இதுதான் ‘ஒரிஜினல் கேங்ஸ்டா’
1970-இல் திருவனந்தபுரத்தில் விதைக்கப்பட்ட அந்த விதை, இன்று 56 ஆண்டுகளைக் கடந்து நாடு முழுவதும் 50 லட்சம் உறுப்பினர்களோடு ஒரு பெரும் ஆலமரமாக நிமிர்ந்து நிற்கிறது. அன்று அவசரநிலைக் காலத்தின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்றது; இன்று மதவெறிப் பிரச்சா ரங்களை எதிர்த்துப் போராடுகிறது. தலைமுறை மாறினாலும், இந்திய மாணவர் சங்கத்தின்(SFI) ‘மெயின் கேரக்டர் எனர்ஜி’ (Main Character Energy) எப்போதும் குறைவதில்லை. ஏனெனில், இந்திய மாணவர் சங்கம் என்பது வெறும் மாண வர் அமைப்பு மட்டுமல்ல; அது இந்திய மாணவர் சமூகத்தின் உரிமைக் குரல். “சுதந்திரம், ஜனநாய கம், சோசலிசம்” என்ற முழக்கத்தோடு, கல்வி உரிமைக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் சமரசமின்றிப் போராடி வரும் மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம். இந்தியாவில் மாணவர் அரசியலின் ஒரிஜினல் கேங்ஸ்டா (OG) இந்திய மாணவர் சங்கம் தான். (ஒரிஜினல் கேங்ஸ்டா என்பதன் சுருக்கமே OG ஆகும். நம்ப முடியாத அளவிற்கு விதிவிலக்கான, அதேவேளையில் உண்மையான பலம் கொண்ட ஒருவரை குறிக்கும் இளைய தலைமுறையின் சொல் இது. முன்பு, கும்பல் கலாச்சாரத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை அல்லது ஒரு குழுவை அடையாளம் காட்டும் சொல்லாக மாறியுள்ளது ). கல்வியில் காவிமயம்: சமகாலச் சவால்கள் இன்று இந்தியக் கல்வித்துறை, முன் எப்போ தும் இல்லாத சவால்களைச் சந்தித்து வருகிறது. 2014-இல் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, ஆர்எஸ்எஸ்-ன் மதவாதக் கொள்கைகளைக் கல்வி யில் புகுத்தத் தொடர்ந்து முயன்று வருகிறது. தேசிய கல்விக் கொள்கை (NEP 2020): ‘இந்திய அறிவு முறைமை’ (IKS) என்ற பெயரில், நவீன அறிவியலை விடப் பண்டைய வேத காலக் கல்விக்கும் சமஸ்கிருத நூல்களுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட மதச் சார்புள்ள கருத்துகளை மாண வர்கள் மீது திணிக்கும் முயற்சியாகும். சமஸ்கிருதத் திணிப்பு: மும்மொழித் திட்டத் தின் கீழ் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியுதவி அளிப்ப தன் மூலம், தமிழ் போன்ற செம்மொழிகளைப் புறக் கணித்து “இந்தி-சமஸ்கி ருத” மேலாதிக்கத்தை நிலைநிறுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. பாடத்திட்ட மாற்றங்கள் : என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களிலிருந்து முகலாயப் பேரரசு மற்றும் சில முக்கிய வரலாற்று நிகழ்வு களை நீக்கிவிட்டு, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத் திற்கு உகந்தவாறு வரலாற்றைத் திருத்தி எழுது வது கல்வியைக் காவிமயமாக்கும் செயலாகும். விபிஎஸ்ஏ மசோதா 2025: ஒரு பேராபத்து ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள VBSA Bill 2025 (Viksit Bharat Shiksha Adhishthan Bill) உயர்கல்வித் துறையையே தலைகீழாக மாற்றக்கூடியது. இம்மசோதாவின் படி யுஜிசி, ஏஐசிடிஇ (UGC, AICTE) போன்ற அமைப்புகளைக் கலைத்து விட்டு, அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவருவது பல்கலைக்கழகங்களின் தனித்தன்மையைச் சிதைக்கும். * கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி வந்த நேரடி மானியங்களுக்குப் பதில் ‘கடன் சேவை’யை இந்த மசோதா முன்னிறுத்துகிறது. இதனால் கல்வி வியாபாரமாகும். * ஒன்றிய அரசின் கொள்கைகளை ஏற்க மறுக்கும் கல்வி நிறுவனங்களுக்கு ₹10 லட்சம் முதல் ₹2 கோடி வரை அபராதம் விதிக்கும் அம்சம், மாற்றுச் சிந்தனைகளை நசுக்கும் வேலையாகும். தமிழகக் கல்விச் சூழலும் மாணவர் போராட்டக் களமும் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. ‘பி.எம் ஸ்ரீ’ திட்டத்தை அமல்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக, தமிழகத்திற்குச் சேர வேண்டிய சமக்ர சிக்சா அபியான் நிதியை நிறுத்தி வைத்து மாணவர்களின் நலனில் விளையாடுகிறது ஒன்றிய அரசு. தமிழகச் சூழலில், தனியார் கல்வி நிறு வனங்கள் கரையான் புற்றுப்போல் பெருகி வரு கின்றன. அவற்றின் அதிகப்படியான கட்ட ணத்தை முறைப்படுத்தத் தமிழக அரசு தவறி வருகிறது. குறிப்பாக, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழ கங்களாக மாற்றும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து எழுந்த கடும் போராட்டத்தால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை முற்றாக நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், உயர்கல்வி யைத் தனியார்மயமாக்கும் இந்த முடிவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் ஐடிஐ (ITI) பயிற்சி மையங்கள் அமைக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்; விடுதி மாணவர் களுக்கான உணவுப் படியை உயர்த்தவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுக்காகவும் இந்திய மாணவர் சங்கம் முன்னணியில் நிற்கிறது. வளாகங்களுக்குள் நசுக்கப்படும் கருத்துச் சுதந்திரத்தை மீட்கவும், மாணவர் பேரவைத் தேர்தல்களை முறையாக நடத்தவும் சமரசமின்றிப் போராடுகிறது. அறிவியல் பூர்வமான கல்வியை வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கம் செயல்படுகிறது. “படிப்போம் போராடுவோம்” என்ற இரட்டை ஆயுதங்களை ஏந்தி, அறிவார்ந்த சமத்துவச் சமூ கத்தை உருவாக்க பாடுபடுகிறது. சாதி, மத பேதங்களைக் கடந்து, மதச்சார்பற்ற கல்விச் சூழலை உருவாக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். இந்த 57ஆவது அமைப்பு தினத்தில், சமூக நீதியுடனும் சமத்துவத்துடனும் கூடிய கல்வி முறையை உருவாக்க ஒன்றி ணைந்து உறுதியேற்போம்!
