குடியிருப்புகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்: பொதுமக்கள் மறியல்
நாமக்கல், டிச.18- குமாரபாளையம் குடியிருப்புகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வந்ததால் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் பாலக்கரை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி அப்பராய சத்திரத்திற்கு சொந்தமானதாக கூறப்பட்டு வருகிறது. அப்புராயர் என்ற மன்னர் இப்பகுதியை ஆளும் பொழுது குடியிருப்புகள் உரு வாக்கி பொது மக்களுக்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறப் படும் இந்த பகுதி தற்பொழுது இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது எனக் கூறி, இந்து சமய அறநிலைத்துறை அதி காரிகள் கடந்த ஒரு வருட காலமாக இப்பகுதி மக்களை, குடியி ருப்புகளை காலி செய்து வெளியேருமாறு வற்புறுத்தி வரு கின்றனர். இந்நிலையில், புதனன்று இந்து சமய அறநிலை துறை ஈரோடு இணை ஆணையர் தலைமையில் வந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அப்புராய சத்திர பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்கு சீல் வைத்தனர். இதனால் ஆவேச மடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்ட துடன், பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள குமாரபாளையத் தில் இருந்து பவானி செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பயன் ஏற்படாததால், வட்டாட்சியர் பிரகாஷ் உடனடியாக அந்த பகுதி மக்களை வரவழைத்து சாலை மறி யலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழைத் ததின் பேரில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் வட்டாட்சியர் அலுவலக நுழைவுப் பகுதியை அடைத்தவாறு அப்பகுதி மக்கள் தர்ணா போராட் டம் நடத்தினர். வட்டாட்சியர் பிரகாஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவாமிநாதன், கோவில் நில அலுவலர் செந் தில்குமார், செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் கலந்து பேசி, ஒரு வார கால அவகாசம் கொடுத்தனர். சீல் வைக்கபட்ட ஒரு வீட்டின் சீல் அகற்றப்பட்டது. அதன்பின் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். 8:00 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 05:00 மணி வரை நீடித்தது. குமாரபா ளையம் புத்தர் வீதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றை அறநிலையத்துறை அதிகாரிகள் வசம், அதன் நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.
மாணவர்களுக்காக நடைமேம்பாலம்!
தருமபுரி, டிச.18- சட்டக்கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடந்துசெல்லும் வகையில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், மாட் லாம்பட்டி பிரிவு சாலையில் அரசு சட்டக்கல்லூரி அமைந்துள் ளது. இக்கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களை தவிர, கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழி யர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிக்கு செல்லவும், கல்லூரியிலிருந்து வீடுகளுக்கு திரும்பவும் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இச்சாலையை பாதுகாப்பாக கடந்து செல்ல ஏதுவாக தற்போது, சாலையின் இருபுறங்களையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் தடுக்கப் படும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
தருமபுரி, டிச.18- எர்ரனஅள்ளி காப்புக்காடு பகுதியில் ஒற்றை யானை நடமாடி வருவதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த எர்ரனஅள்ளி காப்புக்காடு பகுதியில் ஒற்றை யானை, வனத்தை விட்டு வெளியேறி யுள்ளது. தண்டுக்காரன அள்ளி வாழைத் தோட்டம், காட்டுமாரியம்மன் கோவில், காவேரியப்பன்கொட்டாய், கூசுகல், எருது கூடஅள்ளி, பொப்பிடி, நிலகுட்டஅள்ளி, தீப அள்ளி, பெல்ரம்பட்டி கூட்ரோடு, செங்கோ டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குள் யானை நுழைந்து, பயிர்களை சேதப்ப டுத்தி வருகிறது. யானையை கண்காணித்து வனத்திற்குள் விரட்டும் பணியில் பாலக் கோடு வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்ற னர். வனத்திற்குள் விரட்டப்பட்ட யானை மீண் டும் ஊருக்குள் வர வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம். வயலுக்கு நீர் பாய்ச்ச இரவில் செல்ல வேண்டாம். வீட்டிற்கு உள் ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், அனுமதியின்றி விவசாய நிலங்க ளில் மின்வேலி அமைத்தால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
செம்மறி ஆடுகளின் கண்களில் வீக்கம்; நீர்க்கசிவு
நாமக்கல், டிச.18- பள்ளிபாளையம் ஒன்றியம் வீரப்பம் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செம்மறி ஆடுகளுக்கு கண்களில் வீக்கம் நீர்க் கசிவு புதிய வகை நோயா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் வீரப்பம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு உள்ள னர். இவர்கள் தங்கள் பொருளாதார தேவைக ளுக்காக ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். கூடுதலாக ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்க்கப்படும் ஆடுகளை விவசாயிகள் காலை மாலை நேரங்களில் அரசு புறம்போக்கு ஓடைகள் வாய்க்கால் கரை பகுதி உள்ளிட்ட இடங்க ளுக்கு மேச்சலுக்கு அழைத்துச் செல்கின்ற னர். கடந்த சில தினங்களாக மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் செம்மறி ஆடுகளின் கண் களில் வீக்கம் ஏற்பட்டு நீர் வடிந்த நிலை யில் காணப்பட்டது. ஆடுகள் சண்டை இட்டுக் கொண்டதால் இதுபோல கண்ணில் வீக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என விவசாயிகள் கருதினர். இந் நிலையில் தொடர்ச்சியாக அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டது. கண்களில் வீக் கம் ஏற்பட்டு நீர் வடிவதால், இது தொற்று நோயாக இருக்கலாம் என விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டது. மேலும் நோய் பாதிப் படைந்த ஆடுகள் கண்கள் தெரியாமல் பார்வை குறைபாடு காரணமாக தள்ளாடி படி திசை மாறி சென்று விடுவதாக விவசாயி கள் கவலை தெரிவிக்கின்றனர். பனிக்காலம் துவங்கி உள்ளதால் ஆடுகளுக்கு கடுமை யான சளி தொல்லையும் ஏற்பட்டுள்ள நிலை யில், இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறும் பொழுது பாதிக்கப்பட்ட ஆடுகளை மொத்தமாக அரசு கால்நடை மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லலாம் என்று நினைத் தால், வண்டி வாகன செலவு உள்ளிட் டவை காரணமாக கூடுதலாக செலவுகள் ஏற் படும். எனவே கிராமத்திற்கு வரக்கோரி கால் நடை மருத்துவரை தொடர்பு கொண்டால் மருந்துகள் கைவசம் இல்லை என்றும், தனியார் கடைகளில் வாங்கிக் கொள்ளும் படியும் தெரிகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வீரப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமபுற பகுதிகளில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி புதனன்று வீரப்பம்பாளையம் உள்ளிட்ட பல் வேறு இடங்களுக்கு வருகை தந்த கால்நடைத் துறை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு தடுப்பூசிகளை போட்டனர். தொடர்ந்து செம்மறி ஆடுகளின் கண்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான காரணிகள் கண் டறியப்பட்டு, முழுமையான மருத்துவ சிகிச் சைகள் செம்மறி ஆடுகளுக்கு வழங்கப்படும் என கால்நடை மருத்துவர்கள் தரப்பில் கூறப் பட்டுள்ளது.