ஒப்பந்தம் இறுதியாகாத நாடுகளுக்கு வரி விதித்து டிரம்ப் கடிதம்
தெற்காசிய நாடுகளை குறிவைத்து நடவடிக்கை
நியூயார்க், ஜூலை 8 - அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி யாகாத நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து டிரம்ப் கடிதம் அனுப்பி யுள்ளார். அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பல நாடுகள் அமெரிக்கப் பொருட் களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் அந்தந்த நாடுகளின் பொருட்கள் மீது அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்தார்.
இதற்கு உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்தவுடன் அந்த வரிகளை 90 நாட்களுக்கு இடை நிறுத்தினார். எனினும் அனைத்து நாடுகளின் மீதும் அடிப்படையாக 10 சதவீத வரியை உறுதிப்படுத்தினார்.
அதன் பிறகு அந்த 90 நாட்கள் காலக்கெடு முடிவதற்கு முன் அந்நாடு களை மிரட்டி தனக்கு ஏற்ற வகையில் புதிய பொருளாதார ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தார்.
இதன் பின்னணியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரு கின்றன. எனினும் பிரிட்டன், வியட்நாம் ஆகிய இரு நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா ஒப்பந்தத்தை இறுதிசெய்துள்ளது.
சீனா அமெரிக்காவுடன் முழுமை யான ஒப்பந்தத்திற்கு செல்லவில்லை. எனினும் தற்காலிகமாக இரு நாடு களுக்கும் ஒருவர் மீது ஒருவர் விதித்துள்ள வரிகளில் 110 சதவீதத்தை குறைத்துள்ளன. தற்போது சீனா அமெரிக்கா மீது 10 சதவீத வரியும் அமெரிக்கா சீனா மீது 30 சதவீத வரியும் விதித்துள்ளன.
ஜூலை 9 உடன் (இன்று) 90 நாட்கள் காலக்கெடு முடிவடையும் நிலையில் ஒப்பந்தம் நிறைவேறாத 14 நாடு களுக்கான கூடுதல் வரி விகிதம் குறித்து டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்நாடுகள் மீதான வரியை உறுதிப்படுத்தும் ஆவணத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகள் மீது 40 சதவீதம், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடு களுக்கு 36 சதவீதம், வங்கதேசம், செர்பியாவுக்கு 35 சதவீதம், இந்தோ னேசியா, தென் ஆப்பிரிக்கா, போஸ்னியா, ஹெர்ஜெகோவினா ஆகிய நாடுகளுக்கு 30 சதவீதம், மலேசியா, துனிஷியா, ஜப்பான், தென் கொரியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பில் பெருமளவில் தெற்காசிய நாடுகளையே டிரம்ப் குறிவைத்துள்ளார். பல ஆண்டு கால மாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு லக நாடுகள் தெற்காசிய பிராந்தி யத்தில் உள்ள வளரும் நாடுகளை குறி வைத்து பலவகையில் தாக்கி வரு கின்றன. அதன் வெளிப்பாடாகவே தற்போதைய நடவடிக்கையும் அமைந்துள்ளது என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக தெற்காசியப் பகுதி யில் உள்ள ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு விவசாய உற்பத்திப் பொருட்களை அதிகமாக வாங்க வேண்டும் அதற்கு 100 சதவீதம் வரி விலக்கு தர வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது டிரம்ப் நிர்வாகம்.
அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உள்ள ஜப்பான், அமெரிக்கா வின் அரிசியை அதிகமாக இறக்கு மதி செய்ய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரு கிறது. இது போன்ற சாத்தியமற்ற நிபந்த னைகளையும் நெருக்கடிகளையும் அமெரிக்கா கொடுப்பதால் பேச்சு வார்த்தை இறுதியாவதில் தாமத மாகிறது என கூறப்படுகிறது.
தற்போது பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு ஜூலை 9இல் இருந்து ஆகஸ்ட் 1-க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.