articles

img

கடைநிலை உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் புதுச்சேரி ஆட்சியாளர்கள் - எஸ் ராமச்சந்திரன்

கடைநிலை உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் புதுச்சேரி ஆட்சியாளர்கள்!

புதுச்சேரியில் அமைப்புசாராத் தொழிலா ளர்களுக்கு “பண்டிகைக் கால உதவி” என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.1000, ரூ.1500 என முதல்வர் அறிவிப்பது வழக்கம். ஆனால், அறிவித்தத் தொகை பண்டிகைக் காலங்களில் கொடுக்கப்படாமலேயே போகும். இந்த ஆண்டும் முதல்வர் ரூ.2000 என்று அறி வித்தார். அதற்கான கோப்புகளில், பண்டிகைக்கு ஒரு வார காலத்திற்கு முன் முதல்வர் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையின் ஒப்புத லுக்காகக் கோப்பு நகர்ந்தது.

ஆளுநர் மாளிகையின் அலட்சியம் கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த தால், இதில் கையெழுத்திட ஆளுநர் கைலாசநாத னுக்கு நேரமில்லை. ஏழை எளிய உழைக்கும் மக் களுக்கு வழங்குவதற்கு அவருக்கு மனமும் இல்லை. தீபாவளிக்கு முதல் நாள் சனிக்கிழமை காலையில் ஒருவாறு அவர் கையெழுத்துப் போட்டார். அன்று தலைமைச் செயலகம், அரசு கருவூலமும் விடுமுறை  என்பது துணைநிலை ஆளுநருக்குத் தெரிய வில்லை போலும். தொடர்ந்து பண்டிகைக் கால விடு முறையும் வந்தது. இதனால், முதல்வரின் அறி விப்பும், ஆளுநரின் ஒப்புதலும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படாமலேயேப் போயின. அதிகாரிகளின் ராஜ்ஜியம்  முதல்வர் முடிவுகள் காற்றில் அமைப்புசாராத் தொழிலாளர்களைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை நிலையைப் பற்றியும் அறியாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தாங்கள் புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தில் தான் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம் என்ற நினைப்பின்றிச் செயல்படுகின்ற னர்.

கோப்புகள் நகர்ந்தும், பண்டிகையும் முடிந்து ஒரு வார காலமாயிற்று. 27,000 அணிதிரட்டப்படாத தொழிலாளர்களுக்கு, உரிய நேரத்தில் இச்சிறிய உதவித்தொகையைக் கூட வழங்க மனமில்லாத புதுச்சேரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் துணைநிலை ஆளுநரின் அலட்சியத்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின், முதல்வரின் முடிவுகள் காற்றில் பறக்க விடப்படு கின்றன. இதை ஏற்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வருக்கும் இதில் எவ்விதக் கோபமோ, வருத்தமோ இல்லை. அவருக்கு முதல்வர் நாற்கா லியே முக்கியம். எவ்வளவு அவமானங்கள் அடைந்தா லும் துடைத்தெறிவார். பாஜக ஆளுநராலும், ஆர் எஸ் எஸ் ஆதரவு சிந்தனை கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாலும் தொடர்ந்து, புதுச்சேரி உழைப் பாளி மக்கள் வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர். கமிஷனுக்கு மட்டுமே  கையெழுத்திடும் அதிகாரிகள் 27,000 தொழிலாளர்களுக்கு ரூ.2000 வீதம் பணம் பட்டுவாடா செய்வதில் அரசுக்குச் செலவு வெறும் ரூ.5.5 கோடிக்கும் குறைவுதான். ஒரு கையெழுத்து போதும், அனைவருக்கும் வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும். அந்தத் தொகை உடனடியாகச் சந்தைப் புழக்கத்திற்கு வந்திருக்கும்.

சாலையோர வியாபாரிகள், சிறிய மளிகைக் கடை வியாபாரிகளின் கடைகளுக்குப் புழக்கத்திற்கு வந்திருக்கும். எளிய மனிதர்களுக்குப் பண்டிகை நாளில் கிடைத்த சிறிய உதவி இது. ஆனால், அதிகாரிகளுக்கு மனம் இல்லை. இத்தொகைக்குக் கையெழுத்திடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்? கமிஷனா வரப்போகி றது! யார் வீட்டு அடுப்பு எரிந்தால் என்ன! போனால் என்ன! புதுச்சேரி அதிகாரிகளின் மனநிலை இதுவே தான். ரேசன் கடைகள்:  அறிவிப்பும் அலட்சியமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின், நாடாளுமன்றத் தேர்த லில் பா.ஜ.க. வேட்பாளர் படுதோல்வி அடைந்த பின் னரே, பா.ஜ.க. என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரேசன் கடைகளைத் திறப்பதாக அறிவித்தார்கள். சில கடைகளைத் திறந்தார்கள். அரிசியும் போட்டார்கள். அனைத்துக் கடைகளையும் திறப்பதிலும், திறந்த கடைகளில் அரிசியைப் போடுவதிலும் பா.ஜ.க. கூட்டணி அரசு, அலட்சியம் காட்டிக் கொண்டே இருக்கி றது. முதல்வரின் அறிவிப்புக்கு, ஆளுநரின் ஒப்புதல் இல்லை; வழக்கம் போல் அதிகாரிகளின் அலட்சிய மும் கூடவே. தீபாவளிக்கு இலவசமாக, சர்க்கரை, எண்ணெய் உட்பட ஐந்து அத்தியாவசியப் பொருட்களுடன் புதுச்சேரி அரசின் “தீபாவளி கிஃப்ட்” என்று முதல்வர் அறிவித்தார்.

முதல் நாள் வரை ரேசன் கடைகள் திறக்கப்படவில்லை. சில கடைகள் திறக்கப்பட்டு, அரிசி மட்டும் வழங்கினர்; சில கடைகளில் கிஃப்ட் மட்டும் வழங்கினார்கள். பெரும்பாலான கடைகளில் எதுவுமே வழங்கப்படவில்லை. எளிய மக்கள் தீபாவளி முடிந்த பின்னரும் ‘கிஃப்ட்’டுக்காக ரேஷன் கடைகளுக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அலட்சியத்தின் உச்சம் புதுச்சேரி அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டிக்கும் வகையில் ஜனநாயக மாதர் சங்கம், “காணாமல் போன ரேஷன் கடைகள்... கண்டு பிடியுங்கள்” என்ற முழக்கத்துடன் பிரச்சார இயக் கத்தை நடத்தியது. கும்மி அடித்தனர். பாட்டுப் பாடினர். கோஷம் போட்டனர். ஆட்சியாளர்களும், அதிகாரி களும் தூக்கத்திலிருந்து எழவே இல்லை. சிஐடியு சார்பில் தீபாவளி முதல் நாள், ஞாயிற்றுக் கிழமை காலை, அமைப்பு சாராத் தொழிலாளர்களு க்கு உதவித் தொகை வழங்கு! என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கேளாச் செவி யர்களுக்கு எட்டவே இல்லை. அக்டோபர் 26 வரை எந்த  அசைவும் இல்லை. புதுச்சேரியின் ஆட்சியாளர்கள் நன்றாகவே குறட்டை விடுகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி உதவித்தொகை உடனடியாக வழங்க, இழுத்தடிக்கும் அதிகாரிகளையும் துணை நிலை ஆளுநரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ரேசன் கடைகள் அனைத்தும் முழுமையாகத் திறக்கப்பட்டு, அரிசியுடன் அறிவிக்கப்பட்ட தீபாவளிப் பொருட்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.  மூன்று அதிகார மையங்களில் (அமைச்சரவை, ஆளுநர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) புதுச்சேரி அரசு சிக்கிச் சீரழிகிறது. இதற்குப் பொறுப்பு ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் உள்துறை அமைச்சகம் தான் காரணம். இதற்கு முடிவு கட்ட பா.ஜ.க. என். ஆர்.  காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்கள் தூக்கி எறி யப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான  மக்கள் இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கவிருக்கிறது.