தீவிர வறுமை ஒழிப்பில் ஒரு வரலாற்றுச் சாதனை
உலக அளவில் வறுமை என்பது ஒழிக் கப்பட முடியாத சாபம் என்றும், அது மனித விதியின் ஒரு பகுதி என்றும் தீவிர வலதுசாரிகளும் மதவாதிகளும் பிதற்றிக் கொண்டிருந்த வேளையில், சோசலிசத்தால் எதை யும் சாதிக்க முடியும் என்பதை மக்கள் சீனம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. 1990-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் சுமார் 38% பேர், அதாவது 200 கோடி மக்கள் தீவிர வறுமையில் வாழ்ந்து வந்தனர். உலக வங்கித் தரவுகளின்படி, அதே 1990-களில் சீனாவில் மட்டும் 75 கோடிக்கும் அதிகமான மக்கள் சர்வதேச வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வந்தனர். இது அன்றைய சீனாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்காகும். ஆனால், இன்று அந்த நிலை முற்றிலும் தலை கீழாக மாற்றப்பட்டுவிட்டது. 2021 பிப்ரவரி 25 அன்று, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “நாட்டின் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனம் முழுமையான வெற்றி பெற்றுவிட்டது” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோது, அது உலகம் முழுவதும் ஆச்சரியம் கலந்த
மகிழ்ச்சியையும், அமெ ரிக்கக் கூட்டாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வறுமையின் பின்னணியும் கடும் சவால்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 18-ஆவது தேசிய மாநாட்டிற்குப் பிறகு, 2012-ஆம் ஆண்டு முதல் வறுமை ஒழிப்பு என்பது வெறும் பொருளா தாரத் திட்டமாக இல்லாமல், ஒரு பெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதில் சீனா நான்கு பெரும் சவால்களை எதிர் கொண்டது: l பிரச்சனையின் அளவு: புவியியல் ரீதியாகச் சென்ற டைவதற்கே கடுமையான சவால்களைக் கொண்ட 14 தொடர்ச்சியான மலைப்பகுதிகள், 832 வறிய மாவட்டங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட 1.28 லட்சம் ஏழைக் கிராமங்கள். l சவாலின் தன்மைQ: வறுமையில் வாடும் மக்களின் பலவீனமான வளர்ச்சித் திறன் மற்றும் அவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு செலவினங்களின் சிக்கலான தன்மை. l காலக்கெடு: 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவித்து,
அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற மிக நெருக்கமான கால இலக்கு. l மீண்டும் வறுமை: கோவிட்-19 பெருந்தொற்று (2019-2020), இயற்கை பேரிடர்கள் மற்றும் குடும்பச் சூழல்களால் ஏற்கெனவே வறுமையிலிருந்து மீட்கப் பட்ட மக்கள் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படும் பேராபத்து. இத்தகைய இமாலயத் தடைகளை முறியடித்து தான் மக்கள் சீனம் தனது சாதனை இலக்கை எட்டிப் பிடித்தது. களத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் உருக்கு போன்ற கட்டமைப்பு சீனாவின் இந்த வெற்றிக்கு அதன் ‘உருக்கு போன்ற’ கட்சி அமைப்பும், மக்களுடன் அது கொண்டி ருந்த உணர்வுப்பூர்வமான தொடர்புமே பிரதான காரணம். புள்ளிவிவரத் தரவுகளை மட்டும் நம்பி மேலோட்டமாகத் திட்டமிடாமல், 20 லட்சம் ஊழியர்க ளைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள வீடுக ளில் நேரடி ஆய்வு நடத்தி, வறுமை நிலை துல்லிய மாகச் சரிபார்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வறுமை ஒழிப்பு ஆணை யர்களாக 30 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப் பட்டனர்.
இவர்களில் 2.25 லட்சம் குழுக்கள் நேரடி யாக கிராமங்களில் தங்கிப் பணியாற்றும் வகை யில் நிறுத்தப்பட்டனர். 2012-லிருந்து வறுமை ஒழிப்பிற்காக மட்டும் கிட்டத்தட்ட 1.6 டிரில்லியன் யுவான் (சுமார் 246 பில்லியன் அமெரிக்க டாலர் கள்) நிதி முதலீடு செய்யப்பட்டது. இது உலக வர லாற்றில் வறுமை ஒழிப்பிற்காக ஒரு நாடு ஒதுக்கிய மிகப்பெரிய தொகையாகும். இந்த மகத்தான பணியில் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. தோராயமாக ஒரு கோடி பணியாளர்கள் தொடர்ந்து ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை இக்களத்தில் பங்கேற்றனர். மலைப்பகுதிகளிலும், கடும் குளிரிலும் பணியாற்றியவர்களில் சுமார் 1,800 பணியாளர்கள் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களே 80-க்கும் மேற்பட்ட முறை தொலைதூரக் கிராமங்க ளுக்குச் சென்று, மக்களின் அடுப்பங்கரை வரை நேரில் ஆய்வு செய்தார். 20-க்கும் மேற்பட்ட வறிய கிராமங்க ளைச் சேர்ந்த குடும்பங்களுடன் அமர்ந்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தது, ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மக்களுடன் எவ்வாறு பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம். சோசலிசப் பாதையும் உலக நாடுகளின் அங்கீகாரமும் சீனாவின் வறுமை ஒழிப்புப் பாதை அதன் சொந்த குணாதிசயங்களைக் கொண்டது. இது இரண்டு முக்கியத் தூண்களைக் கொண்டது: l பொருளாதார மாற்றம்: புதிய பொருளாதார வாய்ப்புக ளை உருவாக்கி, சராசரி வருமானத்தை உயர்த்து
வதற்கான பரந்த கட்டமைப்பு மாற்றங்களைச் செய்தது. l இலக்கு வைக்கப்பட்ட ஆதரவு: கல்வி, மருத்து வம், பாதுகாப்பான குடிநீர், வாழத் தகுந்த வீடு மற்றும் அடிப்படைத் தகவல்களைப் பெறும் வாய்ப்பு ஆகியவற்றைச் சோசலிசக் கோட்பாட்டின் படி அனைவருக்கும் உறுதி செய்தது. உலக வங்கியின் பொருளாதார வல்லுநர்கள், “ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலின் இலக்கை, பத்து ஆண்டுகளுக்கு முன்பே சீனா எட்டியது” என்று பாராட்டியுள்ளனர். சீனாவின் வறுமை ஒழிப்பு வேகமும் அளவும் உலக வரலாற்றில் வேறு எங்கும் நிகழாதது. 1970-களின் பிற்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 80 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். உலக அளவில் வறுமை ஒழிப்பில் சீனாவின் பங்கு மட்டும் 70 சதவீதத்திற்கும் அதிகம்.
முன்னாள் ஜப்பானியப் பிரதமர் யுகியோ ஹடோயாமா கூறியது போல, “எப்போதும் மக்களு டன் இருப்பதுதான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுச் சாதனைகளின் ரகசியம்.” புதிய நம்பிக்கை “சிறந்த வாழ்க்கைக்கான மக்களின் விருப்பமே நாம் அடைய வேண்டிய லட்சியம்” என்ற ஜி ஜின்பிங்கின் வரிகள் சீன சோசலிசத்தின் அடிநாதமா கும். 100 ஆண்டுகால கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் மக்களுடன் ஒன்றி நின்றதே இந்த வெற்றிக்கான ரகசியம். 2021-இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவின் போது,
வறுமை ஒழிப்பு குறித்த விரிவான அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவை ஒரு தேசம் தனது மக்களின் அடிப்படைத் தேவைகளை எவ்விதம் முன்னுரிமைப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. இந்தியாவிலும் இதேபோன்ற முன்மாதிரியைத் தான் இடது ஜனநாயக முன்னணி தலைமையிலான கேரளம், தீவிர வறுமையை முதன்முதலாக முற்றாகத் துடைத்தெறிந்து காட்டியுள்ளது. மக்கள் சீனத்தின் இந்த வெற்றிப் பயணம், உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும், சமத்துவத்தை விரும்புவோருக்கும் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
