articles

img

தேன் தடவிய விஷத்தை முழு விஷமாக மாற்றும் தொழிலாளர் சட்டத் தொகுப்பு - எஸ்.கண்ணன்

தேன் தடவிய விஷத்தை முழு விஷமாக மாற்றும் தொழிலாளர் சட்டத் தொகுப்பு

இந்திய தொழிலாளர் வர்க்கம், மத்தியத் தொழிற் ்சங்கங்கள் மூலம், ஜூலை 9 அன்று நடத்த வுள்ள பொது வேலைநிறுத்தம், மோடி ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் 9ஆவது வேலைநிறுத்தம் ஆகும். வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கும் பெரும் இழப் பைத் தருகிறது. இருந்தபோதும், வேலைநிறுத்தம் என்ற போர் வடிவம், அரசை மட்டுமல்ல, விழிப்புணர்வு அற்ற கணிசமான தொழிலாளி வர்க்கத்திற்கும் போராடும் வலிமையைத் தருகிறது.

 பாஜகவின் முதலாளித்துவ பாசம்

பாஜக ஆட்சி தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி, திரித்து -  4 தொகுப்பாக வெளியிட்டுள்ளது. எல்லா வகை யிலும், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளைப் பாது காக்கும் நோக்கம் கொண்ட தொகுப்புகள் இவை.  கடந்த 2002இல் பாஜக ஆட்சி வாஜ்பாய் தலைமை யில் இருந்தபோதே, இதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன. இந்திய தொழிலாளர் ஆணையத்தை (ILC) பலவீனப்படுத்தும் வகையில், இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் (SNLC) அமைத்தது. இது  2019 மற்றும் 2020இல் முன்மொழியப்பட்ட 4 சட்டத் தொ குப்புகளுக்கு, 2002லேயே அச்சாரம் போட்டது. அன்று  ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மேற்கண்ட முயற்சியை நிறுத்தி வைத்தது.

உழைப்புச் சுரண்டலைத்  தீவிரப்படுத்தும் மோடி அரசு

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இதுவரை இல்லாத அளவிற்கு சலுகைகளை கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு வழங்கியுள்ளது. நேரடியாக வழங்கும் வரிச் சலுகை, வங்கிக் கடன் தள்ளுபடி ஆகியவற்று டன், மோடி அரசு கார்ப்பரேட் மூலதனம் பெருகுவ தற்கு தேவையான உழைப்புச் சுரண்டலை உத்தரவா தப்படுத்தவும் செய்கிறது. இத்தகைய உழைப்புச் சுரண்டலுக்கு துணை செய்யும் வகையில் மோடி தலை மையிலான பாஜக ஆட்சி கொண்டு வந்துள்ள தொழி லாளர் சட்டத் தொகுப்பு, மூலதனத்தை ஊதிப் பெருக் கும் வாய்ப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சம்பள விதிமுறைகளில் மாற்றம்

சம்பளப் பட்டுவாடா சட்டத்தில் பாதுகாப்பு குறைப்பு:  தொழிலாளர்களுக்கு இருந்த பாதுகாப்பு, எண்ணிக் கை அடிப்படையில் குறைவான எண்ணிக்கை கொண் டவருக்கான பாதுகாப்பு வரம்பை நீக்கியுள்ளது. உதார ணத்திற்கு, 10க்கும் குறைவான தொழிலாளர் இருந்தா லும் (மின் உதவியுடன் இயங்கும் நிறுவனம்) பாதுகாப்பு இருந்தது. தற்போது இது தளர்த்தப்பட்டுள்ளது. வேலை நேர அதிகரிப்பு: வேலை நேரம் 8 மணிநேரம் என்றும், வேலை நாள் உணவு உள்ளிட்டு 9 மணிநேரம் என்றும் இருந்தது. இதை 12 முதல் 16 மணிநேரம் வரை தளர்த்தும் பணியை செய்துள்ளது.

போனஸ் மற்றும் தணிக்கை உரிமை பறிப்பு

போனஸ் சட்டம் 1965, பிரிவு 23(2) மூலம், தொழிற் சங்கம் அல்லது தொழிலாளர், வேலை அளிக்கும் முத லாளியின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு மற்றும் இருப்பு நிலை ஆகியவற்றை சட்டப்பூர்வமாகக் கேட்டுப் பெற முடியும். ஆனால் புதிய சட்டத் தொகுப்பில், வேலை அளிக் கும் முதலாளி ஒப்புக்கொண்டால் மட்டுமே தர முடியும் என திருத்தப்பட்டுள்ளது. அரசுக்கு தாக்கல் செய்யும் வரவு செலவு விவரங்களைக் கூட இனி பெற முடியாது. முதலாளிகளின் ரகசியம் காக்கும் பொறுப்பை அதிக மாகவே பாஜக ஆட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொ ழிற்சங்கத்தின் கூட்டுப் பேர வலிமையை மட்டுப் படுத்தும் செயல் ஆகும்.

தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் ஆரோக்கியம் '

தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழி லாளர் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சட்டத் தொகுப்பும், முதலாளிகளுக்கான கொள்ளை லாபத்தை உத்தர வாதம் செய்யக்கூடியதாக உள்ளது. காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கான எண்ணிக் கையை, குறைந்தபட்சம் 50 என தீர்மானித்துள்ளது. தற்போது தொழிற்சாலைகள் இயக்குநரகத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறும் காண்ட் ராக்ட் விவரங்கள் பெரும்பாலும் 20, 25, 30, 35 என்ற தொழிலாளர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. இனி இவ்வாறு பெறும் தகவல்களைக் கொண்டு தொழிற் சங்கம் புகார் அளிக்க முடியாது. காண்ட்ராக்ட் தொழிலா ளரை சுரண்டலில் இருந்து பாதுகாக்க முடியாது.

தொழில்துறை உறவுகள் சட்டம்

தொழில்துறை உறவுகள் குறித்த சட்டத்திலும், இதுவரை இருந்துவரும் குறைந்தபட்ச பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் காண்ட் ராக்ட் தாரரும் முதலாளி என அழைக்கப்படுவார். இது முதன்மை பணி வழங்குவோரிடம் தொழிற்தாவா எழுப்பிப் பெறும் உரிமையைத் தடுக்கும் நோக்கம் கொண்ட குழப்பமான வரையறை ஆகும். ஒரு நிறுவனத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளர் விபத்தை எதிர்கொள்ளும் போது, முதன்மை பணி வழங்குவோ ருக்கு நிவாரணம் அளிக்கும் கடமை கட்டாயம் உண்டு.  அவரை நிரந்தரத் தொழிலாளராக மாற்றிட வேண்டும் என வலியுறுத்த முடியும். இனி இது என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

நிறுவன மூடல் விதிமுறைகள்

100 மற்றும் அதற்கு மேல் உள்ள தொழிலாளர்க ளைக் கொண்ட நிறுவனங்கள் மூட உத்தேசிக்கும் போது, தொழிலாளர் துறையில் ஒப்புதல் பெற வேண்டும். அதன் வரம்பு தற்போது 300 மற்றும் அதற்கு மேல் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பொருந்தும் என வரையறை செய்யப்பட்டுள்ளது. நவீன தாராளமய பொருளாதார கொள்கை அம லாக்கத்திற்குப் பின், 90 சதவீத ஆலைகள் 300க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டதாக மாறி வருகின்றன. ஒரே நிறுவனம் பல்வேறு பெயர்களைக் கொண்ட சிறு, குறு நிறுவனங்களாக உருமாற்றம் பெற்று வருகிறது. இந்நிலையில், மோடி ஆட்சியில் மேற்கண்ட சட்டத் திருத்தம், அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் 90 சதவீதம் பேரின் வேலையை நிரந்தரமற்றதாக மாற்றும் சூழலை உருவாக்கியுள்ளது.

தொழிற்சங்க உரிமை பறிப்பு

நிதி நிறுவனங்களாக உள்ள காப்பீடு மற்றும் வங்கி ஆகியவற்றில் செயல்படும் தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமையை நிராகரிக்கும் விதமாக சட்டத் தொகுப்பு உள்ளது.  10 சதவீத தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ள தொழிற்சங்கங்கள் பெற்றுவந்த உரிமைகளைக் கைவிட்டு, 50 சதவீதம் மற்றும் அதற்கு மேலான வாக்கு களைப் பெறும் தொழிற்சங்கம் மட்டுமே கூட்டுப்பேர உரிமையை அனுபவிக்க முடியும் என்பது, தொழிலா ளர்களின் சங்கம் சேரும் உரிமை மற்றும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நிராகரிக்கும் செயல் ஆகும்.

நிராகரிக்கப்படும் சமூக பாதுகாப்பு

அமைப்பு சாரா தொழிலாளர்களே 92 சதவீதம் அளவில் உள்ளனர். அவர்களின் சமூக பாதுகாப்பு நட வடிக்கைகள் குறித்து இந்த சட்டத் தொகுப்பு பேசவே இல்லை. மற்றொரு புறம், தற்போது ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தனக்குத்தானே சேமித்துக் கொண்டு, ஓய்வுக் காலத்தில் வாழ்ந்திட வேண்டும் என்ற நிலையை கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், வாஜ்பாய்அர சாங்கம் அமலாக்கியது. வருங்கால வைப்பு நிதி(பிரா விடண்ட்பண்ட்) மூலம் சேமிக்கும் ஆலைத்தொழிலாள ருக்கும், வாஜ்பாய் அரசின் கொள்கை பாதிப்பை ஏற்படுத்தியது.

காஸ்ட் டு தி கம்பெனி கொள்கை : எப்போதும், நிறு வனங்களின் மனிதவளத் துறையினர் “காஸ்ட் டு தி கம் பெனி” என்ற வார்த்தையை உச்சரிக்கின்றனர். நிறுவ னத்திற்கு ஆகும் செலவு எல்லாவற்றையும் தொழி லாளர் தலையில் சுமத்தும் நோக்கம் கொண்ட சொல் லாடல்கள், தொழிலாளருக்குச் செய்யும் சட்டப்பூர்வ மான செலவின் அளவைக் குறைக்கக் கூடியது. இவை சமூகப் பாதுகாப்பு பறிப்பே தவிர வேறில்லை

தேன் தடவிய விஷம்

மேலே விவாதித்த திருத்தங்கள், நிரந்தரத் தன்மை யற்ற வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கு உதவி செய்தன. தற்போது அதை மேலும் உறுதி செய்யும்  தன்மை கொண்டதாக, இப்போது வேலையில் இருப்ப வருக்கு ஓய்வூதியம் இல்லை அல்லது பணிக்கொடை யில் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.  5 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே பணிக் கொடை என்பது, இனி ஓராண்டு பணிபுரிந்தால் கூட கிடைக்கும் என்ற “தேன் தடவிய விஷம்”, வேலை நிரந்த ரம் இல்லை என்பதைச் சொல்கிறது.

கிக் தொழிலாளர்களின் நிலை

தற்போது யார் முதலாளி என்பதை அறியாமல் மொ பைல் போன் செயலி மூலமாகவே வேலை செய்யும் கிக் தொழிலாளர்களுக்கான (செயலி வழித் தொழிலாளர் கள்) சமூகப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை ஒன்றிய அரசு அவ்வப்போது வடிவமைத்துக் கொள்ள லாம் என்ற வார்த்தை ஜாலங்கள் பெரும் ஏமாற்றம் தரு பவை ஆகும். இது சமூகப் பாதுகாப்பற்ற வேலை வாய்ப்பை தீவிரமாக அதிகப்படுத்தும் நோக்கம் கொண்டது ஆகும்.  

கிராமப்புற வேலை வாய்ப்புச் சட்டம்

வேலையில் இருப்பவருக்கே சமூகப் பாதுகாப்பு இல்லை எனும்போது, வேலையில்லாக் கால நிவார ணம் என்ற கோரிக்கையும் நெருக்கடியை சந்திக்கக் கூடியதாக மாறும். இதன் மற்றொரு வடிவம்தான் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை சட்டம் சிதைக்கப்படுவது.  இதற்கான நிதி படிப்படியாக வெட்டப் படுவதன் மூலம், கோடிக்கணக்கில் கிராமப்புற தொழி லாளர்கள் இந்த வேலை உறுதிச் சட்டத்தின் பலன்க ளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.  கிராமப்புற விவசாயத்தில் ஏற்படும் பாதிப்பு ஒரு  கோடிக்கும் அதிகமானவரைத் தற்கொலையை நோக்கித் தள்ளியுள்ளதாக அரசு விவரங்கள் கூறு கின்றன.இது, புலம்பெயர் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்கிறது. வேலைவாய்ப்பு சந்தையில் பெருகிவரும் தொழிலாளர் எண்ணிக்கையும், வளர்ந்து வரும் நவீன இயந்திரங்களின் எண்ணிக்கையும் முதலா ளித்துவத்திற்கு கொண்டாட்டமாக உள்ளது. இந்த பின்னணியில் சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு மிக அவசியமானதாகும்.  

நாளை வேலை நிறுத்தம்

இவை அனைத்தையும் தொழிலாளர் மற்றும் சமூகத்திற்கு உணர்த்தவும், அரசை நிர்பந்திக்கவுமே ஜூலை 9 வேலைநிறுத்தம். அதை மாபெரும் வெற்றி பெறச் செய்வது தொழிலாளர்களுக்கு அடிப்படைத் தேவை. சமூகத்திற்கு ஆகப்பெரிய கடமை. எனவே தான் இடதுசாரிகளும், ஜனநாயக எண்ணம் கொண்ட அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கின்றன. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகள், வாலிபர், மாதர் மற்றும் மாணவர் அமைப்புகள் நேரடியாகக் களம் காண அழைப்பு விடுத்துள்ளன. நாட்டு மக்களின் நலன் காக்கும் இந்த பொது வேலை நிறுத்தத்தை மகத்தான வெற்றி பெறச் செய்வோம்.