ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்க நடைமுறைக்கு எதிர்ப்பு
தருமபுரி, டிச.18- ஓய்வுபெறும் நாளில் தற்கா லிக பணிநீக்க நடைமுறையை கண்டித்து, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகள், விசாரணை அல்லர்களின் துறை ரீதியான விசா ரணைகளை தாமதமின்றி அரசு நிர்ணயித்துள்ள காலவரைக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப ஓய்வு பெறும் நாளில் தற்காலிகப் பணிநீக் கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும். அரசாணைப் படி, வட்டார வளர்ச்சி அலுவலர்க ளுக்கு அனுமதிக்கப்பட்ட தனி ஊதி யத்தை 2016க்கு பின்னரும் ஆண்டு ஊதிய உயர்வு அகவிலைப்படி, பதவி உயர்வு ஊதிய நிர்ணயம், ஓய்வூதியப்பயன்கள் கணக்கிடல் ஆகியவற்றுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். சம வேலைக்கு சம ஊதி யம் என்ற கோட்பாட்டின் அடிப்ப டையில் இளநிலை பொறியாளர்க ளுக்கு, உதவிப் பொறியாளர்க ளுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதித்து ஆணையிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத் தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கேசவன் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத் தலைவர் பி.மோகன்ராஜ், முன் னாள் துணைத்தலைவர் கே.ஆர். அப்பாவு, மாவட்டச் செயலாளர் ஜி.நந்த கோபால், பொருளாளர் எஸ்.குணசேகரன், துணைத்தலை வர் என்.ஏ.ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் ச.இளங் குமரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மீன் முருகன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
