ஸ்கேன் இந்தியா
பிடிவாதம்
லடாக் பகுதியில் உள்ள அரசியல், சமூக அமைப்புகளின் தலைவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மாநில அந்தஸ்து, ஆறாவது பட்டியலில் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. லே நக ரில் கடந்த மாதத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்ப வங்கள் குறித்த விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதைக் காரணம் காட்டி எந்தவித மக்கள் இயக்கங் களுக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு பிடிவாதம் காட்டுகிறது. சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவு பெற்ற பிறகும் ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து இதுவரையில் வழங்காததை தலைவர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். ஆனால், போராட்டங்கள் மட்டு மல்ல, அமைதிப் பேரணிக்குக்கூட அனுமதி தராமல் பிடிவாதம் காட்டுவது அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது.
முணுமுணுப்பு
புது கோஷ்டி கேரள காங்கிரசில் உரு வாகியிருக்கிறது. மேலிடத்திற்கு நெருக்கமாயிருக்கும் கே.சி.வேணுகோபால் தான் இந்தப் புதிய கோஷ்டிக்குத் தலைவ ராவார். அவருடைய கோஷ்டிதான் ஆறு சட்ட மன்ற உறுப்பினர்களுடன் பெரியதாகவும் மாறி யிருக்கிறதாம். அடுத்த இடத்தில் ஐவருடன் சென்னித்தலா, அப்புறம் ஏ குரூப்பில் 3, வி.டி.சதீஷன் வசம் 2 என்று இருக்கிறது. யாருடனும் சேராமலும் சிலர் உள்ளனர். பத்தாண்டுகள் நிறைவு செய்யும் இடது ஜன நாயக முன்னணியை வரும் தேர்தலில் எதிர் கொள்வதற்கான தயாரிப்புகளில் காங்கிரஸ் தலைமையிலான அணி இறங்கவில்லை. எது பெரிய கோஷ்டி என்பதைத் தீர்மானிப்பதில் மும்முரம் காட்டுகிறார்கள். இப்படியே சென்றால், தேர்தல் நேரத்தில் எடுக்கும் முயற்சிகள் பூஜ்ஜியத்தில்தான் முடியும் என்று காங்கிரசின் கூட்டணிக்கட்சியினர் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உளறல்
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பல மாநில முதல்வர்களை பாஜக களமிறக்கியுள்ளது. திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, முதல் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாகாலாந்து தீவிரவாத இயக்கம் என்.எல்.எப்.டி மற்றும் அகில திரிபுரா படை ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதற்குப் பதிலாக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி(ஐ.பி.எப்.டி) என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு கூட்டம், இரண்டு கூட்டம் அல்ல, ஒரு நாள் முழுவதும் பல கூட்டங்களில் இப்படியே பேசியிருக்கிறார். இந்த ஐ.பி.எப்.டி. என்ற அமைப்பு திரிபுராவில் பாஜகவின் கூட்டணிக்கட்சியாகும். பல தேர்தல்களில் தொடர்ந்து கூட்டாகத் தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. முதல்வரின் உளறல் திரிபுராவில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. அவருடைய சமாதானத்தை ஏற்க கூட்டணிக்கட்சி மறுத்துள்ளது.
மகிழ்ச்சி
தீபாவளி அன்று லாவண்யா- விஷ்ணு இணையின் திருமணம் நடந்திருக்கிறது. K-SMART செயலி வாயிலாக, KYC நடைமுறையை வீடியோ வழியாக செய்து முடித்திருக்கிறார்கள். விடு முறை நாளானாலும், உள்ளாட்சி ஊழியர்கள் அந்தத் திருமணப் பதிவு விண்ணப்பத்தை அங்கீகரித்தனர். சில நிமிடங்கள்தான் காத்தி ருக்க வேண்டியிருந்தது. திருமணச் சான்றிதழ் வாட்ஸ் அப் வழியாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்தது. கேரள மாநிலம் காவஷேரியில்தான் இது நடந்துள்ளது. அந்தப் பகுதியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர் திருமணத்திற்கு வருகிறார். அவர் வெறும் கையோடு வரவில்லை. திருமணச் சான்றிதழோடு வந்த அவரைப் பெரும் மகிழ்ச்சியுடன் குடும்பத்தினர் வரவேற்கிறார்கள். எந்த அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் பணம் கொடுக்காமல் வேலை நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் உள்ளது. விதிவிலக்காகக் கேரளம் என்பதற்கான காரணங்களில் ஒன்றாக இது போன்ற நடைமுறைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.