கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்திக்குத்து
சென்னை, ஜன.24¬ - கோவையில் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் 17 வயது மாணவி கத்தி யால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு அனைந் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்ட னம் தெரிவித்துள்ளது. கல்வி வளாகங்க ளில் தொடர்ந்து அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்திடவும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநி லத் தலைவர் ஜி.பிரமிளா, பொதுச் செயலா ளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கோவை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவியை அதே கல்லூரியில் படித்த ஹர்வர்தன் கல்லூரி வளாகத்திலேயே கத்தியால் குத்தி தாக்கு தல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. தமிழகத்தில் கல்வி வளாகங்களில் மாணவிகள் மீதான வன்முறைகள் தொ டர்ந்து அதிகரித்து வருவதன் ஒரு பகுதியா கவே இந்த வன்முறை நடைபெற்று உள்ளது. காதலிக்க மாணவி மறுத்த கார ணத்தால், அவரை கத்தியால் தாக்கியுள்ள சம்பவம், பெண்களின் “மறுப்பு உரிமை” எவ்வாறு வன்முறையால் நசுக்கப்படு கிறது என்பதைக் காட்டுகிறது. கல்வி நிலையங்கள் போன்று பாது காப்பான இடமாக இருக்க வேண்டிய சூழலிலேயே, ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது, பெண்களுக்கு எவ்வி டமும் பாதுகாப்பு இல்லை என்ற அச்சுறுத் தலான உண்மையை வெளிப்படுத்துகிறது. பெண் ஒருவர் காதலை மறுப்பது, உறவை நிராகரிப்பது, தனக்கான முடிவை எடுப்பது ஆகியவை அடிப்படை மனித உரிமைகள். ஆனால் மறுப்பு சொல்லும் பெண்ணை “அவமதிப்பாக” மாற்றி, அதற்கான “தண்டனையாக” வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இந்த மன நிலையே இவ்வாறான கொடூரச் சம்ப வங்களை உருவாக்குகிறது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறா மல் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மீது வன்முறையை நிகழ்த்தும் குற்றவாளி களுக்கு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தண்டனை கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆண்-பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கங்களை அரசின் சார்பில் நடத்திட வேண்டும். பாடத் திட்டங்களில் பாலின நிகர் நிலை கல்வியை கட்டாயப்படுத்த வேண்டும். கல்வி வளா கங்களில் மாணவிகளுக்கான பாது காப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய உயர்தர மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட நபர்மீது கடுமையான சட்ட நட வடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கை விரை வாக விசாரித்து தண்டனை உறுதி செய் யப்பட வேண்டும். பெண்களின் மறுப்பு உரிமை சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாக வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெண் பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்பட வேண் டும். இளைஞர்களிடையே நிலவும் ஆணாதிக்க மனநிலையை எதிர்க்க, அரசின் சார்பில் பிரச்சாரங்கள் முன் னெடுக்கப்பட வேண்டும் என அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் ழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள் ளனர்.