நெதர்லாந்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகத் திரண்ட 2.5 லட்சம் மக்கள்
ஆம்ஸ்டர்டாம்,அக்.9- பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நெதர்லாந்தில் சுமார் 2.5 லட்சம் மக்கள் ஒன்றுதிரண்டு உலகையே பிரமிக்க வைத்துள்ளனர். இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த ஐரோப்பிய நாடுகள் சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐரோப்பிய மக்கள் கோ ரிக்கை வைத்து வருகின்றனர். பிரான்ஸ், பெல்ஜியம், கிரீஸ், இத்தாலி, ஜெர்மன் என பல ஐரோப்பிய நாடுகளில் லட்சக் கணக்கான மக்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்தி யுள்ளனர். இந்நிலையில் நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து பாலஸ்தீனக் கொடிகளுடன் திரண்டனர். பின்னர் நகரின் மையப்பகுதி வழியே பேரணியாகச் சென்றனர். இதுவே ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனர்க ளுக்கு ஆதரவாக நடைபெற்ற மிகப் பெரிய பேரணி என கூறப்படுகிறது. பேரணியில் பங்கேற்றவர்கள் இஸ்ரே லுக்கு எதிராக, நெதர்லாந்து அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், அந்நாட்டுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நெதர்லாந் தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பெரும் போராட்டம் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி யுள்ளது. இவ்வாறு தேர்தல் நேரத்தில் அரசை கண்டித்து மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் போராட்டங்களின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் இஸ்ரே லுக்கு எதிராக ஒரு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தும் எஃப்-35 போர் விமா னத்திற்கான உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு ‘சாத்தியமில்லை’ என்று நெதர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் வான் வீல் கூறி யுள்ளார். அதேபோல காசாவிற்கு நிவார ணப்பொருட்களை ஏற்றி சென்ற குளோ பல் சுமூத் கப்பல் குழுவை இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. அப்போது இத்தாலி மக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அந்நாட் டின் தீவிர வலதுசாரி பிரதமர் மெலோனி அக்கப்பல் குழுவிற்கு பாது காப்பாக ராணுவக் கப்பல்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.