“காந்தியின் கனவை நசுக்கும் மோடி - தமிழகத்தின் குரல் ஐ.நா.வில் ஒலிக்கும்!”
மகாத்மா காந்தியும், நேருவும் பாலஸ்தீன நிலம் பாலஸ்தீனர்களுக்கே சொந்தம் என்றனர். காலப்போக்கில் எவ்வளவு போராட்டங்கள், போர்கள் வந்தாலும் இந்தியா தனது இறையாண்மையி லிருந்து விலகவில்லை. ஆனால் கடந்த பத்து ஆண்டு களில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா. வழிகாட்டுதல்களை மீறி, பாலஸ்தீனர்களை அழிப்பதும் அந்த மண்ணைக் கைப்பற்றுவதும்தான் நோக்கம் என்று பெஞ்சமின் நேதன்யாகு போரை நடத்துகிறார். குழந்தைகளைக் கொன்றழித்த ஆயுதங்களில் ‘மேட் இன் இந்தியா’ என்று உள்ளது. அதானி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயு தங்கள் அவை. மகாத்மா காந்தி கண்ட கனவு, கொள்கை, கோட்பாட்டையெல்லாம் ஒன்றிய பாஜக அரசு தகர்த்துக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து குரல் வருகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு மக்களின் குரல் ஐ.நா. சபையில் ஒலிக்கும். பாலஸ்தீனம் பக்கம் தமிழகம் நிற்கும்.