங்களில் விதிக்கும் நிபந்தனைகளில் வெளிப்படுகிறது. முதலில் அந்நாடுகளின் பொ ருட்கள் மீது அதிக வரி விதித்து, பின்னர் தன் பொருட்க ளை எவ்வித வரியும் இன்றி ஏற்றுக்கொள்ள அமெ ரிக்கா நிர்பந்திக்கிறது. இந்த “தாராள வர்த்தக” பேச்சு வார்த்தைகள் உண்மையில் அமெரிக்காவின் பொரு ளாதார ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவதற்கான கருவிகளாக செயல்படுகின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால், அமெரிக்கா வின் பால் பொருட்கள், பழங்கள், உலர் பழங்கள், சோயா போன்றவற்றை எவ்வித கட்டுப்பாடும் இன்றி இறக்குமதி செய்யுமானால், இந்திய விவசாயிகளின் வாழ்வில் பெருந்துயரம் ஏற்படும். பெருமளவு மானி யங்கள் பெற்ற அமெரிக்காவின் விவசாயப் பொருட்க ளோடு இந்திய விவசாயிகள் போட்டியிட முடியாது. விவசாய நெருக்கடி மேலும் தீவிரமடையும். ஆனால் இதற்கு ஈடாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி யாகும் துணிகள், வைரம், ஆபரணங்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றிற்கு கிடைக்கக்கூடிய வரிச் சலுகைகள் மிகவும் குறைவானவை. நவீன தாராளமய கொள்கைகள் இந்தியாவை எந்த அளவிற்கு கொண்டு வந்துவிட்டன என்றால், விவ சாயிகள், மருந்து உற்பத்தியாளர்கள், வைர மற்றும் நகை உற்பத்தியாளர்கள், ஆடை உற்பத்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரின் நலன்களை காவு கொடுப்ப தற்கு அரசு தயாராகிவிட்டது. இந்த நிலைமை இந்தியா மட்டுமின்றி எல்லா தெற்கு நாடுகளுக்கும் பொருந்தும்.
ஒட்டுமொத்த பாதிப்பு
இவ்வாறு டிரம்ப்பின் வரிவிதிப்பால், அமெரிக்கா வின் உள்நாட்டுப் பொருளாதார மந்தம் ஓரளவு சீராவ தற்கு வாய்ப்புள்ளது. ஆனால் ஒட்டுமொத்த முதலா ளித்துவ உலகத்தையும் எடுத்துக்கொண்டால், பொரு ளாதார நடவடிக்கைகள் சுருங்குவதற்கே இது வழி வகுக்கும். வரி விதிப்பு பற்றிய பொதுவான விவாதங்கள் இந்த அம்சங்களை கவனத்தில் கொள்வதில்லை. உழைக்கும் மக்கள் வாங்கும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரிகள் மூலம் அரசுக்கு வரும் வருமானம் அரசால் செலவிடப்படாமல் சேமிப்பி லேயே வைக்கப்பட்டால், அந்த வரிகள் கிராக்கி மற்றும் உற்பத்தியின் அளவைச் சுருக்குகின்றன. இது நவீன தாராளமய முதலாளித்துவத்தின் நெருக்க டியை மேலும் சிக்கலாக்குகிறது. நவீன தாராளமயத்தை வீழ்த்துவது மட்டுமே இந்த விளைவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வழி வகுக்கும். உலகின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை யும், அவர்களின் சர்வதேசிய ஒருங்கிணைப்பும் மட்டுமே இந்த நெருக்கடியிலிருந்து நிரந்தரமான விடு தலையைத் தர முடியும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஆகஸ்ட் 11-17) இதழில் வெளிவந்த “A Less Noticed Implication of Trump Tariffs” என்ற கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம் : செ.சிவசுப்பிரமணியன்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஆகஸ்ட் 11-17) இதழில் வெளிவந்த “A Less Noticed Implication of Trump Tariffs” என்ற கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம் : செ.சிவசுப்பிரமணியன்