2 நாட்களாக வீட்டிலேயே முடங்கிய சடலம்
சேலம், டிச.18- எடப்பாடி அருகே மயானத்திற்கு சட லத்தை கொண்டு செல்ல ஊராட்சி மன்றத் தலைவர் வழி விடாததால், உயிரிழந்த முதி யவரின் உடல் இரண்டு நாட்களாக வீட்டி லேயே வைக்கப்பட்டுள்ள அவலம் ஏற்பட் டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், கோரணம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சின்னப்பையன். வயது மூப்பு காரணமாக இவர் நேற்று உயிரிழந்தார். இவ ரது குடும்பத்தினர் கடந்த மூன்று தலை முறைகளாக ஒரு குறிப்பிட்ட பாதையை மயானத்திற்கு செல்ல பயன்படுத்தி வந் துள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த வழித்தடத்தை கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா செல்வகுமார் மற் றும் அவரது குடும்பத்தினர் மறித்து, சட லத்தை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்த தாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப் பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல், கடந்த இரண்டு நாட்க ளாக உறவினர்கள் கண்ணீருடன் வீட்டி லேயே வைத்துள்ளனர். இது அப்பகுதி மக்க ளிடையே பெரும் சோகத்தையும் ஆவேசத் தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை உடன டியாக தலையிட்டு, தடையின்றி சடலத்தை எடுத்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும், வழித்தடத்தை மறித்த ஊராட்சி மன்றத் தலைவர் குடும்பத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்ட னர். கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் அங்கு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
