articles

img

கொலு பொம்மைகள் - பெரணமல்லூர் சேகரன்

கொலு பொம்மைகள் -  பெரணமல்லூர் சேகரன்

வீட்டின் கூடத்துத் தரையில் அமர்ந்தபடி மேசையின் மீதிருந்த காந்தி பொம்மையைப் பார்த்தபடியே இருந்தான் சந்துரு. நம் ஊரில் தீபாவளி, பொங்கல் பண்டி கைகளைக் கொண்டாடுவதைப் போல  நவராத்திரி கொலுவைக் கொண்டாடு வதில்லையே. விநாயகர் கோயில், எட்டி யம்மன் கோயில், முருகர் கோயில்களில் நவராத்திரி கொண்டாடாமல் ஜெயின் கோயிலில் மட்டும் கொண்டாடுகிறார்களே! சில குறிப்பிட்ட வீடுகளில் மட்டும் கொலு வைத்து தினமும் சொந்தக்காரர்களும் நண்பர்களும் பார்த்து வருகிறார்களே! நம்  தெருவில் எந்த வீட்டிலும் இந்த ஏற்பாடு இல்லையே” இப்படியாக மனதில் எழுந்த கேள்வி களுக்கு விடை காண சிந்தித்தபடி கடி காரத்தைப் பார்த்தான் சந்துரு. கடைக்குப்  போன அம்மா, அப்பாவை இன்னமும் வரக்  காணோமே என்று முணுமுணுத்தபடி எழுந்து தெருப்பக்கம் போனான். அவ னது முகம் மலர்ந்தது. அம்மாவும் அப்பா வும் ஸ்கூட்டியில் வருவது தெருவில் தெரிந்தது. கட்டைப்பை நிறைய ஏதோ வாங்கி வருவது போலத் தெரிந்தது. புன்முறுவல் பூத்தான் சந்துரு. சந்துருவின் அருகில் நின்றது ஸ்கூட்டி. வண்டியை விட்டு இறங்கிய சந்துருவின் அம்மா மாலா புன்முறுவலுடன் சந்துரு வின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்  குள் செல்ல அழைத்தாள். அவன் பார்வை யெல்லாம் ஸ்கூட்டியின் முன்புறம் இடை வெளியில் இருந்த கட்டைப்பையில் நிலை  குத்தியது. சந்துருவின் அப்பா முரளி புனுமுறுவலு டன் வண்டியை ஸ்டேண்ட் போட்டு கட் டைப்பையுடன் சந்துருவை நெருங்கினார். இப்போது சந்துரு அம்மாவின் கையிலி ருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு  அப்பாவின் கையிலிருந்த கட்டைப்பையில் ஒரு கையை வைத்தபடி பார்வையால் ஊடுருவினான். வண்ண வண்ண பொம்மைகள் காகிதத்தால் சுற்றப்பட்டு இருந்தன. கூடத்துக்கு வந்தனர் மூவரும். கட்டைப்பையைக் கூடத்தில் வைத்தார் முரளி. மாலா சமையற்கட்டுக்குச் சென்ற படி,”சந்துரு கண்ணா, பணமில்லாத இந்த நேரத்துல உனக்காக பணம் கடன்  வாங்கி அப்பா பொம்மைகளை வாங்கி  வந்திருக்காரு. பொம்மைகளை உடைக் காம பத்திரமாக் கையாளணும்” என்றாள். “சரிம்மா” என்ற சந்துருவின் பார்வை அவனது அப்பா காகிதத்தால் சுற்றப்பட்ட பொம்மைகளை எடுத்து வைப்பதில் நங்கூர மிட்டது. வரிசையாக வைக்கப்பட்ட பொம்மை களை அப்பாவே ஒவ்வொன்றாக எடுத்து  அதை மூடியிருந்த காகிதத்தை அகற்றி னார். இப்போது ஒன்பது பொம்மைகள் வரிசையாய் நின்றுகொண்டிருந்தன. அப்பாவின் பார்வை சந்துருவின் மீது விழுந்  தது. சந்துரு ஒவ்வொன்றையும் கையால் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது சந்துருவின் அம்மா மாலா  இரண்டு தம்ளர்களைக் கொண்டு வந்து இரு வரிடமும் கொடுத்தாள். சந்துருவுக்குப் பால். முரளிக்குத் தேநீர். இருவருமே தம்ள ரைத் தரையில் வைத்தனர். “அப்பா, ஒன்பது படங்கள்ள ஒன்னுக் கூட சாமி படமே இல்லையே.” என்றான் சந்துரு. “நீதானப்பா சொன்ன, நம்ம வீட்லயும்  கொலு வைக்கலாம். ஆனா வித்தியாச மான்னு. அதான்” என்றார் முரளி. அவளுக்கான தேநீர்த் தம்ளருடன்  தரையில் அமர்ந்தபடி,” வித்தியாசமா னதுன்னா இப்படியா? மருந்துக்குக் கூட சாமி படம் இல்லையே” என்றாள் மாலா. “எல்லார் வீட்லயும் சாமி படங்கள்  மட்டும்தான் வைக்கிறாங்க. நாம வித்தி யாசமா வைக்கலாம்னு சொன்னான்ல சந்துரு. அதனால்தான் நாட்டுக்காக உழைத்தவங்க பொம்மைகளா வாங்கினேன்” என்றார் முரளி. “நேரு, நேதாஜி, பெரியார், அம்பேத்கார், காமராஜர், பாரதியார்” என்றபடி ஒவ்வொன்றாக அடையாளம் காட்டிய சந்துரு,”மற்ற பொம்மைகள் யாருன்னு தெரியலையேப்பா”என்றபடி பால் குடிக்க ஆரம்பித்தான் சந்துரு. “அப்படிக் கேள். பகத்சிங், மார்க்ஸ், லெனின்”என்று முரளி சொல்லவும்,”ஏங்க காந்தி பொம்மை?”என்றாள் மாலா. “அதான் நம்ம வீட்லயே இருக்கே” என்றபடி மேசையின் மீதிருந்த காந்தி  பொம்மையை எடுத்து அந்த பொம்மை களோடு சேர்த்து வைத்தார் முரளி. “நாளைக்கு நம்ம வீட்ல கொலு‌. நீ  தாராளமா உன்னோட நண்பர்கள வீட்டுக்கு  வரச்சொல்லு. உனக்குக் தெரிந்த தலை வர்களைப் பத்தி பாட்டாவோ இல்ல பேச்  சாவோ சொல்லு. உனக்குத் தெரியாத தலை வர்களப் பத்தி நான் பேசுறேன். சரியா?” என்று சந்துருவைப் பார்த்து முரளி சொன்  னார். “சரிப்பா. பகத்சிங், மார்க்ஸ், லெனின்  பத்தி நீங்க சொல்லுங்க. மத்தவங்க  பத்தி நான் சொல்றேன். சரியாப்பா” என்றான் சந்துரு முகம் மலர்ந்தபடி.”பத்து பொம்மைகள்ள பெண் தலைவர்கள் யாருமே இல்லையே” என்றாள் முரளி யைப் பார்த்தபடி மாலா. பருகிய தேநீர்த் தம்ளரைத் தரையில் வைத்தபடி,”சாரி மாலா. இதக் கடையிலயே ஞாபகப்படுத்தி யிருக்கலாமில்ல.” “ஞாபகம் வந்தது. நீங்களாவே வாங்கு வீங்கன்னு பார்த்தேன். வாங்கல. அதே  நேரத்துல உங்ககிட்ட பணமும் குறை வாகத்தான் இருக்குதுன்னு சொன்னீங்க. அதனால ஏற்கெனவே எனக்கு வந்த மேரேஜ்  கிஃப்ட் ஒன்னு அப்படியே பெட்டியில் இருக்கிறது ஞாபகத்துக்கு வந்தது. அதைப் பயன்படுத்திக்கலாம்னு நினைச் சேன்” என்றபடி அறைக்குள் சென்றவள் அழகிய பொம்மையுடன் வந்தாள். “ஐ..கேப்டன் லட்சுமி”என்றபடி புருவங்களை உயர்த்தினார் முரளி. “அது யாருப்பா?” என்றான் சந்துரு. “நேதாஜி பத்தி தெரிஞ்சி வச்சிருக்க இல்லியா. அவர் அமைச்ச பெண்கள் படையின் கேப்டன் தான் கேப்டன் லட்சுமி  செகால்” என்று முரளி சொல்லவும்,” அவரைப் பற்றி நானே நாளைக்கிக் கொலு வில் பேசுறேன்” என்றபடி அந்த பொம்மை யையும் மற்ற பொம்மைகளோடு சேர்த்து வைத்தாள் மாலா. இப்போது மூவரின் முகங்  களும் மலர்ந்தன.