articles

“மனிதநேயத்திற்காக ஒன்றுபட்டு கண்டன இயக்கத்தை நாடெங்கும் பரப்புவோம்!” - கி.வீரமணி

“மனிதநேயத்திற்காக ஒன்றுபட்டு கண்டன இயக்கத்தை நாடெங்கும் பரப்புவோம்!” 

காசா இனப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பதை கண்டன இயக்கம் என மாற்றினோம். ஒரு போராட்டத்தோடு முடியக்கூடாது, எல்லா இடங்களிலும் பரவ வேண்டும் என்பதால் முதலமைச்சர் பெயரை மாற்றினார். இதன் எதிரொலி, செயல்திட்டம், தேவை எல்லா இடங்களிலும் பரவும். இஸ்ரேல் 66 ஆயிரம் பாலஸ்தீன மக்களைக் கொன்றுள்ளது. இனப்படுகொலையைச் செய்யும் இஸ்ரேலையும் அதன் பிரதமர் நேதன்யாகுவையும் தண்டிக்க வேண்டாமா? மதங்கள் மக்களைப் பிரிக்கலாம். ஆனால், மனங்களால் ஒன்றுபட்டு நிற்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு இருப்போம். இந்த எதிர்ப்பு இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வோம். எங்கெல்லாம் மனிதநேயத்திற்கு இடமில்லையோ அத்தகையவர்களுக்கு ஆதரவாக இருப்போம். மாநில சட்டமன்றத்தில் மட்டும் தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். தமிழ்நாட்டிலிருந்து எது கிளம்பினாலும் அது வெற்றி பெறும். கைகோர்த்து வாருங்கள், கண்டன இயக்கமாகக் கட்டிக்கொண்டு செல்வோம்.