அரசியல் சாசனமும் அம்பேத்கரின் தொலைநோக்கு எச்சரிக்கையும்!
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69-வது நினைவு நாளில், சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய அவரது பணியை வரலாறு போற்றுகிறது. அதே வேளையில், அரசியல் சாச னத்தின் எதிர்காலம் குறித்து அவர் விடுத்த தொலைநோக்கு எச்சரிக்கை யானது இன்று நிஜமாக நம் வழியை மறித்து நிற்பதைக் காண முடிகிறது. 1949 நவம்பரில் அரசியல் சாசன அமர்வின் கூட்டத்தில் அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இவை: “உளப்பூர்வமாக சொல்வ தானால், புதிய அரசியல் சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறாகச் சென்றால், அதன் காரணம் நாம் ஒரு மோசமான அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்கிறோம் என்பது அல்ல. நாம் சொல்ல வேண்டியது, அதை அமலாக்குகிற மனிதர்கள் மோசமானவர்கள் என்பதே.” எதிர்ப்பும் விமர்சனமும் அம்பேத்கர் இந்த எச்சரிக்கை யைச் சூனியத்தில் இருந்து சொல்லவில்லை. அவர் வாழ்ந்த காலத்திலேயே அரசியல் சாசனத்தின் எதிர்ப்பாளர்களையும் அவர் சந்திக்க நேரிட்டது. lஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வ இதழான ‘ஆர்கனைசர்’ (1947 ஜூலை), “மூவர்ணக் கொடி ஒரு போதும் இந்துக்களால் மதிக்கப்படாது; ஏற்றுக்கொள்ளப்படவும் முடியாது” என்று எழுதி, தேசத்தின் கொடி மீது இருந்த மரியாதையின்மையைக் காட்டியது. lஅரசியல் சாசனம் அறிமுகப்படு த்தப்பட்ட நான்காவது நாளே (1949 நவம்பர் 30), அதே இதழ், “நமது அரசியல் அமைப்பில், பண்டைய பாரதத்தின் தனித்துவ மான அரசியல் ஆவணமான மனுஸ்மிருதி குறித்து எந்தக் குறிப்பும் இல்லை” என்று சாடியது. இந்த விமர்சனம் டாக்டர் அம்பேத் கரை நோக்கியதே என்பதில் ஐய மில்லை. அரசியல் சாசனத்தின் இந்த பரமவைரியின் வாரிசுகளே இன்று ஒன்றிய ஆட்சிக் கட்டிலில் அமர்ந் திருக்கிறார்கள். அம்பேத்கரின் எச்சரிக்கை 76 ஆண்டுகள் கழித்து, “மோசமான மனிதர்கள் கைகளில்” சிக்கி நிரூபணம் ஆகியுள்ளது. இந்துத்துவ முரண்பாடு அம்பேத்கர், “நான் இந்துவாகப் பிறந்திருக்கலாம், ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று கூறியதற்குக் காரணம், அவர் வாழ்நாள் முழுவதும் போராடியும் இந்து மத அடிப்படைவாதிகள் வர்ணாஸ்ரம அதர்மத்தைக் கைவிட மறுத்ததும், அவர் கொண்டு வந்த இந்து தொகுப்புச் சட்ட சீர்திருத்த மசோதாவைத் தடுப்பதில் அவர்கள் காட்டிய முனைப்பும்தான். ஒரு கட்டத்தில் சட்ட அமைச்சர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. ஆனால், அத்தகைய அம்பேத்கரை இன்று இஸ்லாமிய விரோதி போலச் சித்தரிக்க இந்துத்துவ சக்திகள் முனைவதுதான் நகை முரண். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அம்பேத்கர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற மூன்று விழுமியங்களை வலி யுறுத்தியதோடு மட்டுமல்லாமல், இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தது, ஒன்றைக் கைவிட்டால் மற்றொன்று இல்லை என்பதை ஆழமாகப் புரிந்து வைத்திருந்தார்: “சுதந்திரத்தை சமத்துவத்தி லிருந்து பிரித்துச் சிந்திக்க முடியாது; சமத்துவத்தையும் சுதந்திர த்திலிருந்து பிரித்துச் சிந்திக்க முடி யாது. அதுபோல, சுதந்திரமும் சமத்து வமும் சகோதரத்துவத்திலிருந்து பிரிக்கப்படக் கூடாது” என்றார். அவர் பொருளியல் சுரண்ட லுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் எதிரான மாமனிதர். 1938-இல் மன்மாத்தில் உரையாற்றியபோது, “இந்த நாட்டின் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய இரண்டு எதிரிகள் உள்ளனர் என்பது என் கருத்து. அந்த இரண்டு எதிரிகள் பிராமணியம் மற்றும் முதலாளித்து வம்” என்று குறிப்பிட்டார். இன்று கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணி யை பொருளாதார தளத்திலும், சமூக தளத்திலும் ஒரு சேர எதிர்கொள்ளும் வேளையில், அம்பேத்கரின் இந்தச் சிந்தனை நமக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது. தனிநபர் ஆராதனைக்கு எதிரான எச்சரிக்கை அரசியல் சாசனத்தின் சாரத்தை சமூகம் உள்வாங்காவிடில், தனி நபர் வழிபாடு மற்றும் சர்வாதி காரம் ஆகிய போக்குகளை இந்தியா எதிர்கொள்ளும் என்பதை அம்பேத்கர் அன்றே கணித்திருந் தார்: “மதத்தில் பக்தி, ஆன்மாவின் இரட்சிப்புக்கான ஒரு வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில், பக்தி அல்லது தனிநபர் ஆராத னை நிச்சயமாக சமூகச் சீரழி விற்கும் இறுதியில் சர்வாதிகார ஆட்சிக்குமான பாதையாகும்” என்றார். ‘ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே பண்பாடு’ என்று ஜனநாய கத்தையும், பன்மைத்துவத்தையும் மறுக்கிற நவ பாசிச குணாம்சங் களை வெளிப்படுத்திக் கொண்டி ருக்கிற இன்றைய ஆட்சியாளர்களை அடையாளம் காட்ட அம்பேத்கரின் சிந்தனைகள் மிக முக்கியமானதாக உள்ளன. நவீன தாராளமயம், வகுப்பு வாதம், எதேச்சதிகாரம், கூட்டாட்சி விரோதம், சாதியம் என அத்தனை தாக்குதல்களையும் ஒரு சேரத் தொடுக்கும் ஒன்றிய அரசை நாம் எதிர்கொள்கிறோம். இருள் சூழும் பாதையில் இந்தியாவைப் பிற்போக்குச் சக்திகள் இழுத்துச் செல்ல முனையும் காலத்தில், டாக்டர் அம்பேத்கர் ஏற்றிய அறிவு தீபம் இருளை விரட்ட நிச்சயம் உதவும்.