articles

காசாவில் போர் நிறுத்த அமைதித் திட்டம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உடன்பாடு!

காசாவில் போர் நிறுத்த அமைதித் திட்டம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உடன்பாடு!

கெய்ரோ, அக். 9 - காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட அமைதித் திட்டத்தை அமல்படுத்த இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புக்கொண்டுள் ளன. அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்கா - இஸ்ரேல் - ஹமாஸ் பிரதிநிதிகளுக்கு இடையே எகிப்தில் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் கடந்த மூன்று நாட்களாக பேச்சு வார்த்தை நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தை முடிவில், போர் நிறுத்தத் திட்டத்தின் முதற்கட்டத் திற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறி வித்துள்ளார். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பணயக் கைதிகளும் “மிக விரை வில்” விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொண்ட எல்லைக்கோட்டிற்கு வெளியே திரும்பப் பெறும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது உறுதியான மற்றும் நீடித்த அமைதிக்கான முதல் படியாக இருக்கும் என இந்த முடிவை பலதரப்பி னரும் வரவேற்றுள்ளனர். எனினும் சில முக்கியமான விவரங்களில் இன்னும் தெளிவாக முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. இஸ்ரேல் படைகள் எப்போது வெளியேறும், போருக்குப் பின் காசா  நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஹமாஸின் எதிர்காலம் போன்ற முக்கியமான விஷயங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. குறிப்பாக டிரம்ப் முன்வைத்த திட்டத்தின்படி ஹமாஸ் அமைப்பு அவர்களிடம் கைதிகளை ஒப்ப டைத்த பிறகு போர் முடிவுக்கு வர  வேண்டும். ஆனால், ஹமாஸ் ஆயுதங் களைக் கைவிட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. இந்த சூழல் நிரந்தர போர் நிறுத்தத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது. இதனிடையே முதற்கட்ட உடன்படிக்கையை, அமலாக்க ஒப்பு தலுக்காக தனது அமைச்சரவைக்கு நேதன்யாகு சமர்ப்பிப்பார். வாக் கெடுப்பில் ஒப்பந்தம் நிறைவேறி யவுடன் ஒப்பந்தப்படி இஸ்ரேல் ராணு வம் பின்வாங்கும். அதன்பின் 72 மணி நேரத்திற்குள் ஹமாஸ் கைதிகளை விடுவிக்கத் தொடங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. டிரம்ப் திட்டத்தின் அடுத்த கட்டம் போருக்குப் பிந்தைய காசா நிர்வாகத்தைக் கண்காணிக்க, தனது தலைமையில் “அமைதி வாரியம்” என்ற பெயரில் ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்குவது தான் தீர்வு  என்று கூறியுள்ளார்.