articles

img

“சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் உங்களுடன் இருக்கிறது!” உலகத் தொழிற்சங்க சம்மேளன பொதுச்செயலாளர் பாம்பிஸ் கிரிட்ஸிஸ் வாழ்த்து!

“சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் உங்களுடன் இருக்கிறது!”   உலகத் தொழிற்சங்க சம்மேளன பொதுச்செயலாளர் பாம்பிஸ் கிரிட்ஸிஸ் வாழ்த்து!

விசாகப்பட்டினத்தில் நடை பெற்று வரும் இந்தியத் தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) 18-வது அகில இந்திய மாநாட்டின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது, உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் (WFTU) பொதுச்செயலாளர் பாம்பிஸ் கிரிட்ஸிஸ் ஆற்றிய உரை.   இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்திற்குச் சர்வதேச அங்கீ காரத்தையும், ஈடு இணையற்ற வர்க்க உத்வேகத்தையும் வழங்கிய அவரது உரை, மாநாட்டுப் பிரதிநிதிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. “134 நாடுகளில் உறுப்பினர்களாக உள்ள 10.5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் புரட்சிகர வாழ்த்து களை நான் உங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். சிஐடியு-வின் போராட்டக் குணம் உலகத் தொழிலாளர்களுக்குப் பெரும் பாடமாக இருக்கிறது” என்று அவர் பேசத் தொடங்கியபோது அரங்கம் அதிரும் வகையில் கைதட்டல்கள் நீண்ட நேரம் ஒலித்தன.  முதலாளித்துவத்தின் நெருக்கடியும் ஏகாதிபத்தியப் போர்களும்  உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி குறித்து ஆழமான சித்தாந்தப் பார்வையுடன் பேசிய கிரிட்ஸிஸ், “இன்று  உலகம் ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. முதலாளித்துவம் தனது தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடி யைத் தொழிலாளர்களின் மீதான அடக்குமுறைகள் மூலமாகவும், ஆக்கிர மிப்புப் போர்கள் மூலமாகவும் திணிக்க முயல்கிறது. உக்ரைன் முதல் பாலஸ் தீனம் வரை இன்று நடைபெறும் போர்கள் அனைத்தும் ஏகாதிபத்தியத் தின் லாப வெறியால் உருவானவை. உழைக்கும் மக்கள் உருவாக்கிய செல்வத்தை ஆயுதங்களுக்காகச் செல விடுவதும், அதன் மூலம் அப்பாவி களைக் கொன்று குவிப்பதும் முத லாளித்துவத்தின் கோர முகத்தைக் காட்டு கிறது” என்று கடுமையாகச் சாடினார்.   குறிப்பாக, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடைபெறும் கொடூரமான இனப்படுகொலையைச் சுட்டிக்காட்டிய அவர், “உலகமே பார்த்துக் கொண்டி ருக்கும் வேளையில் நிகழ்த்தப்படும் இந்த அநீதிக்கு ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவே காரணம். பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திர பாலஸ்தீன நாடு அமையவும் உலகத் தொழிலாளர் வர்க்கம் என்றென்றும் துணை நிற்கும். நீதி கிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது. வர்க்கப் போராட்டம் என்பது எல்லைகளைக் கடந்தது; ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நிற்பதே உண்மையான தொழிலாளர் ஒற்றுமை” என்று உணர்ச்சிகரமான செய்தியைப் பதிவு செய்தார்.  இந்தியத் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டமும் உலகச் சம்மேளனமும்  இந்தியாவில் நவதாராளவாதக் கொள்கைகள் தீவிரப்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய கிரிட்ஸிஸ், சிஐடியுவின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார்.  “சிஐடியு என்பது வெறும் எண்ணிக்கை யிலான அமைப்பு மட்டுமல்ல; அது உறுதியான வர்க்கக் கொள்கையைக் கொண்ட அமைப்பு. இந்தியாவில் நீங்கள் முன்னெடுக்கும் இந்த ஒற்றுமை  உலகளாவிய வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தருகிறது. பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதிலும், தொழிலாளர் சட்ட மாற்றங்களை எதிர்ப்பதிலும் நீங்கள் காட்டும் உறுதி பாராட்டுதலுக்குரியது. இந்தியத் தொழிலாளர்கள் சந்திக்கும் அதே சவால்களைத் தான் லத்தீன் அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை  உள்ள தொழிலாளர்களும் சந்திக் கிறார்கள். நமது எதிரி உலகளாவிய முத லாளித்துவம் என்றால், நமது ஒற்று மையும் உலகளாவியதாக இருக்க வேண்டும்” என்றார்.  மேலும் அவர் பேசுகையில், “அறி வியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பயன் படுத்தப்பட வேண்டும். ஆனால் முத லாளித்துவமோ அதைப் பயன்படுத்தி லாபத்தை அதிகப்படுத்தவும், வேலை யிழப்புகளை உருவாக்கவும் பார்க்கிறது. உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் ஒரு சிறு கூட்டம் கோடீஸ்வரர்களாக மாறு வதை மாற்றி, உழைக்கும் வர்க்கமே அதிகாரத்தைப் பெறும் நிலையை உருவாக்க வேண்டும். சமூக நீதியும், சமத்துவமுமே நமது இலக்கு” என்று வலியுறுத்தினார்.  சித்தாந்தத் தெளிவும் வர்க்க ஒற்றுமையும்  வர்க்க உணர்வின் அவசியம் குறித்துப் பேசிய அவர், “தொழிலா ளர்களைப் பிரித்தாளும் சக்திகளுக்கு எதிராக நாம் சித்தாந்த ரீதியாக விழிப்புடன் இருக்க வேண்டும். மதம், இனம், மொழி எனப் பல பிரிவினைகள் உருவாக்கப்பட்டாலும், ‘பாட்டாளி வர்க்கம்’ என்ற ஒற்றை அடையாளமே நம்மைப் பிணைக்கும் சக்தி. இந்தியத் தொழிலாளர்கள் காட்டும் இந்தத் தீரம், நவதாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் அனைத்து நாடு களின் தொழிலாளர்களுக்கும் உத் வேகம் அளிக்கிறது. சிஐடியு முன் னெடுக்கும் போராட்டங்கள் இந்தியா விற்கானது மட்டுமல்ல, இது சர்வதேசப் போராட்டத்தின் ஒரு முக்கியப் பகுதி யாகும்” என்றார்.  2027 உலக மாநாடும் பிப்ரவரி 12 வேலைநிறுத்தமும்  ஒரு மிக முக்கியமான அறிவிப்பாக, “2027-ஆம் ஆண்டு இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற உள்ள 19ஆவது உலகத் தொழிற்சங்க மாநாட்டிற்கு இந்தியத் தொழிலாளர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன். 25 ஆண்டு களுக்குப் பிறகு இந்த மாநாடு மீண்டும் ஆசியாவிற்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பிராந்தியத்தின் வர்க்கப் போராட்டத்திற்கு அது புதிய வலுவைத் தரும்” என்று அறிவித்தார். இறுதியாக, இந்தியாவில் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்தியப் பொது வேலைநிறுத்தம் குறித்து பேசிய அவர், “உங்கள் போராட்டத்தில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. பிப்ரவரி 12-இல் நீங்கள் முன்னெடுக்கும் அந்த மாபெரும் வேலைநிறுத்தப் போரா ட்டத்திற்கு உலகத் தொழிற்சங்க சம்மே ளனத்தின்10.5 கோடி தொழிலாளர் களின் முழுமையான ஆதரவு உண்டு. அன்று உங்கள் முழக்கங்களுடன் எமது சர்வதேச முழக்கங்களும் இணையும். தொழிலாளர்களுக்கு எல்லைகள் கிடையாது; நாம் ஒற்றுமையாக நின்றால் எந்த ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த முடியும். சோசலிசம் வெல்லட்டும்! முதலாளித்துவம் வீழட்டும்!” என்று முழங்கியபோது அரங்கமே உத்வேகத்தில் திளைத்தது. தனது உரையின் நினைவாக, சிஐடியு தலைமையிடம் உலக (WFTU) அமைப்பின் சர்வதேச இலச்சினையை (Symbol) அவர் வழங்கினார். பாம்பிஸ் கிரிட்ஸிஸ் அவர்களின் இந்த உரை, இந்தியத் தொழிலாளர் இயக்கம் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதி என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது.