articles

img

பொறுப்பற்ற அரசியலின் உச்சகட்டமே கரூர் துயரம் - கே.பாலகிருஷ்ணன்

பொறுப்பற்ற அரசியலின்  உச்சகட்டமே கரூர் துயரம் 

கரூரில் தவெக நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் விவரிக்க முடியாத கொடூர மான சம்பவம் நடந்தேறியுள்ளது. மக்கள் நெரிசலில் சிக்கி 11 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் மரணமடைந்துள்ளனர். 100க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்து தொடர் சிகிச்சையில் உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பல ஆயிரம் பேர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் ஆறுதல்

சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்கள் கே. பால கிருஷ்ணன், கே. சாமுவேல்ராஜ், ஆர். சச்சிதானந்தம் எம்.பி., எம். சின்னதுரை எம்.எல்.ஏ., எம். ஜெயசீலன், எஸ்.பாலா, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்ட  மாவட்டத் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும், அவர்களோடு உடனிருப்பவர்களும் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் குழம்பிப் போயிருந்தனர். காலையில் தாயின் கைபிடித்து நிகழ்ச்சிக்கு வந்த பச்சிளங்குழந்தைகள் மாலை யில் தாயின் கையில் பிணமாகத் திரும்பும் காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது. தங்களது அபிமான திரையுலகத் தலைவரைக் காண வந்தவர்கள் பிண மாக விழுந்து கிடப்பதும், அவர்களைச் சுற்றி உறவி னர்களும் நண்பர்களும் கதறி அழும் காட்சியும் அனை வரது இதயங்களையும் நொறுக்கியுள்ளது. 40 உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடைசி யாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 21 வயதான இளம்பெண் திருமணமாகி சில மாதங்களே ஆன அவரது பிணத்தைக் கட்டிப்பிடித்து கணவனும் உற வினர்களும் அழுத காட்சி பார்ப்பவர் நெஞ்சைப் பிழிந்துவிட்டது.

முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதம்

தமிழ்நாட்டில் வரலாறு நெடுகிலும் எண்ணற்ற அரசியல் நிகழ்வுகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று பல லட்சம் பேர் கலந்து கொண்ட நிலை யில் இதுபோன்ற அசம்பாவிதம் இதற்கு முன்னால் எப்போதும் ஏற்பட்டதில்லை. ஆனால், தவெக மாநாடு களில், பரப்புரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுவதும், படுகாயமடைவ தும், அதன் உச்சக்கட்டமாக கரூரில் 41 பேர் மரண மடைந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.  இதற்கான உண்மையான காரணங்களை ஆய்வு செய்வதும், இதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவ டிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானதாகும்.

அடிப்படை வசதிகள் இன்மையே முக்கியக் காரணம்

கரூரில் பகல் 12 மணிக்கு விஜய் பேசுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று காலை 10 மணி முதலே மக்கள் சம்பவ இடத்தில் குவிந்த தாகவும், சம்பந்தப்பட்ட இடத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்பாடு ஏதும் இல்லாத நிலையில் நீண்ட நேரம் நின்றுகொண்டே காத்திருந்ததாகவும், இரவு 7 மணிக்கு மேல் அவர் வந்த நேரத்தில் கூட்டம் அதிகமாகச் சேர்ந்து நெரிசல் ஏற்பட்டு சமாளிக்க முடியாமல் கூட்டத்தில் சிக்கித் தவித்த சோகத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொருவரும் தெரிவித்தனர்.  காலை முதல் இரவு வரை உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் நெடுநேரம் காத்திருந்ததே இக்கொடூரச் சம்பவத்திற்கு முக்கியமான காரணமாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கண் முன்னே நடந்த சோகம்

கரூர் கூட்டத்தில் பேசுவதற்கு வந்த விஜய் இரவு 7 மணிக்கு மேல் தனது உரையைத் துவக்கி னார். துவக்கிய நேரத்திலேயே நெரிசல் ஏற்பட்டு மக்கள் மயங்கி விழுவதும், “தண்ணீர், தண்ணீர்” என கதறுவதும், விஜய் அவர்களே தண்ணீர் பாட்டிலை மேலேயிருந்து மக்கள் மத்தியில் வீசுவதும், அதைப் பிடிக்க மக்கள் அடித்து மோதுவதும், அதனால் மேலும் நெரிசல் அதிகரிப்பதையும் தொலைக்காட்சி களில் பார்க்க முடிந்தது.  அவர் கண்முன்னாலேயே அவரது ஆதரவாளர்கள் மயங்கி விழுந்தார்கள்; ஆம்புலன்சில் அவர்களை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதும், அடுத்தடுத்து மக்கள் விழுவதுமாக மரண ஓலம் அங்கே எழுந்தது.  இந்நிலையில் விஜய் தனது பேச்சை அரைகுறை யாக முடித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து  கிளம்பிவிட்டார். கரூரை விட்டு வெளியே வரும்போதே சாவு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுள்ளது என்ற பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்க ளின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை க்குக் கொண்டு செல்லப்படும் காட்சிகள் தொலைக் காட்சிகளில் இடம்பெற்றன.

வீட்டிற்கு பறந்த விஜய்

தங்களது ஆதரவாளர்கள் பெரும் நெருக்கடியில் மாட்டி உயிரிழந்து, உயிருக்குப் போராடும் நிலையில்  விஜய் என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றிருக்க வேண்டும். பரிதவிக்கும் மக்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். உறவுகளை இழந்த குடும்பங்களின் துயரத்தில் பங்கேற்றிருக்க வேண்டும்.  ஆனால், விஜய் அவர்களோ அவரது முக்கிய நிர்வாகிகளோ மருத்துவமனைக்குச் செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவிக்க வில்லை. அவர்களது துயரத்தில் பங்கேற்கவில்லை. குறைந்தபட்ச முதலுதவி கூட செய்யவில்லை. மாறாக  அதிரடியாகப் பறந்து சென்னை வீட்டை அடைந்து விட்டார். அடுத்த பல மணி நேரங்கள் தவெக தலை வர்கள் அனைவரும் தொடர்பு எல்லைக்கு வெளி யிலேயே இருந்துள்ளார்கள்.

60 மணி நேரம் கழித்து  வெளியான காணொலி

சம்பவம் நடைபெற்று 60 மணி நேரம் கழித்து விஜய் ஒரு காணொலி வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலி அவசரகதியில் வெளியிட்டதாகத் தோன்ற வில்லை. ஆழ சிந்தித்துத் தயாரிக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.  ஆனால், அக்காணொலியில் கரூரில் தான் பேசிய கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்குத் தாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வதாகவோ, அங்கு ஏற்பாடு களில் ஏற்பட்ட குறைபாடுகளுக்குச் சிறு வருத்தம் கூடத் தெரிவிப்பதையோ காண முடியவில்லை.  மேலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விஜய் நீண்ட நேரம் தாமதமாக வந்தது இச்சம்பவத்திற்கு முக்கியக் காரணம் என தெரிவித்துள்ளார்கள்.

யாருடைய பொறுப்பு?

தீர்மானித்ததை விட நீண்ட நேரம் தாமதமாக வந்தது தங்களது குற்றமில்லையா? கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு இருக்கை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யாதது தங்களது கட்சி நிர்வாகிகளின் தவறில்லையா? நிகழ்ச்சியில் நீங்கள் பேசும்போது தங்களைக் காணும் ஆர்வத்தில் தொண்டர்கள் தள்ளுமுள்ளு செய்து நெருக்கடியை உருவாக்கியபோது அதைக் கட்டுப்படுத்த உங்கள் நிர்வாகிகள் முயற்சிக்கவில்லை. அதற்கான தொண்டர்கள் ஏற்பாடு எதுவும் இல்லை.  இத்தகைய குளறுபடிகள் அனைத்திற்கும் தாங்களும், தங்களது கட்சியும் பொறுப்பேற்க வேண்டாமா?  இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் வசதியாக விஜய் புறந்தள்ளிவிட்டார்.

பொருத்தமற்ற விளக்கம்

சம்பவம் நடந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவிக்க மறுத்தது ஏன் என்ப தற்கான அவரது விளக்கம் பொருத்தமற்றதுடன் உள் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. கரூரில் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றால் மேலும் அசம்பாவிதம் நடக்கும் என்பதால் அதைத் தவிர்க்கவே திரும்பிவிட்டதாகக் கூறியுள்ளார்.  உண்மையில் நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்தது உள்ளிட்ட பல குறைபாடுகள், அதனால் ஏற்பட்ட குளறு படிகள் போன்ற காரணங்கள் அவரது மனதை உறுத்தியிருக்க வேண்டும். குற்ற உணர்வால் உறுத்தப்பட்டதன் விளைவாகவே அவர் சென்னை திரும்பியதாகக் கருத வேண்டியுள்ளது.

கரூரில் மட்டுமா?

இந்தச் சம்பவம் கரூரில் மட்டும் ஏன் நடந்தது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஆனால், உண்மையில் விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல் ஆகிய இடங்களில் விஜய் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் நெரிசல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  பல்லாயிரக்கணக்கான நாற்காலிகள் உடைக்கப் பட்டதுடன் அமைக்கப்பட்ட இரும்பு வேலிகள் அனைத்தும் நாசப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பொ துச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இது யாரு டைய சதியாலும் நடந்ததாக தவெக இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. தங்களது தொண்டர்கள்தான் இவைகளைச் செய்ததற்கான வீடியோ பதிவுகளும் பகிரப்படுகின்றன. மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற இதேபோன்ற சம்பவங்களே கரூர் சம்பவத்திற்கும் அடிப்படையான காரணங்களாக அமைந்துள்ளன.

சுயவிமர்சனமின்மையும் பழிசுமத்தலும்

தங்கள் நிகழ்ச்சிகளில் ஏற்படும் இந்தக் குறை களைச் சுயவிமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொள் வதும், அதை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கான முயற்சி களில் ஈடுபடுவதுமே நேர்மையான அரசியல் தலை வருக்கு அழகாகும். ஆனால், இவைகளை ஏற்க மறுப்ப துடன் பழிகளை அடுத்தவர்மீது சுமத்துவதிலேயே தவெக குறியாக உள்ளதைக் காண முடிகிறது.  குறிப்பாக, சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே  சிபிஐ விசாரணை வேண்டுமென தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ விசாரணை நடைபெற்றால் மொத்தச் சம்ப வத்திற்கும் தமிழக அரசே காரணம் என மடைமாற்றி விடுவதற்கு உதவி செய்யும் என்ற நோக்கிலேயே மேற்கண்ட விசாரணை கோரப்படுவதாகத் தோன்று கிறது. இதே குரலைப் பாஜகவும், அதிமுகவும் ஒலிப்ப தன் மூலம் இதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

உள்நோக்கம் கொண்ட சவால்

இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்து தங்களது நிர்வாகிகளைக் கைது செய்வதை அரசு பழி வாங்குவதாகவும், அவர்களை விட்டுவிட்டு என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என சவால் விடும் நோக்கில் விஜய் பேசியுள்ளார்.  நாட்டையே உலுக்கிய இப்படிப்பட்ட சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்வது சட்டப்படியான கடமையா கும். இதை எந்த அரசும் செய்யாமல் இருக்க முடி யாது. மேலும், இத்தகைய சம்பவங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்மீது வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்வதும் வழக்கமான ஒன்றாகும். இதைப் பழி வாங்குவதாக இட்டுக்கட்டிச் சொல்வதும், தன்னைக் கைது செய்ய வேண்டுமென சவால் விடும் நோக்கில் பேசுவதும் உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது.

அரசியல் தலைவர்களின் ஆறுதல்

மேலும், சம்பவம் நடைபெற்றவுடன் இரவோடு இரவாக தமிழக முதலமைச்சர் கரூர் சென்று பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் முறை யான சிகிச்சை மற்றும் இறந்தவர்கள், காயமடைந்த வர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கரூர் சென்று மக்களது துயரத்தில் பங்கேற்றுள்ளனர்.  3.10.2025 அன்று சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி தலைமையில் குழு சென்று பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவுள்ளது.  இத்தகைய தலைவர்களுக்கு நன்றி சொல்வதற்கு மாறாக, தனக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரி வித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அதாவது, தனக்கு ஆதர வாகக் குரலெழுப்பியுள்ள பாஜக, அதிமுகத் தலைவர்க ளுக்கு நன்றி தெரிவிப்பதன் உள்நோக்கம் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

அரசியல் ஆதாயம் தேடும் பாஜக

நடந்த விபத்து குறித்து மனித நேயத்தோடு இந்தப் பிரச்சனையை அணுகுவதற்கு மாறாக, பாஜக - அதிமுக அரசியல் ஆதாய நோக்கோடு தமிழக அரசுக்கு எதிராகச் சிபிஐ விசாரணை வேண்டுமென கோரி வருகின்றன. பாஜக தனது அரசியல் எதிரி என முழங்கி வந்த விஜய்யைத் தனது வலைக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.  ஆனால், பாஜகவோடு யார் அணி சேர்ந்தாலும் அவர்களுக்குப் படுதோல்வியைப் பரிசாக அளிப்பதே தமிழக மக்களின் அழுத்தமான அரசியல் சிந்தனையா கும் என்பது ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

விசாரணையும் நடவடிக்கையும்

கரூர் சம்பவம் குறித்து தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் கமிசன் அமைத்துள்ளது. விசாரணைக் கமிசன் தாமதமில்லா மல் விசாரணையை முடித்து அறிக்கையை அளித்திட வேண்டும். இவ்விசாரணையில் மொத்தச் சம்பவத்தி ற்குப் பொறுப்பானவர்கள் யார், யார் என்பதோடு காவல் துறை தரப்பில் ஏதும் தவறுகள் இருப்பின் அதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.  விசாரணைக்குழுவின் அறிக்கையின்மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பவத்திற்குக் காரணமானவர்கள் சட்டப்படியான தண்டனைக்கு உட்படுத்திட வேண்டும்.