உழவே தலை!
உழவினைச் செய்தல் வேண்டும் உயிர்களைக் காத்தல் வேண்டும்! கழனியும் செழிப்ப தற்கு காலமும் உழவும் வேண்டும்! உழவினைச் செய்யா விட்டால் உவர்நில மாகிப் போகும்! மழலையைப் போல நாமும் மண்ணையும் காத்தல் வேண்டும்! பண்படா நிலத்தில் நாமும் பயிர்களை நட்டு வைத்தால் புண்படக் காய்ந்து போகும் பொட்டலாய்க் காடும் மாறும் ! மண்ணையும் உழுது போட மலர்ந்துமே சிரிக்கும் நன்கு வண்ணமாய் அழகு தோன்றும் வளமையாய்க் காடும் மாறும்! இயற்கையைக் காக்க நாமும் இன்பமும் துள்ளும் வாழ்வில் ! முயற்சியும் செய்ய நாளும் முன்னேறக் காண்போம் பாரில் !
