articles

img

இந்திய மக்களை பேரழிவில் தள்ளும் மோடி அரசு - எஸ்.பி.ராஜேந்திரன்

இந்திய மக்களை பேரழிவில் தள்ளும் மோடி அரசு

அணுசக்தி விபத்துகளில் சப்ளையர்களின் (சரக்கு வழங்குநர்களின்) பொறுப்பை நீக்கி, தனியார் நிறுவனங்களுக்கு அணு உலைகள் இயக்க வழிவகுக்கும் (ஷாந்தி) SHANTI  மசோதாவை மோடி அரசு திங்கள்கிழமை மக்கள வையில் அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் அணுசக்தித் துறையில் மிகப்பெரிய கொள்கை மாற்ற மாகும்; அதே வேளை, இந்திய மக்களை கொடூரமான படுகுழியில் தள்ளும் பயங்கரமும் ஆகும். “நிலையான பயன்பாடு மற்றும் இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் மேம்பாடு (Sustainable Harnessing and Advancement of Nuc lear energy for Transforming India - SHANTI) மசோதா 2025” என்ற இந்த புதிய மசோதா, கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் அணுசக்தி சட்டம் 1962 மற்றும் அணுசக்தி பாதிப்புக ளுக்கான சிவில் பொறுப்பு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) 2010 ஆகியவற்றை முற்றி லும் ரத்து செய்கிறது. முற்றிலும் தனியார்மயம் தற்போது வரை இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India) மட்டுமே அணு மின் நிலையங்களை நிறுவி இயக்கும் பிரத்தியேக உரிமையைக் கொண்டிருந்தது.

முழுமையாக அரசு பொதுத்துறை கையில் உள்ள இந்த உரிமை முற்றிலும் நீக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், கூட்டு முயற்சிகள் (joint ventures) உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் அணு உலைகளை உருவாக்க, சொந்தமாக வைத்திருக்க, இயக்க - இந்த புதிய மசோதா அனுமதிக்கிறது. தனியார் நிறுவனங்கள், அணு உலைகளுக்கான பிரதான எரிபொருளான ‘யுரேனியம்-235’ செறி வூட்டல் (enrichment), அணு எரிபொருள் தயாரிப்பு, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கையாளுதல், அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் இறக்குமதி-ஏற்றுமதி ஆகிய அனைத்திற்கும் உரிமம் (licence) பெறலாம். இதுவரை அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த துறை முழுவதுமாக தனியார்மய மாக்கப்படுகிறது. அதே வேளை, கன நீர் (heavy water) உற்பத்தி, உயர் மட்ட கதிரியக்க கழிவுகள் (high-level radioa ctive waste) நிர்வகிப்பு, பயன்படுத்தப்பட்ட எரி பொருள் மறுசுழற்சி (reprocessing) ஆகியவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தொடரும்

என்று மசோதா குறிப்பிடுகிறது. இவை மூன்றும் அதிக செலவு பிடிக்கும் பிரிவுகள் என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது, ஒட்டுமொத்த லாபம் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு ; நட்டம் முழுவதும் பொ துத்துறை நிறுவனத்திற்கு என, தெளிவாக வரையறை செய்கிறது.  சப்ளையர்களின் விபத்துப் பொறுப்பு முற்றிலும் நீக்கம் மசோதாவின் மிக முக்கியமான மற்றும் மிக மிக ஆபத்தான அம்சம், குறைபாடுள்ள உபகரணங்க ளால் அணுசக்தி விபத்து ஏற்பட்டாலும், அந்த உபகர ணங்களை அளித்த சப்ளையர்கள் மீதான பொறுப்பை முற்றிலும் நீக்குவதாகும்.  2010 சட்டத்தின் பிரிவு 17(பி), ஒரு அணுசக்தி இயக்கு பவருக்கு (operator) ‘மீள்வதற்கான உரிமை’ (right of recourse) வழங்கியது. அதாவது, குறைபாடுள்ள உபகரணங்கள், தரமற்ற சேவைகள் அல்லது சப்ளை யரின் அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டால், இயக்குபவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தும் இழப்பீட்டை சப்ளையரிடமிருந்து மீட்க முடியும். ஆனால் இப்போது ஷாந்தி(SHANTI) மசோதா ‘சப்ளையர்’ (supplier) என்ற வார்த்தையையே முற்றிலும் நீக்குகிறது. விபத்துக்கு சப்ளையர்கள் அல்லது அவர்களின் உபகரணங்கள் பொறுப்பாக இருப்பது, இயக்குபவர்கள் இழப்பீடு கோருவதற் கான காரணங்களில் இருந்து அகற்றப்படுகிறது.

இது அமெரிக்க, பிரெஞ்சு, ஜப்பானிய அணுசக்தி நிறுவ னங்களின் நீண்டகால ‘கோரிக்கையாக’ இருந்தது. மேலும், 2010 சட்டத்தின் பிரிவு 46, பாதிக்கப் பட்டவர்கள் சேதஈடு வழக்குகள் (tort claims) தொடர சிவில் நீதிமன்றங்களின் அதிகார வரம்பை அனு மதித்தது. ஆனால் புதிய மசோதாவின் பிரிவு 81, அணுசக்தி விபத்துகளுக்கு சிவில் நீதிமன்றங்களின் அதிகார வரம்பை முற்றிலும் தடை செய்கிறது. அனைத்து வழக்குகளும் அரசு நியமிக்கும் உரிமை கோரல் ஆணையம் (Claims Commission) மூலமாக மட்டுமே தீர்க்கப்படும். விபத்துப் பொறுப்பு வரம்புகள்: சேதத்தின் அடிப்படையில் அல்ல புதிய மசோதா, அணுசக்தி விபத்து ஏற்படும் உண்மையான சேதத்தின் அடிப்படையில் அல்லா மல், இயக்கப்படும் ஆலையின் வெப்ப ஆற்றல் அளவின் (thermal capacity) அடிப்படையில் மட்டுமே இழப்பீடு நிர்ணயிக்கிறது. 3,600 மெகாவாட் வெப்ப ஆற்றலுக்கு மேல் உள்ள அணு சக்தி நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ₹3,000 கோடி; 1,500 முதல் 3,600 மெகாவாட்டிற்கு ₹1,500 கோடி; 150 மெகாவாட்டிற்குக் குறைவான வற்றிற்கு ₹100 கோடி மட்டுமே. இது மிக மிகக் குறைந்த பொறுப்பு (limited liability) என்ற கொள்கையை அமல்படுத்துகிறது. மேலும், இயக்குபவர்கள் சட்டங்களை “கடுமை யாக மீறினாலும்” (serious violation) அதிகபட்ச அபராதம் ₹1 கோடி மட்டுமே.  மோடி அரசாங்கமும் கார்ப்பரேட் பெரு முதலாளி களும் எத்தனை குரூரமான - கொடூரமான கூட்டுக் களவாணிகள் என்பதற்கு இதை விட சான்று வேறென்ன வேண்டும்! விபத்து ஏற்பட்டு ஆயிரக் கணக்கில் மக்கள் செத்து மடிந்தாலும், கோடி கோடி யாக கொள்ளையடிக்கிற லாபத்தில் ஒரு சிறு தொகை யைக் கூட சட்டப்பூர்வ இழப்பீடாக தர வேண்டிய தில்லை என்பதை எண்ணிப் பார்க்கவே பயங்கர மாக உள்ளது. அமெரிக்க அழுத்தமும்  கொள்கை மாற்றமும் 2010-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவுடனான

அணு சக்தி உடன்பாட்டையும், அதற்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றாக எதிர்த்தது. அப்போது அச்சட்டத்தில் சப்ளையர்களின் பொறுப்பை நீக்க விதிகளை சேர்த்தபோது, அந்த அம்சத்திற்கு மட்டும் பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. 1984 போபால் விஷவாயுக் கசிவை எடுத்துக்காட்டி, அமெரிக்காவின் யூனியன் கார்பைடு (Union Carbide) நிறுவனமும் அதன் அதிகாரிகளும் தண்டனை யின்றி தப்பித்ததை நினைவுபடுத்தி, சப்ளையர் பொறுப்பு அவசியம் என்று வாதிட்டது. ஆனால் அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களான வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) மற்றும் பிரெஞ்சு நிறுவனமான அரேவா (Areva) ஆகியவை இந்த பொறுப்பு விதிகளை கடுமையாக எதிர்த்தன. இவை  இரண்டும் இந்தியாவில் அணு உலைகள் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத் திட்டிருந்தன, ஆனால் பொறுப்பு பிரச்சனை காரணமாக அவற்றை நிறைவேற்றவில்லை. 2015 ஜனவரியில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி சட்டத்தை மாற்றாமலேயே “பிரச்ச னைகள் தீர்க்கப்பட்டுவிட்டன” என்று அறிவித்தார். FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) வெளி யிட்டு விளக்கங்கள் அளித்தார். ஆனால் அமெரிக்க, பிரெஞ்சு நிறுவனங்கள் இதில் திருப்தி அடைய வில்லை. இன்றுவரை, 2010 சட்டத்திற்கு முன்னர் கையெ ழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யா மட்டுமே இந்தியாவில் கூடங்குளத்தில் அணு ஆலையை வழங்கி இயக்குகிறது. மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் நிறைவேறவில்லை.

இப்போது டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஆன பின்பு, அவரது வர்த்தகப் பேச்சு வார்த்தை அழுத்தங்களின் மத்தியில், மோடி அரசு முழுமையான கொள்கை மாற்றத்தை மேற்கொண்டு, இந்திய மக்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளது. இது பல பில்லியன் டாலர் அமெரிக்க அணு உலை விற்பனைக்கு வழிவகுக்கும். அரசின் வாதம் அனைத்தும்  கார்ப்பரேட் நலனுக்கே! 2047-க்குள் 100 ஜிகாவாட் (gigawatt) அணு சக்தித் திறன் என்ற லட்சிய இலக்கை அடைய தனி யார் பங்கேற்பு அவசியம் என்கிறது மோடி அரசு. தற்போது இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் அணுசக்தி வெறும் 1.5% மட்டுமே (8.8 ஜிகாவாட்). உற்பத்தி செய்யப்படும் மின்சாரத் தில் 3% மட்டுமே அணுசக்தியிலிருந்து வருகிறது. 2070 நிகர-பூஜ்ஜிய கார்பன் (Net-Zero carbon) இலக்கை அடைய, தூய்மையான ஆற்றல் (clean energy) உற்பத்தியை அதிகரிக்க அணுசக்தி முக்கி யம் என்பது அரசின் வாதம். சிறிய ரக உலைகள் (small modular reactors) உருவாக்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய மசோதாவின் படி, அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்திற்கு (Atomic Energy Regulatory Board - AERB) சட்டப்பூர்வ அந்தஸ்து (statutory status) வழங்கப்படுகிறது. இதுவரை நிர்வாக உத்தர வின் கீழ் மட்டுமே இயங்கி வந்த ஒழுங்குமுறை வாரி யம், இனி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக் கூடிய சுயேச்சையான அமைப்பாக செயல்படும். சர்ச்சைகளுக்குத் தீர்வு காண அணுசக்தி குறை தீர்ப்பு ஆலோசனை மன்றம் (Nuclear Grievance Redressal Forum) புதிதாக உருவாக்கப்படுகிறது. உரிமைகோரல் ஆணையம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (appellate tribunal) நிறுவப்படுகிறது. அணுசக்தி பொறுப்பு நிதி (Nuclear Liability Fund) தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இயக்கு பவரின் பொறுப்பு வரம்பை மீறும் சேதங்களுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்கும். - இப்படி அரசு குறிப்பிடும் அனைத்துமே, பன்னாட்டு, உள்நாட்டு பெரும் கார்ப்பரேட் அணு சக்தி  நிறுவனங்களின் தங்குதடையற்ற லாபத்தை, கொள் ளையை உறுதி செய்வதற்கானவை மட்டுமே. எனவே, இது இந்திய நாட்டையே இருளிலும் பேரழி விலும் தள்ளும் அபாயம் கொண்ட மசோதா. முழு மூச்சாக எதிர்த்து, முறியடிக்கப்பட வேண்டிய மசோதா.