articles

img

காலம் அறிந்து பேசு - செல்வம்

காலம் அறிந்து பேசு -  செல்வம்

அழகாய்ப் பேச வேண்டும்- தம்பி அறிவாய்ப் பேச வேண்டும் வளரும் காலம் தொட்டே - அறிவு வளரப் பேச வேண்டும்!  கற்றோர் போற்றப் பேசு - பேச்சு கலையென் றுணர்ந்து பேசு வெற்றி தரணும் பேச்சு - பிறரை வருத்தா வண்ணம் பேசு!  பேச்சில் தெளிவு உன்னை- கற்றோர் சபையில் நிறுத்தும் முன்னே கூச்சம் இன்றிப் பேசு - உயர் கொள்கை கொண்டு பேசு!  பொய்மை இன்றிப் பேசு - என்றும் புறங் கூறாமல் பேசு ஐயம் நீங்கிப் பேசு - பிறர் அச்சம் போக்கிப் பேசு!  காலம் அறிந்து பேசு - பிறரிடம் கனிவுடன் அன்பாய்ப் பேசு ஆலம் விழுதாய் வேரூன்றும் - படி அடிக்கோடிட்டுப் பேசு!