articles

img

அறிவியல் கதிர் - ரமணன்

வயிற்றுக்குள் வாள் சண்டை

நீண்ட பல்வரிசை கொண்ட தாடை, மரக்கட்டை மீன்களின் (sawfish) தனித்துவமான அம்சம்  ஆகும். இது தாயின் வயிற்றிலி ருக்கும்போதே உண்டாகிவிடு கிறது. இந்த மீன்கள் முட்டை கருத்  தரித்தல் மற்றும் குஞ்சு ஈனுதல் (ovoviviparous) எனும் கலப்பு முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரே பிரசவத்தில் பல குஞ்சுகளை ஈனும். எனவே தாயின் உடலையோ அல்லது உடனிருக்கும் குஞ்சுகளையோ கிழித்துவிடாமல் பாதுகாக்க மிக வும் கூர்மையான இந்தப் பல்  வரிசை பிரசவம் வரை ஒரு சிறப்பு  உறைக்குள் பொதிந்து வைக்கப் படுகிறது. இயற்கையின் இந்த ஏற்பாடு ஒரு ஆச்சரியமான விஷ யம். இவற்றின் தாடை வாள் போன்றிருப்பதால் குஞ்சுகள் தாயின் வயிற்றிற்குள் வாள் சண்டையிடாமல் பாதுகாக்கிறது என்று நகைச்சுவையாக கூறு கிறார் பிளாரிடா மீன் மற்றும் வன  விலங்கு காப்பகத்தை சேர்ந்த மீன்  உயிரியிலாளர் கிரெக் பவுலாகிஸ்.  இவை (Pristis pectinata)மிக வும் அரிதாகிவிட்டபடியால் 18 ஆண்டுகள் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட பின்னரே பவு லாகிஸ் குழுவினரால் அந்த உறை களை சேகரிக்க முடிந்தது. அவை மெழுகு போல் இருந்தாலும் உறுதியாகவும் பிய்த்து எடுக்க  முடியாத வகையிலும் அமைந்தி ருக்கின்றன.  இந்த உறைகளை சோதனைச் சாலையில் பரிசோதித்ததில் அவை பல அடுக்குகளைக் கொண்ட ‘இரண்டாம் தோல்’ என்பதும் பிரசவத்திற்கு பின் நான்கு நாட்களுக்குள் அவை வீழ்ந்துவிடுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. வாழ்விட இழப்பினாலும் மீன்பிடி வலை யில் தவறுதலாக சிக்குவதாலும் இவை அழியும் அபயாத்தில் உள்  ளன. இந்த ஆய்வு அவற்றின் வாழ்வு குறித்து அதிக தரவுகளை  தருகிறது. இந்த ஆய்வு 2024 மே 28ஆம்  தேதியிட்ட பிஷ்ஷரி புல்லட்டீன் (Fishery Bulletin) என்கிற இத ழில் வந்துள்ளது.

மறைந்திருக்கும் புற்று நோய் செல்களுக்கு சிகிச்சை

மார்புப் புற்றுநோயில் வெற்றி கரமான சிகிச்சைக்குப் பின்  னும் முப்பது சதவீதம் நபர்களுக்கு  புற்று நோய்க் கட்டி திரும்பவும் தோன்றுகிறதாம். இதனால் உல கில் ஆண்டு தோறும் 685,000 இறப்புகள் ஏற்படுகின்றன. திரும்ப வரும் நோயை கணிசமாக  குறைக்க ஒரு புதிய முறையை  பென்சில்வேனியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். எலும்பு மஜ்ஜையிலும் பிற பாகங்களி லும் எஞ்சியிருக்கும் மறைவான  புற்று நோய் செல்களை (dormant tumor cells (DTCs) குறி வைப்பதன் மூலம் நோயாளி களை புற்று நோயிலிருந்து காப் பாற்றலாம் என்று காட்டியுள்ளது இந்த ஆய்வு.  இப்போதுள்ள முறையில் மார்புப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு புற்று நோய் திரும்பவும் தோன்றுகிறதா என்பது கவனமாக கண்காணிக் கப்படுகிறது. புதிய முறையில் இவ்வாறு காத்திருத்தல் மற்றும் கண்காணித்தல் இல்லாமல் திரும்ப வருவதன் மூல வேர்கள்  மருந்துகள் மூலம் அழிக்கப்படு கின்றன..  கடந்த காலத்தில் மார்புப்  புற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்களும் அவர்களுக்கு டிடிசி  இருப்பது உறுதி செய்யப்பட்ட வர்களுமான 51 நபர்களில் செய்த  தொடர் சோதனைகளில் சில குறிப்பிட்ட மருந்துகளில் ஒன்று  மட்டும் எடுத்துக் கொண்டவர் களில் 80சதவீதம் நபர்களில் டிடிசி அழிக்கப்பட்டது காணப்  பட்டது. இரண்டு மருந்துகளை யும் சேர்த்து எடுத்துக் கொண்ட வர்களில் 87 சதவீதம் மறைவான செல்கள் அழிந்தன.  தீவிரமாக வளரும் புற்று நோய்  செல்களுக்கு எதிராக வேலை செய்யாத மருந்துகள் மறைந்தி ருக்கும் செல்களுக்கு எதிராக  பலனளிக்கின்றன என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழ கத்தை சேந்த புற்று நோய் மருத்து வர் லெவிஸ் சோடோஷ். இத னால் மறைந்திருக்கும் செல் களின் உயிரியல் தீவிரமாக இயங்கும் செல்களிலிருந்து வேறு பட்டது என்று தெரிகிறது என்கிறார்  அவர்.  அதிக எண்ணிக்கையிலான நபர்களிடம் சோதனை செய்வதும் வெவ்வேறு மருந்துகளின் சேர்க்கையை சோதிப்பதும் அடுத்த கட்டமாகும். இந்த ஆய்வு Nature Medicine என்கிற இதழில் வந் துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறு கிறது.

அழகான காட்டாளன் நமது சூரியன்

11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியக் கோளின் செயல்பாடுகள் அதிகரித்து பின் மீண்டும் பழைய நிலைக்கு வருகிறதாம். இதை சூரியச் சுழற்சி (Solar Cycle) என்கிறார்கள். கடந்த சுழற்சி 2019 ஆம் ஆண்டு முடிவுற்றது. தற்போதைய சுழற்சி சாதாரணமானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது சூரியனின் செயல்பாடு அதிகரிக்கும் கோணத்தில் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். சூரியானானது நமக்கு நிம்மதி அளிக்கக்கூடிய நிரந்தரமான ஒரு அன்றாட இருப்பு என்று தோன்றும். ஆனால் உண்மையில் அது கொந்தளிப்பானதும் மாறக்கூடியதுமாகும். சூரிய புள்ளிகள் சூரிய வெடிப்புகள், கொரோனா பொருண்மை சிதறல்கள் ஆகியவையின் அதிகரிப்பாக இது வெளிப்படுகிறது. சூரியன் தன் துருவப் புள்ளிகளை மாற்றும் இடமான சூரிய உச்சத்தில் இவை நடைபெறுகின்றன.  இதுவரை 25 சுழற்சிகளை அறிவியலாளர்கள் ஆய்வு செய்து அதன் இயக்கங்களை பெருமளவில் பதிவு செய்திருக்கிறார்கள். இருந்த போதிலும் எதிர்காலத்தில் சூரியன் எவ்வாறு இயங்கும் என்பது துல்லியமாகத் தெரியாது. எடுத்துக்காட்டாக 1645 - 1715 மற்றும் 1790- 1830 காலகட்டங்களில் சூரிய புள்ளிகளே தோன்றவில்லை. இதன் காரணம் தெரியவில்லை. 22 மற்றும் 23 ஆவது சுழற்சிக்கு காலத்தில் (1986, 1996) சூரிய புள்ளிகளின் இயக்கம் சாதாரணமாக இருந்தது. சூரியக் காற்றின் அழுத்தம் குறைந்து கொண்டே வந்தது. 2008இல் தொடங்கிய 24ஆவது சுழற்சி பலவீனமாக இருந்தது. ஆனால் சூரியக் காற்றின் அழுத்தம் வலிமையானதாக அதிகரித்தது.  நாசா ஜெட் உந்து சோதனைச் சாலையை சேர்ந்த பிளாஸ்மா ஆராய்ச்சியாளர் ஜெமி ஜெசின்ஸ்கியும் அவரது சக விண்வெளி இயற்பியலாளர் மார்க்கோ வெல்லியும் நீண்ட கால தரவுகளை ஆராய்ந்து இந்த ஆச்சரியமான போக்குகளை கண்டறிந்துள்ளனர்.  சூரியன் ஒரு அசாதாரணமான சிக்கலான பொறி. அடுத்து அது என்ன செய்யப்போகிறது என்பதை முன்கூட்டியறிவது மிகக் கடினம். விண்வெளி காலநிலையில் போக்கிரித்தனம், பலமான காற்று, சூரிய புயல், வெடிப்புகள், கொரோனா பொருள் எறிப்பு ஆகியவை அதிகரிக்கலாம் என்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது.  நமது அழகான காட்டுத்தனமான விண்கோளான சூரியனின் இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சூரியப் புள்ளிகள் எண்ணிக்கை மட்டும் போதாது; அதன் இயக்கம் குறித்த பரந்த அட்டவணை தேவை. இந்த ஆய்வு தி ஆஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ் (The Astrophysical Journal Letters) என்கிற இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.