tamilnadu

img

எப்.சி.கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்

எப்.சி.கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச.18- எப்.சி.கட்டண உயர்வை திரும் பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஒன்றிய பாஜக அரசு கடந்த  2019 மோட்டார் வாகன திருத்தச் சட் டம் என்ற சட்டத்தை அமல்படுத்தி, அதன் மூலம் நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகங்களை இயக்கக்கூடாது என  அறிவித்தது. கடும் எதிர்ப்பு எழுந்த தால் தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. ஆனால் பீகார் வெற் றிக்கு பின், ஆண்டுக்கு ரூ.600 வாங் கிய எப்.சி கட்டண தொகையை ரூ.9,060 என்ற கட்டணத்தை நிர்ண யித்துள்ளனர். இதுவும் நாடு முழுவதும் உள்ள மோட் டார் வாகன ஓட்டுநர்களை, குறிப் பாக ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தி யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதே போல சட்ட விரோத பைக்  டாக்ஸி இயக்கப்படுகிறது. அந்த  நடைமுறையை தடை செய்ய வேண்டும். கடந்த 2013 ஆண்டு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டது, அதன் பிறகு உயர்த்த வில்லை எனவே மாநில அரசு மீட்டர்  கட்டணம் நிர்ணயம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் சார்பில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கூட்டு கமிட்டித் தலைவர் ஆர். செல்வம் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், செயலா ளர் வணங்காமுடி, சிஐடியு ஆட்டோ  சங்க மாவட்ட பொதுச் செயலாளர்  முத்துக்குமார், பொருளாளர் மைக்கேல் சாமி, ஏடிபி இஸ்மாயில், ஏஐடியுசி வெங்கடாச்சலம், எம்எல்எப் ஷாஜகான் உள்ளிட்ட பல்வேறு ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று உரை யாற்றினர். இதில், ஏராளமான ஆட்டோ  தொழிலாளர்கள் பங்கேற்று  கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.