மழைநீரை அகற்ற வாலிபர் சங்கம் கோரிக்கை
உடுமலை,டிச.18- உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் பொது மக் கள் மற்றும் இசைப்பள்ளி மாணவர் பாதிக்கும் வகை யில் மழை நீர் தேங்கி உள்ளதை உடனடியாக அகற்ற வேண் டும். நகரில் மழை நீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் புதனன்று பெய்த மழையால் உடுமலை நகராட்சி அலுவலக வளா கத்தில் நீர் தேங்கி உள்ளது. உடுமலையில் பல்வேறு இடங்களில் இதுவே பிரச்சனையாக உள்ளது. மழைநீர் வெளி யேற உரிய திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணமாக உள் ளது. உடுமலை நகராட்சி வளாகத்தில் நகராட்சி அலுவகம் மட் டும் இல்லாமல் மாவட்ட இசைப்பள்ளி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட வேலை நடைபெற்று வருவதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இதே வளாகத் தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் சிறிய மழைக்கே மழை நீர் தேங்கி உள்ளதால், அங்கு வரும் பொதுமக்கள் மறுறம் இசைப்பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்து கிறது. கடந்த மாதம் முதல் பருவ மழை தொடங்கி கடந்த வாரம் வரை மழை பெய்த நிலையில் மழை நீரை வெளியேற்ற நக ராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது முழுமையாக தெரிகிறது. உடனடியாக மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி வளாகத்தில் இருக் கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும். உடுமலை நகர் பகுதி யில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உடுமலை நக ராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
