articles

img

“தமிழ்ச் சமூகத்தை மேலும் பண்படுத்த வாசிப்பை மேம்படுத்துவோம்”

“தமிழ்ச் சமூகத்தை மேலும் பண்படுத்த வாசிப்பை மேம்படுத்துவோம்”

சென்னை பல்கலைக் கழகப் பவள விழா கலையரங்கில் சனிக்கிழமையன்று (நவ. 22) ராகுல் சாங்கிருத்யாயன் எழுதி, அ. மங்கை தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்ப கம் வெளியிட்டுள்ள “வால்காவி லிருந்து கங்கை வரை” என்ற நூலை வெளியிட்டு அவர் பேசினார். முதல் பிரதிகளை வாலண்டினா மற்றும் தென்னரசு ஆகியோர் பெற்றுக்  கொண்டனர். இந்த நிகழ்வில் சென்னை  பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேரா.கோ. பழனி, பேரா சிரியர் வீ. அரசு, கவிஞர் தம்பி, மொழி பெயர்ப்பாளர் மங்கை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்  இலக்கியத்துறை மற்றும் சீர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சண்முகம், ராகுல் சாங்கிருத்யாயன் இந்தியாவின் மிகச் சிறந்த சிந்தனை யாளர், மார்க்சியவாதி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவ ராகச் செயல்பட்டவர், சிபிஎம் உறுப்பின ராக மார்க்சியத்தைப் பரப்புவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் என்று புகழாரம் சூட்டி னார். இந்த நூல் முதலில் 1942 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்தது. இந்த  நூலைப் படித்த பிறகு வரலாறு எவ்வ ளவு சுவையானது என்பதை அறிய முடி வதாகவும் அவர் குறிப்பிட்டார். தாய் வழிச் சமூகம் தொடங்கி 1942 உலகப் போர் வரை உள்ள வரலாறுகளை, குறிப் பாக மனிதகுல வரலாறு, அறிவியல் முன்னேற்றங்கள், நடைபெற்ற சம்பவங்கள் என அனைத்தையும் மிகச்  சுருக்கமாக, சாதாரண மக்கள் எளிமையாக அறிந்து கொள்வதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலைப் படிப்பதன் மூலம் இந்தியா, உலக வரலாற்றை விரிவாக அறிந்து கொள்வதற்கான தூண்டுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சமூகத்தில் படிப்பதற்கு ஆர்வம் இருந்தாலும் எல்லோராலும் பெருந்தொகை கொடுத்து நூலை வாங்க முடியவில்லை என்றும், இப்போது நூலகம், நூல் வெளியீடு, வாசிப்பு, புத்தகக் கண்காட்சி ஆகி யவை சென்னை மட்டுமல்லாமல் தமிழ் நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் நடப்பதாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடும் காலத்தில் நூல்கள் விற்பனை, வாசிப்பு என்பது அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும், வாசிப்பதன் மூலமாகத்தான் தமிழ்ச் சமூகத்தை மேலும் பண்படையச் செய்ய முடியும் என்றும் அவர் வலியுறுத்தி னார். ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய சட்ட நடவடிக்கையைக் கண்டித்துப் பேசிய அவர், இப்போது ஒன்றிய பாஜக அரசு உழைப்புச் சுரண்டலைச் சட்டப் பூர்வமாக எப்படிச் சுரண்டலாம் என்ப தற்குப் புதிய சட்டம் நிறைவேற்றி, வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப் படும் என்ற ஆணையை வெளியிட்டுள் ளது என்றார். இந்தியத் தொழிலாளி வர்க்கம் 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களைத் தகர்த்தெறிந்து, அவற்றை நான்கு தொகுப்புகளாக மாற்றுகிறோம் என்ற பெயரில் ஏராளமான சட்டங்களை அழித் தொழித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றிய பா.ஜ.க. அரசு  சட்டத்தை இயற்றியது. ஆனால், இந்தி யத் தொழிலாளி வர்க்கத்தின் வலு மிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் காரண மாகவே, இவ்வளவு காலம் இந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படா மல் இருந்தன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.