articles

img

தாவரத்தில் இருந்து தாய்ப்பாலுக்கு இணையான பால் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

தாவரத்தில் இருந்து தாய்ப்பாலுக்கு இணையான பால் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மனித தாய்ப்பாலில் உள்ளடக்கப் பொருட்களாக இருக்கும் சத்துகளை புகையிலை குடும்பத்தைச் சேர்ர்ந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு தாவரத்தில் இருந்து விஞ்ஞானிகள் பிரித்தெடுத்துள்ளனர். தாய்ப்பாலின் ஆரோக்கியப் பயன்களைத் தரும் அதே போன்ற பால் பொருட்களை உருவாக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்று நம்பப்படுகிறது. தாய்ப்பால் சர்க்கரைகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட நிக்கோ ஷியானா பெந்தேமியானா (Nicotiana benthamiana) என்ற தாவரம் சிசுவின் குடல்  வாழ் பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உத வும் தாய்ப்பால் ஆலிகோசர்க்கரைகள் ஹெச் எம் ஓ (human milk oligosaccharides (HMOs)) என்ற சிக்கலான கூட்டுச் சர்க்கரைகளை உற்பத்தி செய்கிறது. “இந்த ஒற்றைத் தாவரத்தில் இருந்து எல்லா மனித பால் ஆலிகோசர்க்கரைகளையும் பெற முடியும் என்று கற்பனை செய்தால் பிறகு அதில் இருந்து இந்த சர்க்கரையைப் பெற்று  நேரடியாக சிசுக்களுக்கான பால் பொருட்களு டன் சேர்க்கலாம். ஆனால் இதை நடை முறைப்படுத்துவதில் சவால்கள் உள்ளன” என்று ஆய்வின் தலைவரும் கலிபோர்னியா பெர்க்லி (Berkeley) பல்கலைக்கழக தாவர நுண்ணுயிரியலாளருமான டாக்டர் பாட்ரிக் ஷி (Dr Patrick Shih) கூறுகிறார். தாய்ப்பால் இருநூறிற்கும் அதிகமான மனித பால் ஆலிகோசர்க்கரைகளைக் கொண்டுள்ளது. இவை மனித பாலில் அதிகமான திடநிலையில் மூன்றாவதாக உள்ள பொருட்கள் கூட்டுச் சர்க்கரை அல்லது  குறை சர்க்கரைகள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றைச் சர்க்கரைகள் இணைந்து உருவாகும் சிறிய கார்போஹைடிரேட்கள். இவை பால் அருந்தும் சிசுக்களால் செரிக்க  இயலாதவை. பாக்டீரியாக்களுக்கு உண வாகப் பயன்படுபவை. இவை பிறந்த முதல் வாரங்களில் சிசுவின்  குடல் வாழ் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. குடல் வாழ் பாக்டீரியாக்களை மேம்படுத்  தும்போது மனித பால் ஆலிகோசர்க்கரை கள் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் குறை கின்றன. மற்ற பயன்களும் ஏற்படுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈ கோலி (E coli) பாக்டீரியாவில் இருந்து பெரிய நிறு வனங்கள் இந்த ஆலிகோசர்க்கரைகளை சிறிய  அளவில் தயாரித்து சிசுக்களுக்கான பால்  பொருட்களுடன் ஒருங்கிணைக்கத் தொடங்கி யுள்ளன. ஆனால் இந்த முறையில் பல ஹெச் எம் ஓக்களை தயாரிப்பது, உற்பத்தியின்போது உப பொருட்களாக உருவாகும் நச்சுகளில் இருந்து பயன் தரும் மூலக்கூறுகளைப் பிரிப்பது கடினம். இந்த செயல்முறை அதிக செலவாகக்கூடியது. அதனால் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே இவற்றை சிசு பால் உணவுகளுடன் சேர்க்கின்றனர். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை இயற்கை உணவு (Nature Food) என்ற இதழில் வெளி வந்துள்ளது. மருந்து தயாரிப்பில் விஞ்ஞானிகள் தாவரத்தின் ஒற்றைச் சர்க்கரைகள் (Monosaccharides) என்னும் எளிய சர்க்கரைகளை சர்க்கரை உற்பத்தி செய்யும் தாவரத்தின் செயல்முறையை மீள் நிரல் செய்து பரந்து விரிந்த கிளைகளுடன் கூடிய சங்கிலிகளைக் கொண்ட கூட்டுச் சர்க்கரைகளாக மாற்றினர். குறிப்பிட்ட நொதிகளை உருவாக்கும் வகையில் வடிவ மைக்கப்பட்ட மரபணுக்களை உட்செலுத்தி னர். இந்த நொதிகள், அடிப்படை சர்க்கரை களை ஒன்றுசேர்த்து பலதரப்பட்ட மனித பால்  ஆலியோசர்க்கரைகளை உருவாக்க அவசி யமானது. இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் பதினோரு ஹெச் எம் ஓக்களை உருவாக்கின. இதன் மூலம் ஹெச் எம் ஓக்களின் மூன்று முக்கிய குழுக்கள் தயா ரிக்கப்பட்டன. ஒரு ஒற்றைத் தாவரத்தில் இருந்து இவை தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை. சிசுக்களுக்கு தொற்றுகள் குறைவாக ஏற்பட உதவும் லேக்ட்டோ என் ஃபுயூக்கோ பெண்டோஸ்-எல் என் எஃப் பி1 (LNFP1) என்ற கூட்டுப் பொருளும் தயா ரிக்கப்பட்டவற்றில் அடங்கும். இது மனித  பாலில் உள்ள ஆலிகோ சர்க்கரை வகைகளில் ஒன்று. இது தாய்ப் பாலில் காணப்படும் சிக்க லான ஒரு கூட்டுச் சர்க்கரை. இதில் எல் என் எஃப், பி1, எல் என் எஃப்பி i எல் என் எஃப் பி வி என்று பல்வேறு வகைகள் உள்ளன. இவை முக்கிய ஆரோக்கியப் பயன்களைத் தருவதால் குழந்தைகளுக்கான முன் மாதிரி பால் பொருட்கள், மற்ற உணவுகளில் பயன்படுகின்றன. இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாக, வயது வந்த வர்களுக்கு பால் அல்லாத அதிக சத்துகள் உள்ள பொருளாக கொடுக்க பயன்படும். ஹெச் எம் ஓவை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளை உருவாக்க மற்ற நிறு வனங்கள் முயன்றுவருகின்றன. இந்த கண்டு பிடிப்பு குழந்தைகளுக்கு தாவர அடிப்படை யிலான பால் பொருட்களை தயாரிக்கவும், வயது வந்தவர்களுக்கு பல்வேறு ஆரோக்கி யமான உணவுகளை உருவாக்கவும் உதவும்.  ஆரோக்கியமான எண்ணைகள், கொழுப்பு அமிலங்களை தயாரிக்க ஏற்கனவே மரபணு  மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் பயன் படுத்தப்பட்டுவருகின்றன. மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த உத வும் தாவரங்களை வடிவமைக்க இந்த கண்டு பிடிப்பு வருங்காலத்தில் நமக்கு உதவும் என்று  விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.